Blogger Widgets

என் இயற்பியலும் இருவரின் வேதியியலும்!


சூரியனாய் ஒளிவீசும்
அவள் முகம்!

உடலாகிய குடும்பத்தில்
சிவப்புச் செவ்வாய்
அவள் உதடு!

ஒளியைப் பிரதிபலிக்கும்
இதமான திங்கள்
காதலைப் பிரதிபலிக்கும்
அவள் கண்கள்!

ஞாயிறு உடன்
ஒளிவீச முயன்று
தோற்கும் புதனாய்
அவள் முகத்துடன்
தோற்கும் பொட்டு!

மையத்தைச் சுற்றும்
இரட்டை நட்சத்திரங்களாய்,
அவளையே சுற்றும்
முகத்தின் மையத்தில்
எனது கண்கள்!

ஹீலியமாய் உருவெடுக்கும்
ஹைட்ரஜன் போல்
அன்பினால் உருவெடுக்கும்
எனது காதல்!

பூமியின் தேவதையுடன்
பேசாமல் பேசிக்கொள்ளும்
எனது மனது!

அவள் - நான்
நான் - அவள்!


6 COMMENTS:

  1. sir!
    oru vethiyal maataram-
    unakkullum!


    ungal ezhuthaal...

    ReplyDelete
  2. இயற்பியல், வேதியல், வானவியல் எல்லாம் கத்துகிட்டு எப்டியெல்லாம் உபயோக படுத்தறீங்க?!! கொஞ்சம் ஓவர் ஆ தான் போயிட்டிருக்கு.. :)

    ReplyDelete
    Replies
    1. எல்லா இயலும் படிச்ச நான் பெண்ணியல் மட்டும் படிக்காம போய்ட்டன்! அதோட விளைவு இந்த தளம் :( ஓவர் ஆ போகிறது இ ஆகும்போது சரியாயிடும்!

      Delete
  3. அந்த 'இ' இல்லறம் என்பதாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஆகா.. கவிதை ரொம்ப அருமை!!
    தொடருங்கள்!

    ReplyDelete
  5. ரொம்ப நாளா உங்க பதிவுகளைத் தவறவிட்டிருக்கிறேனோ...அதுதான் இந்தக் கவிதையும்கூட !

    ReplyDelete