தட்டுப்பட்டது
நானெனில் அச்சம் தவீர்; பத்திரமாய் இருக்கு உன் மனது என் உயிர்கூட்டிற்குள்!
அச்சம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை; மிச்சமாய் என்னுள் ஏதும் இல்லை; உன்னைத்தவிர!
நிலாப்பெண்ணின் மொத்தமும் நானானேன்! எந்தன் சித்தம் முழுதும் நீயானாய்!
எப்படி
என்னுள் நுழைந்தாயோ அப்படியே என்னுள் நிறைந்தாய்!
வார்த்தைக்குள்
என் அன்பு அடங்கிவிடும் எனில் வானம் மூன்றெழுத்தில் முடிந்து விடும்.
உன்
அன்பு கண்டு உறைந்துபோய் நிற்கிறேன் - வார்த்தைகளின்றி!
வார்த்தையில்
என்ன இருக்கு? உன் பார்வையில்
மொத்தம் அன்பும் வழிந்திடும் போது!
உன்னில்
உறைந்துபோனேன் நான்! பிறகு வார்த்தையெங்கே? பார்வையெங்கே?