துப்பாக்கி - கோட்டை விடப்பட்ட லாஜிக்குகள்!

  துப்பாக்கி படம் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையைக் கிளப்புவது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே துப்பாக்கி பட விமர்சனம் கொடுத்திருந்தோம். இப்போ அதில் கோட்டைவிடப்பட்ட லாஜிக்குகளைப் பார்ப்போம்.


  • விஜய் வீட்டிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியைப்பற்றி தன் 12 நண்பர்களுடன் விவரிக்கும் விஜய் தமிழில் விவரிக்கிறார். வட இந்தியர் மற்றும் சிங்குகளுக்கெல்லாம் எப்படித் தமிழ் தெரியும்? (வேறு இடங்களில் ஆங்கிலம்/ஹிந்தி கொடுத்துததுபோலவே இங்கும் கொடுத்திருக்கலாம்)


  • படத்தின் முக்கிய இடமான விஜயும் அவரது 12 நண்பர்களும் தீவிரவாதிகளைக் கொல்ல பிரிவது அப்பட்டமான லாஜிக் மீறல். விஜயின் கூற்றுப்படி ஒருவன் இன்னொருவனை சந்திப்பான் அப்போது 12 பேர் 6,6 பேராக பிரிந்து இருவரையும் பின்தொடர வேண்டும். (1:12) பிறகு (1:6) (1:6) பின் (1:3) (1:3) (1:3)(1:3) இதற்குமேல் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் எப்படி தொடர முடியும்? அப்படித் தொடரும்போது ஒருவர் ஒரு தீவிரவாதியையும், மற்ற இரண்டுபேர் இன்னொரு தீவிரவாதியையும் தொடர்கிறார்கள். 2 பேர் தொடரும் தீவிரவாதி யாரையும் சந்திக்காமல் ஒருவர் மட்டுமே தொடரும் அந்த ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதியைச் சந்தித்தால் பின் தொடர ஆளில்லையே?மொத்தம் 4 குரூப்பில் எப்படியும் இது மாறிப்போய்விடுமே? (நமக்கு கடைசியாக 1:1 வர வேண்டும். 8 இடத்தில் பாம் வைப்பதாகக் கொண்டிருந்தால் மட்டுமே இது சரியாக வரும்)



ஏ ஜோக்ஸ் தத்துவங்கள் 4

  • நான் என்ன கலர் சேலை கட்டிக்கொண்டு வரட்டும்என்றதற்கு "எனக்கு நிறமில்லாத சேலைதான் பிடிக்கும்" என்றால் அடிக்க வருகிறாள் தோழி!

  • நாம ரெண்டுபேரும் ஏன் முதலிரவு மாதிரியே ரெண்டாவது இரவுமூன்றாவது இரவு... என கொண்டாடிக்கொண்டே இருக்கக்கூடாது?
 
  • பேச்சிலராய் இருப்பது சேமிப்பு - நிறைய விஷயங்களில்!
 
  • பூனம் பாண்டே என்ற பெயரை பூனம் துண்டே என மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கிறேன்! - அதுலதானே அதிக நேரம் இருக்குது!          
 


கல்விமுறை – உருவாகும் எந்திரங்கள்! மனதைத் திற!

  எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்தியா மேப் வரைந்துகொண்டிருந்தார். அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வர்ணம் அடிக்க வேண்டும். எப்படிப் பிரிப்பது என்று கேட்டார்.

“மொத்த நீளம் எவ்வளவு என்று அள” என்றேன்.

“30 CM”

“30 CM-ல் பாதி எவ்வளவு?

திரு திருவென முழித்து “20 CM”

“நல்லா யோசிச்சு சொல்லு”

8 CM அண்ணா” என்றது.

நீயே அதை வரைந்துகொள் என்று கிளம்பிவிட்டேன்.


  இத்தனைக்கும் அந்தச்சிறுமி பள்ளியில் 4-வது ரேங். 120 பேர் படிக்கும் எட்டாம் வகுப்பில் 4-வது ரேங் எடுத்த ஒருவருக்கு 30ல் பாதி எவ்வளவு என்று தெரியவில்லை என்றால் மற்ற 116 பேரின் நிலைமை? எந்திரம் போல் புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து பரீட்சைத் தாளில் கிறுக்கி மார்க் வாங்குவதே கல்வியா?



துப்பாக்கி சினிமா விமர்சனம்

  இது விஜய் படமா? படம் தொடங்கின உடனே நமக்கு இந்த சந்தேகம் வந்திடும். ஒரு ஓபனிங் சாங் இல்லை, யார் அடுத்த ரஜினின்னு தீர்மானிக்கிற பஞ்ச் டையலாக் இல்லை, வழக்கமா வந்து செத்துப்போற தங்கச்சி சென்டிமென்ட் இல்லை.

   படத்தின் பிளஸ் விஜயின் நடிப்பு, போக்கிரிக்குப் பிறகு நல்ல ஆக்சன் கதையுடன் ஒரு படம். மிகப்பெரிய பிளஸ் பரபரப்பான திரைக்கதையும், ஒளிப்பதிவும்தான்.



மொக்கை தத்துவங்கள்

  • உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!
 
  • பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!
 
  • எல்லாமே காதல்தான்னா என் நண்பன் ஒரு பொண்ண விரும்புகிறான்; அவ புருஷன் அதை கள்ளக்காதல்னு சொல்லுறான்! அவனுக்கு தெரியாது போல...
 
  • நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும் :-)

  • பஞ்சு போல் இருப்பதால்தானோ பஞ்சாபி என்ற பெயர் வந்திருக்கும்?
 


நேற்று விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி

  வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்' என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.
ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி'யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.
ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.
உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!' என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.