Blogger Widgets

துப்பாக்கி சினிமா விமர்சனம்

  இது விஜய் படமா? படம் தொடங்கின உடனே நமக்கு இந்த சந்தேகம் வந்திடும். ஒரு ஓபனிங் சாங் இல்லை, யார் அடுத்த ரஜினின்னு தீர்மானிக்கிற பஞ்ச் டையலாக் இல்லை, வழக்கமா வந்து செத்துப்போற தங்கச்சி சென்டிமென்ட் இல்லை.

   படத்தின் பிளஸ் விஜயின் நடிப்பு, போக்கிரிக்குப் பிறகு நல்ல ஆக்சன் கதையுடன் ஒரு படம். மிகப்பெரிய பிளஸ் பரபரப்பான திரைக்கதையும், ஒளிப்பதிவும்தான்.



 கதை:

  விடுமுறையில் மும்பையில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்த மிலிட்டரி ஆபீசர் விஜய் எதிர்பாராவிதமாய் பேருந்தில் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதியைப் பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார். அவன் தப்பித்துப்போகும்போது பிடித்து தன் வீட்டின் கபோர்டில் ஒழித்து வைக்கிறார். அவன்மூலம் தீவிரவாதிகள் மும்பையின் 12 இடங்களில் வெடிகுண்டு வைப்பதை அறிந்துகொண்டு, வெடிகுண்டு வைக்கும் 12 பேரையும் தன் சக ராணுவ 12 டீம்மேட்கள் பின் தொடர வைத்து போட்டுத்தள்ளுகின்றனர்.

  திட்டம் தோல்வி அடைந்ததால் பழிவாங்க தீவிரவாதிகள் 12 சக டீம்மேட்களின் வீடுகளிலிருந்து 5 பெண்களை கடத்துகின்றனர். ஒரு பெண்ணிற்கு பதிலாக தன் தங்கையை அனுப்பி மோப்பநாய் மூலம் அவர்களைக் கண்டுபிடித்து அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார். மீதமுள்ள தீவிரவாதிகளை அழிக்க ஒரு சூசைட்பாமராக தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு போகிறார். தீவிரவாதிகளை அழித்தாரா? என்பதுதான் கதை.

  தமிழ் சினிமால லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாதுபோல, இவ்ளோ நடந்தும், இத்தனை தீவிரவாதிகளைக் கொன்றும் ஒரு ராணுவ அதிகாரி மேலிடத்தில் ரிப்போர்ட் பண்ணவேண்டிய அவசியமில்லை போலும்.


வசனங்கள்:

(பெண் பார்க்க போகும்போது விஜயின் அம்மா) டேய் வயசாகிட்டே போகுது, மேரேஜ தள்ளிப்போடாதே
ஒரு நாள்ல எவ்ளோ வயசாகிடும்மா? அதே வயசுதான் இருக்கும். நாளைக்குப் போலாம்.


"ஆமா இப்போ நீ எதுக்கு சிரிச்ச?
அவளுக்கு உன்னைப் பிடிக்கலையே அதான்.
இதுல சிரிக்க என்ன இருக்கு?
ஒரு மேட்டருக்கே உன்னை பிடிக்கலையே?"

"ஆயிரம்பேரை கொல்லுற தீவிரவாதியே சாகத் தயாரா இருக்கும்போது நாம ஏன் உயிர்த்தியாகம் பண்ணக்கூடாது?"

"மிலிட்டரில மட்டும்தான் டியூட்டிய கரெக்டா செஞ்சா சீக்கிரம் ரிடையர்மன்ட் கிடைச்சிடும். (அடிபட்டுவிடும்)"


  வழக்கமா விஜய் படங்களில் யாரும் விஜயை ஓட்டமாட்டாங்க ஆனா இந்தப்படத்தில் தலைகீழ். ஹோட்டலில் ஜெயராமின் காமெடி அருமை. பாடல்களில் "கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தும்", "அண்டார்டிகா" ஆகியவை அருமை. இந்த வருடத்தின் சிறந்த கமர்சியல் ஹிட் படமாய் இருக்கும்.

                    துப்பாக்கி பவர்ஃபுல் தோட்டாக்களுடன் - 6.5 / 10

டிஸ்கி 1 : இந்தப் படத்திற்கும் மகேஷ் பாபுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
டிஸ்கி 2 : FANS பச்சத்தண்ணி கிடைச்சாலே பாயசம் சாப்பிட்ட மாதிரி சொல்லுவாங்க, இப்ப பாயாசமே கிடைச்சிருக்கு, இனி என்னென்ன கேட்க வேண்டியிருக்குமோ?


5 COMMENTS:

  1. செம ஹிட்...

    நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  2. நண்பனுக்கு அடுத்து துப்பாக்கி இன்னும் ஒரு flop படம் தான் விஜய்க்கு. மாயாஜால் திரையரங்கில் காட்சிகளை முதல் வாரத்திலேயே குறைத்துவிட்டார்கள். இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகளாய் சித்தரித்து கெட்ட பெயர் சம்பாதித்தது தான் மிச்சம்.

    படம் ஒரு மொக்கை. வில்லன் யார் என்று 20 நிமிடத்திலேயே சொல்லிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்துக்கு துரத்தும் படலம் தான் கதை. இதை விட பல மடங்கு சிறப்பாக வால்டர் வெற்றிவேல், புலன் விசாரணை, குருதிப்புனல் திரைக்கதை அமைந்திருக்கும். முருகதாசுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது.

    ReplyDelete
  3. Marana mass BLOCKBUSTER of the year

    ReplyDelete
  4. நான் இது வரை 18 தடவை பார்த்திருக்கேன்.. செம படம்

    ReplyDelete