அசிங்கப்பட்டுட்டாண்டா ஆட்டோக்காரன்

FACEBOOK MESSENGER DAY 1

வாணி இங்க வா நீ!

என்னாச்சு எங்க வர?

இல்ல உனக்கு படிக்க தெரியுமான்னு டெஸ்ட் பண்ணினேன், தெரியுது. சரி நீ போய் உன் வேலையைப் பாரு! 

அடப்பாவி.....



FACEBOOK MESSENGER DAY 2


வாணி இங்க வராதே நீ!

ஓகே. போஸ்


லூசா நீயி - வரக்கூடாதுன்னா இங்க வந்து கமெண்ட் பண்ணுற??? போய் டாக்டர பார்த்து கண்ணை டெஸ்ட் பண்ணு, ஓகே?

அவ்வ்வ்வ்வ்......




விஸ்வரூபம் – நல்லவேளை எனக்கு மதம்பிடிக்கவில்லை!

  காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில் என்ன இருக்கிறதென்று தெரியாது, ஆனாலும் எதிர்ப்போம்/ஆதரிப்போம். இதை ஒரு இந்து/முஸ்லிம் பிரச்சினையாக மாற்றியதில்தான் அரசியல்வாதிகளின் சாதுர்த்தியம் ஒழிந்திருக்கிறது.

  இதைவிட ஒரு காமெடி என்னவென்றால் ஒருவர் இப்படிக் கமெண்ட் எழுதினார். “இந்தப்படத்தில் ஐயர் அசைவம் சாப்பிடுவது போல் காட்டியிருக்கிரார்கள் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும்” இதற்கு எங்கே போய்முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.

  இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் சொன்ன உடனே அரசு பட வெளியீட்டை இரண்டுவாரம் தள்ளிவைத்துவிட்டது. தொலைக்காட்சி உரிமைதான் விஜய் டி.விக்குப் போய்விட்டதே? இப்படி வெளியீட்டை தமிழக அரசு தடை செய்ததுதான் இன்றைய இத்தனை பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரம். 



ஆஸ்திரேலிய பழங்குடியினர் தமிழர்கள்?

 இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! கட்டுரையை படித்துவிட்டு வரவும்!


 இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது.

 ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்.


ம்ம்ம்ம்ம்மா...........


செல்லம் எனக்கு இங்கே பீல் பண்றமாதிரி ஒரு முத்தம் வேணும்! ஒன்னே ஒன்னு கொடேன்?

நான் மாட்டேன்!

ப்ளீஸ்! ப்ளீஸ்! என் கன்னம் எல்லாம் நீ இல்லாம வறண்டுபோய் கிடக்குது, ப்ளீஸ் ஒன்னே ஒன்னு

ம்மா

பீலே வரலையே?

ம்ம்ம்மா

ம்ஹூம் பத்தலை

ம்ம்மா.. ம்ம்மா..


கார்த்தி vs வெங்காயம்

  • பருத்தி வீரன் - தி பெஸ்ட்
  • ஆயிரத்தில் ஒருவன் - பெஸ்ட்
  • பையா - சூப்பர்
  • நான் மகான் அல்ல - சூப்பர்
  • சிறுத்தை - சங்கு
  • சகுனி - கொடூரம்
  • அலெக்ஸ்பாண்டியன் - மஹா கொடூரம்

   இப்பொழுது ஒரு முழுவெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பருத்திவீரனிலிருந்து ஒவ்வொரு படத்திற்கும் ஒரு தோலை உரிக்கவும், இப்போ என்ன மிச்சம் இருக்கிறது???



பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

 மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு உதாரணம் பொங்கல். பொங்கல் என்பதை இன்னும் மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே சாட்சி.

 சங்ககாலம் முதலே கி.மு.200ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு.

பொங்கல் தோன்றிய விதம் - தைந்நீராடல்

பொங்கலுக்கெல்லாம் மூதாதை விழா எனப்படுது தைந்நீராடல். சங்ககாலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல் (தை நீர் தண்மை உடையது. இங்கு தண்மை என்ற சொல்லிற்கு வெதுவெதுப்பு என்று பொருள்) எனக் குறிப்பிடுகின்றன.
 கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவையிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்)


பொங்கல் என்றால் என்ன?

தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை மூன்று நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. போகி : பொங்கலிற்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் தமது பழைய ஆடைகளை எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். 

2. சூரியப் பொங்கல் : சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்.

3. மாட்டுப் பொங்கல் : விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகளுற்கும், பறவைகளுக்கும் வழங்கப்படும்


நன்றி! நன்றி! நன்றி!

காதலிக்கும் நன்றி!
காதலுக்கும் நன்றி!
காதலன் என்னைக்
கவிஞனாக்கியதற்கு....



2012 டாப் 10 தமிழ் திரைப்படங்கள்!

10. காதலில் சொதப்புவது எப்படி?

  காதல்ல சொதப்புவது எப்படின்னு நம்மல்ல எல்லோருக்குமே தெரியும். குறைந்தது 3/4 பேரிடமாவது சொதப்பி இருப்போம். அந்த அனுபவத்தையெல்லாம் சேர்த்து படமாய்க்கொடுத்தால் படம் ஓடாமலா இருக்கும்?



9. வழக்கு எண் 18/9

  பார்த்த எல்லாரும் பாராட்டியும் யாருமே தியேட்டருக்குப் படம் பார்க்க போகலை! அதனால படத்தைத் தியேட்டரைவிட்டு ஓட்டிவிட்டார்கள். கிளைமாக்ஸ்ல ஒரு குத்துப்பாட்டு வையுங்கையான்னா கேட்கிராங்களா? – தெலுகு ரசிகன்