FAKE - அட எல்லாமே டூப்ளிகேட்

  இது எல்லாமே டூப்ளிகேட் அப்படின்னா எதை உண்மைன்னு நம்புறது ? நீங்கள் வாங்கும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை போலி என்று உங்களுக்குத் தெரியுமா? போலி பொருட்கள் உண்மையான பொருளைவிட நன்றாக பேக் செய்யப்பட்டு வரும் என்பது தெரியுமா? குழந்தைகளுக்கு இந்தப் பொருட்களை உபயோகப்படுத்துவது தீங்கானது என்று தெரியுமா?

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தும் FAKE PRODUCTS.

பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம் - DUBAI GLOBAL VILLAGE,

பொருளின் உண்மைத்தன்மையை அறிய துபாய் நண்பர்கள் www.consumerrights.ae இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்




அசிங்கப்பட்டுட்டாண்டா ஆட்டோக்காரன்

FACEBOOK MESSENGER DAY 1

வாணி இங்க வா நீ!

என்னாச்சு எங்க வர?

இல்ல உனக்கு படிக்க தெரியுமான்னு டெஸ்ட் பண்ணினேன், தெரியுது. சரி நீ போய் உன் வேலையைப் பாரு! 

அடப்பாவி.....



FACEBOOK MESSENGER DAY 2


வாணி இங்க வராதே நீ!

ஓகே. போஸ்


லூசா நீயி - வரக்கூடாதுன்னா இங்க வந்து கமெண்ட் பண்ணுற??? போய் டாக்டர பார்த்து கண்ணை டெஸ்ட் பண்ணு, ஓகே?

அவ்வ்வ்வ்வ்......




ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

  நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கலாம், தெரிந்த சிலர் மட்டும்தான் இதையெல்லாம் உபயோக்கின்றனர். எனவே நாட்டிற்கும், வீட்டிற்கும் உபயோகப்படும்வகையில் அனைத்து ஆண்களையும் பிடித்து ஜெயிலில் போட இதோ வழிகள். பிடிங்க சார் அவனை பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.! 


  • "என்னை கனவில ராக்கிங் பண்ணினான்"னு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கேஸ் போடலாம்.

  • "என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணினான்"னு கேஸ் போடலாம். நான் ஒயிட்டா இருக்கும்போது இவன் எப்படி என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணலாம்னு கேட்கலாம்

  • புது நம்பர்ல அவன் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு திருப்பி அவன் கூப்பிட்டா "எனக்கு அடிக்கடி கால் பண்ணுறான்"னு கேஸ் போடலாம். நீங்க பண்ற மிஸ்டு கால் ரெகார்ட் ஆகாது ஆனா அவன் கூப்பிட்டா ரெகார்ட் பண்ணிக்கலாமே?

  • "பேசாம இருக்கிறான்"னு கேஸ் போடலாம். நான் எவ்வளவு பேசியும், ட்விட்டர் FBல மென்சன் பண்ணியும் அவன் பேசவே இல்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்தேன்னு கேஸ் போடலாம்.

  • 4 வருசத்திற்கு முன்னாடி என்கூட சண்டை போட்டான்னு கேஸ் போடலாம். சண்டையின்போது மிகவும் வக்கிரமமா, ஆபாசமா என்னைப் பார்த்து "ஹா ஹா"என்று சிரித்தான். எனவே இந்த மனிதத்தன்மையற்ற செயலைக்கண்டித்து ஆபாச தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.


டாப் 10 பதிவுகள்! A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்


  நிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில!  


நகைச்சுவைகள் TOP 5:



  
நகைச்சுவை கதைகள் TOP 5:




தொழில்நுட்பம் TOP 5 




கலாய்த்தல் TOP 5 :



தமிழ் எழுத படிக்க டைப் செய்ய - Tamil Typing software download!

  நிறைய நண்பர்களுக்கு தமிழில் எழுத/டைப் செய்ய எந்த மென்பொருள் உபயோகிப்பது என்பது குழப்பமாக இருக்கலாம்! அதைத் தீர்க்கவே இந்த பதிவு!

 இவைகளை உபயோகித்துப் பார்த்து உங்களுக்கு வேண்டியதை நிறுவிக்கொள்ளலாம்!



1. என்.எச்.எம் எழுதி:

விண்டோஸ் இயங்குதளத்தில் XP, Vista, Windows 7 செயல்படக்கூடியது. டவுன்லோட் செய்து Alt+0 அல்லது Alt+1 அல்லது Alt+2 அல்லது Alt+3 அல்லது Alt+4 அல்லது Alt+5 ஐ அழுத்தி எந்த ஒரு இடத்திலும் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். நகல் (Copy/Paste) செய்து ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. நிறுவிய பின்ன ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறித் தட்டச்சு செய்யலாம். இது பல ( applications : MS office, notepad, IE explorers and so on) பிரயோகங்களுடன் ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.

  டைப் செய்ய ஒலிப்பு முறையை (Alt+2) பயன்படுத்துவதாயின் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்


கூகுள் ரோபோட் கார் - டிரைவர் இல்லாமல் தானே செல்லும்! Self-Driving Car by Google

  தேடல் உலகின் ஜாம்பவான் கூகுள் சமீப காலமாக ஓர் அரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது – டிரைவர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோட் கார்!
Self Driving Car by Google
  கடந்த மே மாதம் அமெரிக்காவில், கூகுள் ரோபோட் காருக்கான லைசென்ஸ் பெற்று, உலகின் முதல் ரோபோட் கார் என்ற பெருமையைப் பெற்றது.

  இந்த கார் Google Street View தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, ராடார் சென்சார் உதவியுடன் தனிப்பட்ட சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது! இதில் நீங்கள் எந்த ஒரு பட்டனைக்கூட தொட வேண்டியதில்லை. ஏறும் இடம் முதல் இறங்கும் இடம் வரை வேடிக்கை பார்ப்பது மட்டுமே உங்கள் வேலை. மற்ற எல்லாவற்றையும் சாப்ட்வேர் பார்த்துக்கொள்ளும்.

  தற்போது வணிக முறையில் வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வணிக 
முறையில் நமக்கு கிடைத்துவிடும்!


ட்விட்டர் உபயோகிப்பது எப்படி? எளிமையான விளக்கங்கள்!

  ட்விட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் காட்டிலும் எளிதானது. அதே சமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அது ட்விட்டரால் மட்டுமே முடியும்! வரும் காலங்களில் தொலைக்காட்சியைவிட அதிகமான மக்கள் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இடமாக ட்விட்டர் மாற இருக்கிறது.

  இங்கு செய்தியாளர்கள் ட்விட்டர் உபயோகிப்பாளர்கள்தான். புரியவில்லையா? உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டில் நிலநடுக்கம் உணருகிறீர்கள்! அதை ட்விட்டரில் தெரிவிக்கும்போது, உங்களைப் பின்தொடருபவர்கள் ரீட்வீட் செய்யும்போது அவர்களைப்பின் தொடரும் நண்பர்களுக்கு நொடியில் செய்தி சென்று சேரும்! இப்படி ஒருசில வினாடிகளில் உங்கள் செய்தி உலகம் முழுவதும் தெரிந்துவிடும். ட்விட்டரை விளக்கும் வகையில் புதிதாய் ட்விட்டருக்கு வரும் அன்பர்களுக்கான பதிவு இது!

  மிகமிக முக்கியமான விஷயம் ட்விட்டர் மிகவும் பாதுகாப்பானது. பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய விவரங்களைத் தவறாக உபயோகிக்க வாய்ப்பு மிக அதிகம். புகைப்படம் போன்றவற்றை தவறான செயல்களுக்கு உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் ட்விட்டரில் நீங்கள் உங்களைப்பற்றிய விவரங்களை நீங்களாகவே வெளியிடாதவரை யாருக்கும் தெரியாது.

  ட்விட்டர் எனப்படுவது 140 எழுத்துக்கள் மட்டுமே எழுத முடிந்த ஒரு குறுஞ்சேவை SMS போன்றது. புகைப்படம், வீடியோ போன்றவை EXTERNAL LINKஆக லோட் ஆகும்! அதாவது அந்த லிங்கையோ அல்லது செய்தியையோ கிளிக் செய்து புகைப்படத்தைக் காணலாம்! முதலில் http://twitter.com இணையதளத்திற்கு சென்று ஒரு free account திறக்கவும். நீங்கள் லாக்-இன் செய்தவுடனே இதுபோன்ற ஒரு முகப்புப்பக்கம் தெரியும்!
இதை நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறோம்


இணையதளம் – காப்பி அடிப்பது எப்படி? அதைக் கண்டுபிடிப்பது எப்படி?

  பல இணையதளங்களில் RIGHT CLICK உபயோகப்படுத்த முடியாததாய் அல்லது COPY, PASTE உபயோகிக்க முடியாததாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த இணையதளங்களில் காப்பி பண்ணுவது எப்படி?

வழி 1

  வேண்டிய தளத்தின் பக்கத்தை FILE -> SAVE AS -> WEB PAGE COMPLETE ஆக சேமித்துக்கொள்ளவும் இப்போது அந்த சேமிக்கப்பட்ட பைலை திறந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!

வழி 2

  வேண்டிய தளத்தில் CTRL+P பட்டனை அழுத்தி PRINT MODE செல்லவும், அங்கு தோன்றும் விண்டோவில் PRINT TO PDF கிளிக் செய்து PDF பைலாக சேவ் செய்யவும். இப்போது PDF READER மூலம் அந்த பைலை திறந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!

வழி 3

  பெரும்பாலும் JAVA SCRIPT மூலமாகவே ரைட் கிளிக் மற்றும் COPY, PASTE BLOCK செய்யப்படுகிறது  JAVA SCRIPTஐ நிறுத்தி வைப்பதன் மூலமும் இதை செய்ய முடியும்

1. FIREFOX: TOOLS-> OPTIONS-> CONTENT -> ENABLE JAVA SCRIPT (UNCHECK IT)

2. INTERNET EXPLORER TOOLS-> INTERNET OPTIONS-> SECURITY TAB -> CUSTOM LEVEL -> SCRIPTING-> DISABLE

இப்போது ப்ரௌசரை RESTART செய்யவும்