எப்புடி எல்லாம் ஊரை ஏமாத்துறானுக!

   எப்புடி எல்லாம் ஊரை ஏமாத்துறானுக! - இந்தக் கேள்விகூட கேட்டாலும் கேட்கப்படலாம்! இப்ப சொல்லுங்க! ஏமாத்துபவன் புத்திசாலியா? இல்லை எமாறுற ஏழு கோடி பேர் புத்திசாலியா???




இந்தக் கேவலம் தேவையா?

  யார் பண்ணினாங்கன்னே தெரியல! எப்படி பண்ணினாங்கன்னும் தெரியல! யார் செஞ்ச வேலை இது? நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணினன்? அதிகாலைல 8.00 மணிக்கு??? எந்திரிச்சு கிச்சன் பக்கம் போனா கதவுல இப்படி இருக்குது -


இந்த கேவலம் தேவையா?? என்னைச் சொன்னன்!


நீ எதற்கு செத்துப்போனாய்?


   மாலை நேரம், சுடுகாட்டின் ஓரமாய் ஒரு கல்லறையின் அருகில் ஒருவன் அழுதுகொண்டிருந்தான்.

"நீ
 ஏன் சாக வேண்டும் ஏன்? நீ எதற்காகச் செத்துப்போனாய்?" என்று சத்தமாக அழுது கொண்டிருந்தான்.


அந்த வழியாகக் வந்த ஒருவர், அவனைப் பார்த்துவிட்டு, “மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள், சாவு எல்லோருக்கும் வரும். இவர் உங்களுக்கு நெருங்கியவரா?” என்றார்.

"இல்லை! இவரை நான் சந்தித்தது கூட இல்லை!"

“பிறகு ஏன், நீ ஏன் சாக வேண்டும்? நீ எதற்காகச் செத்துப்போனாய் என்று அழுது கொண்டிருக்கிறீர்கள்?”

"இவர் என் மனைவியின் முதல் கணவன்!"


செம கீச்சு மச்சி 2

  • ஒரு பெண்ணின் T-shirt வாசகம், முன்புறம் I AM VIRGIN, பின்புறம் THIS IS MY OLD T-SHIRT (பார்த்தது)

  • இப்பொழுதெல்லாம் என் கனவுகளில் கூட கரண்ட் வருவதில்லை - ஒரே இருட்டா இருக்கு

  • டைரக்டர் ஆகனும், பைலட் ஆகனும், டாக்டர் ஆகனும், இதான் என் கனவு! இதெல்லாம் ஒட்டுக்கா ஆக முடியாதாம்ல! கவுத்துபுட்டாங்க மச்சான்! 

  • எல்லோரும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக சாவுறாங்க; அப்புறம் வேலைக்குப் போய் சாவுறாங்க!

  • இந்திய கிரிக்கெட் அணி ஒரு Unbelievable மேட்ச்சில் வெற்றி பெற்றது - இந்தியா வெற்றி பெற்றாலே அது Unbelievable மேட்ச்தான்!!!


உயிரியல் பூங்காவில் ஒருமுறை!

அமைதியாய் ஊடுருவிப் பார்க்கும் நாரையும்,
நகர்ந்து அருகில்வரும் முயலும்
அப்பாவியாய்க் கேட்கின்றன,
நீ எதற்கு கூண்டிற்குள் இருக்கிறாய்?



சசிகலா பலிகடா? எல்லாம் நாடகம்?

  ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நேற்று சாட்சியம் அளிக்கையில் “வங்கி கணக்கு வழக்குகளை நானே கையாண்டேன், எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு” என்று கூறி கதறியழுதிருக்கிறார்.

  இன்னொருபுறம் தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த நிலமோசடி புகாரின் பேரில், தஞ்சை போலீசார் சென்னை பெசன்ட் நகரில் சசிகலா கணவர் எம்.நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர் ராவணன் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளனர். 

சந்தேகம் 1:

  நமக்கு முதலில் சந்தேகம் வருவதே போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட விஷயம். ஏனெனில் பல்லாண்டுகால நட்பு மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெ. சசிகலா இருவருமே முக்கிய குற்றவாளிகள். இதில் யார் யாரை பகைத்துக்கொண்டாலும் நஷ்டம் இருவருக்கும்தான். இதையெல்லாம் யோசிக்காமலா ஜெ சசியை வீட்டைவிட்டு அனுப்பியிருப்பார்? அப்படி போயஸ் தோட்டத்தைவிட்டு அனுப்புவதற்கு சசிகலா செய்ததாகக் கூறப்படுபவை அனைத்துமே மீடியாக்கள் உருவாக்கியவைதான். உண்மையான காரணங்களை ஒருமுறை கூட சம்பந்தப்பட்ட இருவருமே சொல்லவில்லை.


சாவடிக்கிரானுகளே என்னைய - இலங்கை பேருந்து பயணம்

  கண்டியிலிருந்து நுவேரேலியா (சீதை கோவில்) சென்றுவிட்டு மாலையில் திரும்பும்போது ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஏறும்போது தெரியவில்லை அது எமனின் வாகனம் என்று. அந்த பேருந்து பழைய அசோக் லேலேன்ட் மாடல். (எல்லாப் பேருந்துகளுமே அதான்). இருக்கைகள் எதுவுமே காலி இல்லாததால் டிரைவர் சீட்டின் பின்புறமிருந்த சீட்டில் அமர்ந்து கொண்டேன்!

  பேருந்து கிளம்பியதான் தெரியும், வேகமேன்றால் அப்படியொரு வேகம் 100 எல்லாம் தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. சத்தமேன்றால் அப்படியொரு சத்தம். பிரச்சினை என்னவென்றால் செல்லும் தடம் மலை உச்சியிலிருந்து கீழிறங்க வேண்டும். அதில் நூறைத் தொட்டால்? இதில் கொண்டாய் ஊசி வளைவுகள் வேறு! அதிலும் வேகத்தைக் குறைக்கவே இல்லை. இந்த்தனைக்கும் ரோடு மிகவும் சிறியதுடன் அது இருவழிப்பாதை (Twoway).

  முன்னால் செல்லும் அனைத்து வண்டிகளையும் பைக்கில் செல்வதுபோல் முந்தி சென்றார். வளைவுகளிலும் மற்ற பேருந்துகளை அதேபோல் முந்திச் சென்றார். ஒருவேளை அவிங்கப்பன் ரோடு போட்டிருப்பானோ? எனக்கு உச்சா வரும்போலிருந்தது! மூச்சு அடைத்து விட்டிருந்தது. வேகமாகச் செல்லும் வேனை முந்திச் சென்றார். பேருந்து ஸ்டாப்பில் நிறுத்தி பின் மீண்டும் சென்று அந்த வேனை முந்தினார். இப்படி இருபது தடவைக்கும் மேலிருக்கும்.


நிலாப்பெண்ணுக்கு இனி nilapennukku.com

  நிலாப்பெண்ணுக்கு இன்று முதல் http://www.nilapennukku.com என்ற முகவரியில் செயல்படுகிறது. காதலர் தினத்தில் புதிய தளத்தில்! 


  நீங்கள் இவற்றிலும் தொடரலாம்! நமது பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்! 


பேஸ்புக் – https://www.facebook.com/nilapen 
ட்விட்டர்– https://twitter.com/#!/nilapennukku 
இன்ட்லி –  http://ta.indli.com/user/nilavanban 


  Google Friend connect நண்பர்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற, சிரமம் பாராமல் ஒருமுறை unfollow செய்துவிட்டு பின் follow செய்யவும்! (இதற்கு கட்டணமாக குவாட்டர் கேட்பவர்களுக்கு லத்திகா படம் கதறக் கதற திரையிட்டுக் காண்பிக்கப்படும்!) 


  ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு டொமைன் கொடுத்து நாம் நம்முடைய தனிப்பட்ட தளத்திற்கு மாற பேருதவி புரிந்த பிளாக்கருக்கு நன்றி! 
  
  யாராவது follow பண்ணி ரவுடிகளோட வந்தா வந்தா வந்தா! சங்கத்த உடனே கலைங்கடா! .


அன்புடன், 
நிலவன்பன். 


ஒரு சந்தேகம் – கவிதை எழுதினா ஒரு பக்கிகளும் வராம இருந்த நமது ப்ளாக் ஸாரி நமது தளம் இந்த நான்கு நாட்களில் காதல் கவிதைகளைப் படிக்க வந்தவர்களின் எண்ணிக்கை 5000. காதலர் தினத்தன்று மட்டும்தான் உங்களுக்கெல்லாம் காதல் பொங்குமா??


செம கீச்சு மச்சி - 1

  • ஜெனிலியா திருமணம், நயன்தாரா விலகல் #ஆண்டவன் நமக்கு ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பான்! :)

  • இரவு நேரம், நானும் ஸ்ருதியும் மட்டும் லிஃப்ட்ல போறோம், பவர் கட், லிஃப்ட் நின்னுடுச்சு - அப்புறம் கனவு கலைஞ்சிடிச்சு!

  • நயனின் புதிய தெலுங்குப்பட சம்பளம் 1.5 கோடி - அளவுக்கேத்த சம்பளம் போல ஸாரி அழகுக்கேத்த சம்பளம் போல!

  • சச்சின் நூறு #எது அடிக்க முயற்சி செஞ்ச மேட்சுகளோட எண்ணிக்கயா??

  • ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸில் இடமில்லை - ராகுல் காந்தி #அப்ப நீங்க கட்சியை விட்டு விலக போறீங்களா?


காதலர் தினம் காதல் கவிதைகள் -3

தினம் தினம்
என்னை வதைப்பதைவிட
ஒரே அடியாய்ப் புதைத்துவிடேன் - உன் இதயத்திற்குள்!



உன்னை சந்திக்காத ஒவ்வொரு பொழுதும் இழந்துபோன பொழுதுகள்
உன்னை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் என்னை இழக்கும் பொழுதுகள்!


காதலில் தோற்பது எப்படி? காதலர் தின ஸ்பெஷல்!

  காதலில் தோற்பது என்பது சாதாரண விசயமில்லை. கழட்டி விடுவது என்பதும் சாதாரண விசயமில்லை. அதுக்காக எம்புட்டு பாடுபடனும், எவ்வளவு தியாகம் பண்ணனும். இதைவிட முக்கியம் இதை உங்கள் ஆளும் உங்களைக் கழட்டிவிட உபயோகப்படுத்தலாம், கவனம்!

  • முதல்ல போனில் இந்த ம்ம்ம் போடுவதை விடுங்கள். பத்து நிமிடம் எதுவும் பேசலேன்னா “ரொம்ப போர் அடிக்குதா?” கேள்வி வரும், உடனே ஆமான்னு பதில் சொல்லனும்.

  • காலைல Good Morning, ராத்திரி Good Night எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க??? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)

  • “எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் கொஞ்சுவதை நிறுத்துங்கள். “உன் டிரஸ் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி சொல்லிப் பழகுங்கள். (சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்ய தோற்பது என்பது சாதாரண விசயமில்லை!)


சச்சின் கீதம் - தனுஷ் பாடல் Sachin Anthem

  பூஸ்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனுஷ் பாடிய பாடல். தனுஷ் மற்றும் அனுஷ்கா நடனத்துடன் பட்டையை கிளப்பியுள்ளது. 


  சச்சினின் 23 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையைப் போற்றும் வகையில் இந்த சச்சின் கீதம் உருவாக்கியுள்ளனர். (ஆனா 23 நொடிகள்தான் சச்சினைக் காட்டுகிறார்கள்).

Dhanush's Sachin Anthem:


  இது சச்சினுக்கு விளம்பரமா இல்லை தனுஷிற்கு விளம்பரமான்னு தெரியலை.

  இது தமிழ் பாட்டா இல்லை ஆங்கிலப் பாட்டா?? (வார்த்தைகளை மட்டும் இல்லாமல் கேட்டுப் பாருங்கள் ஒரு டப்பாங்குத்து பாட்டு கேட்கிற மாதிரியே இருக்கும்!)


நீ கலக்கு சித்தப்பு!


காதலர் தினம் காதல் கவிதைகள் -2


·        என்கவிதைகளைப் படிக்காதே -
உன் அழகின் மீதான கர்வம்
இன்னும் கூடிவிடும்



·        என் கல்லறையிலும்
வளரப்போவது
காதலாகத்தானிருக்கும்.


காதலர் தின காதல் கவிதைகள் -1


·        நான் நிலாவை வெறுக்கிறேன்
உன் பெயரை அபகரித்துக் கொண்டதற்காக!



·        அதிகாலையில் ஒவ்வொரு பூக்களும்
உன் வருகைக்காகக் காத்திருக்கின்றன.
அதில் ஒரு பூ நான்!



·        கண்கள் பேசிக்கொள்ளும்
மௌனத்தின் சப்தத்தில்
மொழிகளின் சப்தம் நின்றுவிடுகிறது.




கத்திவிடாதே குத்திவிடுவான் கொள்ளைக்காரன்!

  புதிதாய்க் கல்யாணமான கணவனும் மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். சூரியன் ஒளிந்துகொண்ட நேரம் சரியாய் இரவு ஏழுமணி. திடீரென செய்தியில் தற்போதைய செய்தி ஒன்று வந்தது.


“தற்போதைய செய்தி – சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து பிரபல கொள்ளைக்காரன் பேட்டைசேகர் தப்பித்துவிட்டான். இவன் மீது 15 கொள்ளை வழக்குகளும் 11 கற்பழிப்பு வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.”


உடனே கணவன், “டியர் கதவெல்லாம் மூடித்தான் இருக்கிறது?” எனக் கேட்டான்.

“ம்ம்ம்” அவள் சொல்லி முடிப்பதற்குள் சமையலறையில் ஏதோ உருளும் சத்தம் கேட்டது.

மனைவி எழுந்து போனாள்.

ஐந்து நிமிடம் எந்த சத்தமுமில்லை. ஆறாவது நிமிடம் டிவியில் காட்டிய அதே கொள்ளைக்காரன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு ஹாலை நோக்கி, அவளையும் தள்ளிக்கொண்டு வந்தான்.

“சத்தம் போட்டால் இருவரது உயிரும் இருக்காது! நான் சொல்வதை மட்டும்தான் கேட்கவேண்டும்! ஒருவர் சத்தம் போட்டாலும் என்னுடைய கொலையில் இரண்டு அதிகரித்துவிடும்” என்றான்.


அக்னிபாத் - காட்டு காட்டுனு காட்டுறாங்கோ!

   ஹிருத்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் என மூன்று ஹீரோயின்கள். ஏன்னா ஹீரோயின்களைவிட ஹிருத்திக் ரோஷன்தான் அதிக சீன்களில் சட்டையைக் கழட்டிவிட்டுத் தன் பாடியைக் காட்டுகிறார். சில நேரங்களில் யாரு ஹீரோயின் என்று நமக்கே குழப்பம் வந்துவிடுகிறது. சிக்ஸ் பேக் இருந்தால் அதைப் படம் முழுவதும் காட்டிகிட்டே இருப்பீங்களாடா? அவ்வ்வ்..


   காத்ரீனா கைப் வழக்கம்போல் ஒரு பாட்டுக்கு வந்து தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டிவிட்டுப் போகிறார். (ம்ம்ம்ம் கொடுத்து வச்சிருக்கனும்! போறதே இதுக்குத்தானே!)


ஏன் என்னைவிட்டு விலகிச் சென்றாய்?



நீ வரமாட்டாய் என்று தெரியும்
இருப்பினும் காத்திருக்கிறேன்,
உன் நினைவுகளாவது வரட்டுமே!



நான் என்னவளைப் பற்றி எழுத வேண்டும்
யாராவது ரத்தம் கொடுக்க வாருங்கள்
என் கல்லறைக்கு!




நான் உன் அன்பன்
என்பதால்தானோ என்னவோ
நீ நிலவாகிப் போனாய் -
என்னை விட்டுவிட்டு!




                                                                                தொடர்ச்சி 


CRICKET LIVE




          WATCH CRICKET MATCH LIVE -  IPL LIVE