Blogger Widgets

சாவடிக்கிரானுகளே என்னைய - இலங்கை பேருந்து பயணம்

  கண்டியிலிருந்து நுவேரேலியா (சீதை கோவில்) சென்றுவிட்டு மாலையில் திரும்பும்போது ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஏறும்போது தெரியவில்லை அது எமனின் வாகனம் என்று. அந்த பேருந்து பழைய அசோக் லேலேன்ட் மாடல். (எல்லாப் பேருந்துகளுமே அதான்). இருக்கைகள் எதுவுமே காலி இல்லாததால் டிரைவர் சீட்டின் பின்புறமிருந்த சீட்டில் அமர்ந்து கொண்டேன்!

  பேருந்து கிளம்பியதான் தெரியும், வேகமேன்றால் அப்படியொரு வேகம் 100 எல்லாம் தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. சத்தமேன்றால் அப்படியொரு சத்தம். பிரச்சினை என்னவென்றால் செல்லும் தடம் மலை உச்சியிலிருந்து கீழிறங்க வேண்டும். அதில் நூறைத் தொட்டால்? இதில் கொண்டாய் ஊசி வளைவுகள் வேறு! அதிலும் வேகத்தைக் குறைக்கவே இல்லை. இந்த்தனைக்கும் ரோடு மிகவும் சிறியதுடன் அது இருவழிப்பாதை (Twoway).

  முன்னால் செல்லும் அனைத்து வண்டிகளையும் பைக்கில் செல்வதுபோல் முந்தி சென்றார். வளைவுகளிலும் மற்ற பேருந்துகளை அதேபோல் முந்திச் சென்றார். ஒருவேளை அவிங்கப்பன் ரோடு போட்டிருப்பானோ? எனக்கு உச்சா வரும்போலிருந்தது! மூச்சு அடைத்து விட்டிருந்தது. வேகமாகச் செல்லும் வேனை முந்திச் சென்றார். பேருந்து ஸ்டாப்பில் நிறுத்தி பின் மீண்டும் சென்று அந்த வேனை முந்தினார். இப்படி இருபது தடவைக்கும் மேலிருக்கும்.
  ஒவ்வொரு வளைவிலும் என் கண்ணை மூடிக்கொண்டேன்! எதிரில் எதுவும் வரக்ககூடாது என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை டிரைவரும் அப்படித்தான் ஓட்டுகிறானோ??


  இருட்டிவிட்டது. ஏனோ படங்களில் வரும் அனைத்துப் பேய்களும் ஞாபகத்திற்கு வந்துவிட்டுப் போனது. தூரத்து லைட் வெளிச்சம் வேறு, மரங்கள் மறைப்பதால் பேருந்து செல்லும் வேகத்தில் விட்டுவிட்டு ஒளிந்தது! அது என்னை “வா! வா!” என்று அழைப்பது போலிருந்தது.

  “வீட்ல சொல்லிட்டு வரலை” என்று டிரைவரிடம் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன், எங்கே கோவத்தில் இன்னும் வேகமாகச் சென்றால் என்ன செய்வது என்றெண்ணி எதுவும் சொல்லவில்லை.
பேருந்து ஒரு ஆளுக்கெல்லாம் எங்குமே நிற்கவில்லை, இறங்க வேண்டுமென்றால் வேகத்தைக் கொஞ்சம் குறைப்பார், இறங்கும் நபர குதித்துவிட வேண்டும். அதேபோல்தாம் ஏறுபவர் ஒரு ஆள் மட்டும் என்றால் பேருந்து வர வர ஓட ஆரம்பித்துவிட வேண்டும், அருகில் வந்ததும் பேருந்தின் வேகம் குறையைக் குறைய அப்படியே ஏறிக்கொள்ள வேண்டும்..

  மனதில் நினைத்துக் கொண்டேன், “தெரியாம ஏறி விட்டாயேடா??” இறங்கிவிடலாம் என்றும் நினைத்தேன், அடுத்த பேருந்து நிற்காமல் போய்விட்டால் என்ன செய்வது? அதுவும் மலைப்பகுதியில்!

  ரோட்டைப் பார்த்து ஓட்டினாலும் பரவாயில்லை. அருகில் அமர்ந்து கொண்டிருப்பவருடன் சிங்களத்தில் பேசிக்கொண்டே ஓட்டினான் அந்த நாதாரி. பேசினாலும் பரவா இல்லை, அவரின் முகம் பார்த்து பேசிக் கொண்டே ஓட்டினான்.

  ஒருவழியாக கண்டியை அடைந்துவிட்டது. காலையில் ஒரு பேருந்தில் செல்லும்போது மூன்று மணி நேரமெடுத்த பயணம் இப்போது வெறும் ஒண்ணரை மணி நேரத்தில் கொண்டுவந்து விட்டுட்டான் அந்தப் பன்னாடை. என் இதயத்தைத் தொட்டுப் பார்த்தேன், FAN வேகமாக ஓடினால் எப்படிச் சத்தம் வருமோ அப்படித் துடித்தது.

பேருந்தை அடுத்த பலி ஆடுகளுக்குக் காத்திருந்தது.

இந்த நாறப்பொழப்பு உனக்குத் தேவையா???


0 COMMENTS:

Post a Comment