தொப்பி தொப்பி


  எப்படி பேசினாலும் கேட் போடுறானுக சிலர். இவிங்ககிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி மான் கராத்தேதான் பிறவு என்ன செய்ய? ஏலே இது சரிதானேனேனு கதைய படிச்சிட்டு சொல்லுவினம்.


  It happened at a New York Airport. This is hilarious. I wish I had the guts of this girl. An award should go to the United Airlines gate agent in New York for being smart and funny, while making her point, when confronted with a passenger who probably deserved to fly as cargo. For all of you out there who have had to deal with an irate customer, this one is for you.

A crowded United Airlines flight was canceled. A single agent was re-booking a long line of inconvenienced travelers.


கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?

  2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.

நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.

கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.

ஐந்து ரூபாய்

ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.


நம்பர் 1 முட்டாள் யார்?

 நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.


  ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.


சைக்கோ தொடர்கதை பகுதி 3

   தலையெல்லாம் ஒரே வலி, எழுந்து பார்த்தால் மணி மதியம் 3. மற்றவர்கள் எல்லோரும் படுக்கையில் அட்டையாய்க் கிடந்தனர். வாரவிடுமுறை வெள்ளி என்பதாலும், குடித்த போதையில் யாருமே சாப்பிடக்கூட போகலை. எழுந்துபோய் முகம் கழுவி தண்ணீரைக் குடித்துக்கொண்டேன். ஏழைகளுக்கும் போதைகளுக்கும் ஒரே தீர்வு.

  பொய் பொய்யா சொல்லி திரும்பவும் சைனாவிலிருந்து அந்த டையை ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன். இருந்தாலும் என் மனம் அடங்கவில்லை, திரும்பவும் தேட ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் குப்பைக்கூளமாக்கி வெளியில் எடுத்துப் போட்டேன். ட்ராயரை முழுவதும் வெளியில் எடுத்தவுடன் மடிமேல் வந்து விழுந்தது டை.

  “ங்கோ_” கெட்டவார்த்தையை உதிர்த்துக்கொண்டே அதை எடுத்துப் பார்த்தேன் அதே டை. நான் நிறைய பேப்பர்களை வைப்பதால் ட்ராயரின் மறுபக்கத்தில் உட்புறமாக விழுந்திருக்கிறது. அடப்பாவமே? இதுக்காடா ஒருவாரமா அட்வைஸ் வாங்கினேன்? அட்வைஸ் பண்ணினதைக்கூட மன்னித்துவிடலாம், ஆனா சரக்கடிச்சிட்டு ஒரு நைட் எல்லாம் அட்வைஸ் பண்ணினான் பாரு!!! ஆஆஆ!

  அடுத்த வியாழன் இரவு ஆபீசில் ஒரு ஹிந்திகார பெண்ணும், அவளின் நண்பர்களும், பிரசாந்தும் பீச்சுக்கு போவதாய் பிளான் பண்ணினார்கள். எல்லோரிடமும் சொல்லிவிட்டு இரவு கிளம்பினான், அந்தப்பெண் அவனை பிக் அப் செய்துகொண்டாள். பிரசாந்த் எப்போ ரூமுக்கு வந்தான் என்றெல்லாம் தெரியவில்லை, காலையில் ரூமில் இருந்தான். நேற்று இரவு என்ன நடந்தது என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ஏன்னா அந்தப் பெண் பற்றி ஏற்கனவே தெரியும், "LET'S ENJOY" என்பது அவள் கொள்கை.



ஆடு, கோழியை உண்போம் - தாவரங்களைப் பாதுகாப்போம்! GO GREEN

 எது சைவம்? எது அசைவம்? இதிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கு. நாம் இதுவரைக்கும் நம்பிக்கொண்டிருப்பது வலியை உணரும் அனைத்து உயிரினங்களும் அசைவம் - அவற்றைக் கொல்லக்கூடாது, அது பாவம்! உதாரணம் கோழி, ஆடு, மாடு, மனிதன்.  வலியை உணராத, சத்தம் போடத்தெரியாத தாவரங்கள் அனைத்தும் சைவம். அவைகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். சரியா?

 இப்போ நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் கோழியைக் கொல்வது பாவம், நெல் நாற்றைக் கொல்வது பாவமில்லையா? எப்படி உயிரினங்களில் ஒன்றைக் கொல்வது பாவமாகவும், இன்னொன்றைக் கொல்வது பாவமில்லாமலும் போகும்?



ஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3!

  • கல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது? நான் நேரா அங்கே போயிடுறேன்!:)

  • பெண்கள் 600  வருடத்திற்கு முன்னாடியே ப்ரா அணிய ஆரம்பித்துவிட்டார்களாம்! -அதற்கும் முன்னாடியே பிறந்திருக்கலாம்! 
  
  • குலுங்கும்போதெல்லாம் குலுங்கிவிடுகிறேன் - விழுங்கிவிடலாமா என்று!

  • அவன் : எதுக்கு குனியும்போதெல்லாம் நெஞ்சில் கை வைத்துக்கொள்கிறாய்? 
அவள் : நீ வச்சிடக்கூடாதுன்னுதான்! 

  • நண்பன் 1 : எல்லாம் முடிந்த பிறகு மனைவிகிட்டே பேசுவியா?
நண்பன் 2  : அது என்னிடம் மொபைல் இருப்பதைப் பொறுத்து!"


எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதா?

  இது கட்டுக் கதையல்ல.  கண்ணீரால் நிறைந்த நிஜம்.நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ராஜீவ் படுகொலை தொடர்பான புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது என்பதினை படிக்க படிக்க உறக்கமின்றி தவித்தேன்...


  அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை "ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.  குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு" என்று 100ரூபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.


   ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும்  ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமாஎன்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
காமராஜர் என்றொரு எளிய இதயம் - இறைவனைப்போல்
   அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச்சொன்னார்..வீட்டிலுள்ளவர்களை..அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். "அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார். 

   முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா" என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்" என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.


மனதைத் திற - சின்ன சின்ன சந்தோசங்கள்!

  ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு வாங்குவது, பெரிய பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்!

  ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்!


  வாழ்வில் இதுவரை எதை எதை தொலைத்திருக்கிறீர்கள்?


  முதலில் தொலைந்துபோனது மகிழ்ச்சி!

  மனிதம் என்ற வார்த்தையே நம்மிடம் இருக்கும் அந்த சிரிப்பு தன்மையாலேயே நிறைவடையும். சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தொலைதூரங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்!


  எங்கோ நடந்த பிரச்சினைகளுக்கு வீட்டில் ஆசையுடன் அருகில் வரும் குழந்தையிடம்கூட முகத்தை உம்ம்ம்என்று காட்டி ஓடவைக்கிறோம்! அலுவலகங்களில் அருகில் வரும் நண்பர்களை நான் பிஸி என்று விரட்டிவிட்டு எங்கோ அயல்நாட்டில் உள்ள நண்பர்களை நலம் விசாரிகிறோம்!


  ஒவ்வொருநாளும் இரவு ஒரு மணிவரை வேலைமுடித்து வீடு வருகிறோம்! அலுவலகத்திற்கு ஒரு நல்ல பணியாளராய் இருக்கிறோம்! ஆனால் மனைவிக்கு? குழந்தைக்கு? அலுவலகங்களுக்கு நீயில்லை என்றால் இன்னொரு ஆள்! ஆனால் உன் மனைவிக்கு? குழந்தைக்கு?


  உதாரணத்திற்கு குடும்பம், மகிழ்ச்சி, தூக்கம், அரட்டை, நண்பர்கள் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு 40 வருடங்கள் கடுமையாய் உழைத்து உங்கள் குறிக்கோளை அடைந்துவிடுகிறீர்கள். இப்படி இருபது வயதில் ஓட ஆரம்பிது அறுபதாவது வயதில் சாதனையை இலட்சியத்தை அடைந்துவிட்டோம்!


ஆனால் உன் வாழ்க்கை

இந்த ஒரே ஒரு லட்சியத்திற்காகவா உன் அறுபது ஆண்டுகாலம் வீணடிக்கப்பட்டது?


ஒருவேளை இலட்சியத்தை அடையமுடியவில்லை! அல்லது உங்கள் வாழ்க்கை முன்னமே முடிந்துபோய்விடுகின்றது. (யாருமே இறைவனிடம் உறுதி வாங்கி வரவில்லையே?)



ஜென் கதை!


மிகவும் வயதான ஒரு ஜென் துறவி படுக்கையிலிருந்தார். தன் இறப்பிற்கு முன்னர், தன் சீடர்களை யார் வழிநடத்திச் செல்வது என்று தீர்மானிக்க ஒரு சோதனை வைக்கத் தீர்மானித்தார்.


வயது மூப்பினாலும், நோயாலும் அவரது முகம் கடுமையாக வாடி இருந்தது. அனைத்து சீடர்களையும் அருகே அழைத்தார்.




திருட்டுப் பூனை - குழந்தைகள் கவிதை, சிரிப்பு மழலைப் பாடல்

வீட்டில் நுழைந்த பூனைக்கு
 வாசம் ஒன்று வீசியது
ஓட்டத்தில் ஓடிச் சென்றுதான்
 சொம்பினுள் விட்டது தலையை!

களைப்பே எதுவும் இல்லாமல்
 குடித்துக் கொண்டது பசும்பாலை
நுழைத்துவிட்ட சொம்பினுள் இருந்து
 எடுக்க முடியவில்லை தன்தலையை!

அறிவே இன்றி செய்த செயலால்
 அபாயம் வந்தது என்றெண்ணி
யோசனை செய்யும் நேரத்தில்
 காலடி ஓசை கேட்டதுவே!


ட்ராஃபிக் போலீஸ்ல மாட்டு – மவனே சங்குதேன்!

  எனக்கும் ட்ராஃபிக் போலீஸுக்கும் உண்டான பந்தம் பூர்வ ஜென்ம பந்தம் போல! ரோட்ல அவனவன் டிரைவிங் லைசென்ஸ் இல்லாம திருட்டுவண்டிலயே போய்கிட்டுருப்பான், ஆனா அவனையெல்லாம் விட்டுட்டு போலீஸ் நம்மை பிடித்து வண்டிக்கி இன்சூரன்ஸ் இருக்கானு கடுப்பேத்திக்கிட்டுப்பார்!

  அரசாங்கம் என்னென்ன சட்டம் கொண்டுவருதோ அதற்கெல்லாம் முதலில் ஃபைன் கட்டுவது நானாகத்தானிருப்பேன்! அப்படி அரசாங்கத்தையே வாழ வைத்துக்கொண்டிருந்தேன்! தமிழ்நாடு அரசு மாதச் சம்பளம் கொடுக்குதோ இல்லையோ நான் கரெக்டா ஒரு மாதத்தில் ஐநூராவது லஞ்சம் கொடுத்துவிடுவேன்!

  ஏன்னா காவல்துறை நம்ம நண்பன்! நண்பனுக்கு நாம கொடுக்காம வேற யார் கொடுப்பா? அப்படீன்னு சொல்லி மனசை தேற்றிக்கொள்வேன்! (வேறென்ன பண்ண முடியும்?)

  இது பெங்களூரிலும் தொடர்ந்தது! ஆனா பெங்களூர் போலீஸ் ரொம்ப நல்லவங்க! ஒரு தடவை மாட்டினா ரூ.50 கொடுத்தா போதும்! நம்ம ஊர் போலீஸ் மட்டும்தான் லஞ்சம் என்றால் ரொம்ப போலீஸ் ஆகிறார்கள் குறைந்தபட்சம் ஆயிரமாவது அழ வேண்டும்!

  2009ல் ஒருநாள் அதிஅதிகாலை ஆறுமணி. திருப்பூர் சாலைல இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். வழக்கம்போல மாமா வழிமறித்தார்!


முதல் இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை!

சில சம்பவங்களை எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு, தானா வரும்! - அதில் ஒன்றுதான் இது! 

முதலிரவு, படுக்கையறை அப்படின்னா என்னான்னு கூட தெரியாத வயசு. சரியா 9th std என நினைக்கிறேன், அப்போல்லாம் அம்புட்டு நல்லவனா இருந்தேன்! கிளாஸ்ல பர்ஸ்ட் வந்ததால கிளாஸ்ல அட்டன்டன்ஸ் எடுப்பதிலிருந்து எக்ஸாம் பேப்பர் திருத்துவதுவரை எல்லாம் செய்துகொண்டிருந்தேன்! இதெல்லாம் செஞ்சாத்தான் ரொம்ப நல்லவன்!

பெண்கள் என்றால் அப்பவே ஆகாது. பொண்ணுங்க யாருக்கும் மார்க் போட மாட்டோம்! அந்தப்பிழை,  இந்தப்பிழை,  எழுத்துப்பிழை அப்படின்னு போடுற மார்க்ல ஒரு பத்து மார்க்னாச்சும் குறைச்சாதான் தூக்கம் வரும். (அப்புறம் எப்படி நாம பர்ஸ்ட் வர்றது?)

அப்போல்லாம் கட்டுரை என்றால் போர்ட்டில்தான்(Board) எழுதி போடுவம்! (இப்பவும் அப்பிடிதான் நடக்குதுன்னு நினைக்கிறேன்)

நான் எழுதிப்போட்டுக்கொண்டிருந்த தமிழ் பாடத்திற்கு உண்டான கட்டுரையின் தலைப்பு - அறிவியலின் வளர்ச்சி! எல்லாமே எழுதியாச்சு, முடிவுரை வந்தாச்சு. முடிவுரை இதுதான் - இவ்வாறு காலையில் எழுவது முதல், இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து வேலைகளையும் இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!


காமெடி கலாய்த்தல் - நேபாளம் அதள பாதாளம்!

சமீபத்தில் நேபாளிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன் (கலாய்த்துக் கொண்டிருந்தேன்!)

உன்னோட சொந்த ஊர் எது?

காத்மாண்டு

ஓ! சைனாவுக்குள்ள இருக்குமே அந்த காத்மாண்டுவா?

இல்லை நேபாளம்

ஓ! நேபாளமா! இந்தியாவோட இருபத்தி ஒன்பதாவது ஸ்டேட்!


இவ்வளவு பேசறியே? நேபாளத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அங்கே மூன்று ஸ்பெஷல் இருக்கு! என்னன்னு சொல்லு பார்ப்பம்!

யோவ் எனக்கென்னய்யா தெரியும் நீயே சொல்லு!


நான் மனைவி பேய் – திகில் சிறுகதை


  ஒரு இரவு நேரம்! சரியாய் 12 மணி. நாயின் குரைப்பு கூட பேயின் உளறல்போல் கேட்டுக்கொண்டிருந்தது ஓவர்டைம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தான். அவன் வீட்டுக்குச் செல்ல ஒரு சுடுகாட்டைத் தாண்டித்தான் போக வேண்டும்! அது ஆள் அரவமில்லாத தனியான ஒரு சுடுகாடு!

சுடுகாட்டை அடைந்துவிட்டான்!

திடீரென மிகப்பெரிய உருவத்துடன் பேய் ஒன்று கண்முன் தோன்றியது, பெரும் சப்தத்துடன் "ஹா ஹா ஹா! நான் யார் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே அவனின் அருகில் வந்தது.

“யார் நீ?”

“நான்தான் இந்த சுடுகாட்டில் வாழும் பேய்!”

“நான் எப்படி நம்புவது?”

“என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லை?” என்றது பேய்

“நிச்சயமாக இல்லை."

பேய் குழம்பிப்போய்விட்டது, “ஆமாம்! என்னைப்பார்த்தால் ஏன் உனக்கு பயமில்லை?”

"கடந்த பத்து வருசமா உன் தங்கையுடன்தான் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறேன்."


சைக்கோ தொடர்கதை பகுதி 2

 ஒரு வாரம்தான் நன்றாக ஓடியிருக்கும். எங்கள் டீமுக்கு குமார் என்று புதியவர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார். இப்பொழுது எங்கள் டீமில் மொத்தம் நான்கு பேர். நான், சார்லஸ், குமார் மற்றும் பிரசாந்த்.

 அடுத்த நாளே பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. தவறு என்னுடையதுதான்! என்னவென்றால் சீனாவிலிருந்து வாங்கிய ஒரு SAMPLE டையை TIE (மதிப்பு ஒரு டாலர்!) என்னிடம் கொடுத்தார். நான் அதை என்னுடைய டிராயரில் போட்டு வைத்தேன். ஒரு இரண்டு நாள் கழித்து அதைக் கேட்டார், நான் டிராயரை திறந்து பார்த்தால் அதை காணவில்லை. 

 நானும் தேடாத இடமில்லை. பார்க்காத இடமுமில்லை, ஆனால் அதைக் காணவில்லை. (அய்யா என் கிணத்தைக் காணலை – என்பதுபோல்!) 

  நான் சொன்னேன், “அந்த கொரியர் கிடைக்கவில்லை என்று சீனாவில் சொல்லி திரும்ப வாங்கிக் கொள்ளலாம்! (இது வழக்கமாக சொல்லுவதுதான்)”


  “எப்படி அதை சொல்லுவது? இப்படி இதைக்கூட தொலைத்தால் மற்றதையெல்லாம்??” ஒரு அரை மணி நேரம் அட்வைஸ்! (எனக்கு அட்வைஸ் செய்யும் எந்த பக்கியையும் பிடிக்காது, ஏனென்றால் அட்வைஸ் செய்யும் யாரும் அதைக் கடைபிடிப்பதில்லை!)


மனைவி சண்டையும் ஒரு பீரும்!

(ஒரு டாஸ்மாக் பாரில்)


தம்பி!! ஒரு பீர்!”

“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”

“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”

“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”

“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”

“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”

“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”

(சரக்கில் ஒரு நண்பன் உளறிய கதை!)


நீ எதற்கு செத்துப்போனாய்?


   மாலை நேரம், சுடுகாட்டின் ஓரமாய் ஒரு கல்லறையின் அருகில் ஒருவன் அழுதுகொண்டிருந்தான்.

"நீ
 ஏன் சாக வேண்டும் ஏன்? நீ எதற்காகச் செத்துப்போனாய்?" என்று சத்தமாக அழுது கொண்டிருந்தான்.


அந்த வழியாகக் வந்த ஒருவர், அவனைப் பார்த்துவிட்டு, “மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள், சாவு எல்லோருக்கும் வரும். இவர் உங்களுக்கு நெருங்கியவரா?” என்றார்.

"இல்லை! இவரை நான் சந்தித்தது கூட இல்லை!"

“பிறகு ஏன், நீ ஏன் சாக வேண்டும்? நீ எதற்காகச் செத்துப்போனாய் என்று அழுது கொண்டிருக்கிறீர்கள்?”

"இவர் என் மனைவியின் முதல் கணவன்!"


கத்திவிடாதே குத்திவிடுவான் கொள்ளைக்காரன்!

  புதிதாய்க் கல்யாணமான கணவனும் மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள். சூரியன் ஒளிந்துகொண்ட நேரம் சரியாய் இரவு ஏழுமணி. திடீரென செய்தியில் தற்போதைய செய்தி ஒன்று வந்தது.


“தற்போதைய செய்தி – சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து பிரபல கொள்ளைக்காரன் பேட்டைசேகர் தப்பித்துவிட்டான். இவன் மீது 15 கொள்ளை வழக்குகளும் 11 கற்பழிப்பு வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.”


உடனே கணவன், “டியர் கதவெல்லாம் மூடித்தான் இருக்கிறது?” எனக் கேட்டான்.

“ம்ம்ம்” அவள் சொல்லி முடிப்பதற்குள் சமையலறையில் ஏதோ உருளும் சத்தம் கேட்டது.

மனைவி எழுந்து போனாள்.

ஐந்து நிமிடம் எந்த சத்தமுமில்லை. ஆறாவது நிமிடம் டிவியில் காட்டிய அதே கொள்ளைக்காரன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு ஹாலை நோக்கி, அவளையும் தள்ளிக்கொண்டு வந்தான்.

“சத்தம் போட்டால் இருவரது உயிரும் இருக்காது! நான் சொல்வதை மட்டும்தான் கேட்கவேண்டும்! ஒருவர் சத்தம் போட்டாலும் என்னுடைய கொலையில் இரண்டு அதிகரித்துவிடும்” என்றான்.


யாருடையது கொடூர கதை?

   நூறு ஆண்டுகளுக்குப்பின் (எத்தன நாளைக்குத்தான் முன்னாடி கதையவே சொல்றது?) உலகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதுஎங்குமே மின்சாரம் இல்லைஅனைத்துக் கட்டிடங்களிலும் லிப்ட் இயங்கவில்லைபத்துமாடிக் கட்டிடம் என்றால் பத்தாவது மாடியை வாங்கவே ஆளில்லைவாடகைக்குக்கூட யாரும் வரவில்லைஏதாவது வேண்டுமென்றாலும் அவர்களேதான் கீழே சென்று எடுத்துவர வேண்டும்.

   பணியின் காரணமாக ஒரு நிறுவனம் மூன்றுபேரை அழைத்திருந்ததுஅவர்களுக்கு ஒரு கட்டிடத்தின் 163ஆவது மாடியைக் கொடுத்ததுமூவருக்கும் சந்தோசம், "ஆஹா இவ்வளவு பெரிய ஹோட்டலில் தங்கப்போகிறோம்!” என்றுஆனால் ஹோட்டலின் ரிசப்ஷனை அடைந்தவுடன்தான் தெரியும், 163மாடியையும் படியில் நடந்துதான் செல்ல வேண்டும் என்றுவேறு வழியில்லாமல் வாழ்கையை நொந்துகொண்டு கடுப்புடன் நடக்க ஆரம்பித்தார்கள்.

   பத்தாவது மாடியைக் கடக்கும்போது ஒருவனுக்கு ஒரு யோசனைஎப்படியும் நமது அறையை அடைய மூன்றுமணி நேரமாகும்அதுவரைக்கும் தங்கள் வாழ்வில் நடந்த ஆளுக்கொரு கொடூர கதையைச் சொல்வது என முடிவெடுத்தார்கள்திடீரென மூன்றாமவன், "நான் முதலில் சொல்கிறேன்இது மிகவும் முக்கியமானதுஎன்றான்

   உடனே முதாலாமவன், "கதை வரிசைப்படிதான் வர வேண்டும்நான் முதலில் சொல்கிறேன்என ஆரம்பித்தான்.


நாட்டின் No.1 முட்டாள் யார்?

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.



வங்கிக் கொள்ளை - நகைச்சுவை

      ஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த இரண்டு கொள்ளையர்கள் உடனடியாக ஒரு கொள்ளையை அதே இரவில் நடத்தத் திட்டமிட்டனர். அவர்கள் தயாரித்த திட்டப்படி அந்த வங்கிக்குச் சென்றபோது திடீரென தெரு விளக்குகள் அணைந்துவிட்டது. ஒருவழியாக தேடிக்கண்டுபிடித்து வங்கியை அடைந்தனர். வங்கியின் உள்ளே பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைத்தனர். கேமராவிற்குச் செல்லும் ஒயரைத் துண்டித்தனர்.


      பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க சேப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவர்கள் ஒரு பத்து சேப்டி லாக்கர் மட்டுமே இருக்கும் என நினைத்திருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான சிறிய சேப்டி லாக்கர்கள் இருந்தன. அவர்களுக்கு ஒரே சந்தோசம். “இதை மட்டும் கொள்ளையடித்தால்போதும் வாழ்நாள் முழுதும் வேறு எதுவும் தேவை இல்லை” என்றான் ஒருவன்.