பந்து கமெண்டரி:
"இலங்கையில் இறுதிப்போரின்போது இலங்கை அரசு
ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற
சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது, இலங்கை
கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இதையெல்லாம்
கண்டித்து மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்
உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற
போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே ஐபிஎல்
கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், இலங்கையின்
நடுவர்கள், களப்
பணியாளர்கள் என யாரும் தமிழகத்தில்
விளையாட அனுமதிக்கக் கூடாது" என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
அனுப்பினார்.
எடுக்கப்பட்ட ரன்கள்:
1. IPL தொடங்கும்
இந்த சமயத்தில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்பே இல்லை. ஜெ. என்ன
சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதே போல IPL நிர்வாகம்
இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட மாட்டார்கள் என ஒத்துக்கொண்டது. நமக்கு
பணந்தான் முக்கியம்! நாய் வித்தகாசு குரைக்கவா போகுது?
2. சென்னை அணி இரண்டு
இலங்கை வீரர்களைப் மொத்த தொடருக்கும் புறக்கணித்தது எதிர்பார்த்ததுதான். அதனால்
பெரிய இழப்பில்லை. ஆனால் அணிக்கு ரசிகர் ஆதரவு முக்கியந்தானே? சீனிவாசன் வாயாலயே சீனி விக்கிற ஆளாச்சே?














