Blogger Widgets

துப்பாக்கி - கோட்டை விடப்பட்ட லாஜிக்குகள்!

  துப்பாக்கி படம் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையைக் கிளப்புவது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே துப்பாக்கி பட விமர்சனம் கொடுத்திருந்தோம். இப்போ அதில் கோட்டைவிடப்பட்ட லாஜிக்குகளைப் பார்ப்போம்.


 • விஜய் வீட்டிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியைப்பற்றி தன் 12 நண்பர்களுடன் விவரிக்கும் விஜய் தமிழில் விவரிக்கிறார். வட இந்தியர் மற்றும் சிங்குகளுக்கெல்லாம் எப்படித் தமிழ் தெரியும்? (வேறு இடங்களில் ஆங்கிலம்/ஹிந்தி கொடுத்துததுபோலவே இங்கும் கொடுத்திருக்கலாம்)


 • படத்தின் முக்கிய இடமான விஜயும் அவரது 12 நண்பர்களும் தீவிரவாதிகளைக் கொல்ல பிரிவது அப்பட்டமான லாஜிக் மீறல். விஜயின் கூற்றுப்படி ஒருவன் இன்னொருவனை சந்திப்பான் அப்போது 12 பேர் 6,6 பேராக பிரிந்து இருவரையும் பின்தொடர வேண்டும். (1:12) பிறகு (1:6) (1:6) பின் (1:3) (1:3) (1:3)(1:3) இதற்குமேல் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் எப்படி தொடர முடியும்? அப்படித் தொடரும்போது ஒருவர் ஒரு தீவிரவாதியையும், மற்ற இரண்டுபேர் இன்னொரு தீவிரவாதியையும் தொடர்கிறார்கள். 2 பேர் தொடரும் தீவிரவாதி யாரையும் சந்திக்காமல் ஒருவர் மட்டுமே தொடரும் அந்த ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதியைச் சந்தித்தால் பின் தொடர ஆளில்லையே?மொத்தம் 4 குரூப்பில் எப்படியும் இது மாறிப்போய்விடுமே? (நமக்கு கடைசியாக 1:1 வர வேண்டும். 8 இடத்தில் பாம் வைப்பதாகக் கொண்டிருந்தால் மட்டுமே இது சரியாக வரும்) • சின்னச்சின்ன லாஜிக்குகளை எல்லாம் விட்டுவிடலாம். பெண்பார்க்கும்போது ஆச்சாரமான உடையணிந்து வருவதாகக் காட்டப்படும் காஜல் முதுகு முழுவதும் தெரிவதுபோல் உடையணிந்திருப்பது, 12 தீவிரவாதிகளைச் சுடும்போது எல்லோருடைய துப்பாக்கியிலும் சைலன்சர் போடாதது. (பொதுமக்கள் மத்தியில் வீண் குழப்பங்கள், பதற்றம் தவிர்க்கப்படுமே?)கிளைமாக்ஸில் விஜய் தன கடைசி ஆசையாய் “அடிவாங்கியே சாகணும்” என்பதற்தெல்லாம் தீவிரவாதிகள் ஒத்துக்கொள்வது என்ன லாஜிக்கோ?

டிஸ்கி: இந்த ஒரு பாட்டுக்காகவே எல்லாவற்றையும் மறந்துவிடலாம். “அண்டார்டிகா” பாடலில் வரிகள், நடனம், இசை, ஒளிப்பதிவு, நகைச்சுவை, எக்ஸ்ப்ரசன், படமாக்கிய விதம் என எல்லாமே 100%. நிஷாஆஆவுக்காகவே 100 முறைக்குமேல் இந்தப் பாட்டை பார்த்துட்டேன் J
                                               
“பாக்ஸர் நிஷான்னு சாஸ்திரி நகர்ல கேட்டுப்பாரு!”


15 COMMENTS:

 1. //அடிவாங்கியே சாகணும்//
  இது ஒருவனின் தன் மானத்தை தூண்டும் என்பதால் இருக்கலாம்.
  அப்புறம் நீங்கள் சொன்ன லாஜிக்குகளையெல்லாம் மீறாமல் இந்தி படைப்பு அமையும் என எதிர்பார்ப்போம்.
  இந்த பதிவை A.R. முருகதாஸ் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதல்ல கூழுதான் முக்கியம்! பிறகுதான் கூவுரதெல்லாம்!

   Delete
 2. நல்ல பதிவு..லாஜிக்கெல்லாம் கரைக்ட்டா இருக்குங்க..நன்றி.

  ReplyDelete
 3. உக்காந்து யோசிச்சிங்களோ

  ReplyDelete
 4. https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/46211_409809899092480_184819644_n.jpg

  ReplyDelete
  Replies
  1. இதை ஒரு காரணமா எடுத்துக்க முடியாதுங்கோ! ஏன்னா படத்துல 30 நாள்னு காட்டினா படத்தின் நீளத்தை 30 நாள் வர்ற மாதிரியா வைக்க முடியும்?

   Delete
 5. unga arivukkum kanakkukum kolliya than vaikanum... 6 per oru terrorist ah follow pandranganna avan innoruthana meet pandran, then avana 5 peru follow . then next terrorist 4 peru follow , then 3 peru ippadite pogum nalla yosinga puriyalana tution vanga...........

  ReplyDelete
  Replies
  1. ippadi oru vijayakanth padam naan paarththathe illaiye?

   Delete
 6. \\(1:12) பிறகு (1:6) (1:6) பின் (1:3) (1:3) (1:3)(1:3) இதற்குமேல் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் எப்படி தொடர முடியும்? \\ கொஞ்சம் இருங்க பாஸ் லேட்டஸ்ட் கம்பியூட்டர் ஒன்னு வாங்கியாந்து அதில் இதை Feed பண்ணி பார்க்கிறேன், அப்பவாச்சும் புரியுதான்னு......

  ReplyDelete
  Replies
  1. first vayiththukku feed pannunga udane puriyum!

   naan kooda athaiththaan senjen! :-)

   Delete
 7. யாரென தெரிகிறத- 2

  http://multistarwilu.blogspot.in/2012/11/vs.html

  ReplyDelete
 8. super... yarukum theireyatha pointsa Padam potu kadtirugenga.. good job.... but wate of time.. padam Mega Hit... so no use for your comment

  ReplyDelete
 9. யப்பா சாமி ஒன்னும் புரியல.. வுட்ரு நான் வரல ஏன்னா எனக்கு கணக்கு வீக்கு

  ReplyDelete