துபாயில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு
படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக படிக்கவில்லை, அவனது கல்வியை ஊக்குவிக்க பள்ளி எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மாணவனின்
தந்தை. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவன் கல்வியை மேம்படுத்தத் தவறியதற்காக Dhs 77,500 (ரூ.11 லட்சம்) செலுத்த
அந்தப் பள்ளிக்கு உத்தரவிட்டது.
மாணவன் தனியார் பள்ளியின் முதல் வகுப்பில் சரியாக படிக்காதபோதும், இரண்டாம் நிலைக்குப் பாஸ் செய்தனர். இரண்டாம் நிலையிலும் சரியாக படிக்காததால் மாணவனின் தந்தை இதுபற்றி பள்ளியிடம் கேட்டால் பதில் ஏதுமில்லை. அவனின் செயல்திறனை மேம்படுத்த பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதித்துப்போன தந்தை துபாய் நீதிமன்றத்தில் பள்ளியின்மீது வழக்கு தொடர்ந்தார்.