சைக்கோ தொடர்கதை - பகுதி 1

     இந்த உண்மைக் கதை யாரையும் புண்படுத்தவோ அல்லது காயப்படுத்தவோ எழுதப்பட்டதல்ல! நிறைய ஆபாசம்/வல்கர் இருந்தால் மன்னிக்கவும்! - அன்புடன் நிலவன்பன்.

     பொதுவா எனக்கு ஒரு குணமுண்டு! யாரைவாவது பார்த்தால் அப்போதே, அடுத்த கணமே என் மனது சொல்லிவிடும், இவன் யார்? எப்படிப்பட்டவன்னு. இது நல்லதுக்குத்தானே! என்றாலும் இதனால் பிரச்சினைகளும் உண்டு. மனது முடிவெடுத்துவிட்டால் பின் ஃபெவிகால் போட்டாலும் அவருடன் ஒட்டி பழக முடியாது. சரி கதைக்கு வருவோம்!

    மழை பெய்து ரோடெல்லாம் குளித்து பிரஷ்ஷா இருந்த சமயம். என் உடம்பெல்லாம் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டே என் ராசியான மொக்கை  CT-100ல் பெங்களூர் லால்பார்க்கின் வழியே கோணப்பன் அக்ரஹாராவிற்குப் போய்க்கொண்டிருந்தேன். சர்ட், பேன்ட், இதர இதர என நனையாத இடமே இல்லை. எனக்கு மழையில் பைக் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். அதுவும் ஆபீஸ் டைம் என்றால் ஆஹா!! அப்போது என் ஃபோன் ரிங்கியது.

வேலைக்காக துபாய் செல்வது என்று முடிவாகியிருந்த சமயம். பைக்கை  லால்பார்க்-கின் அருகே நிறுத்திவிட்டு போலீஸ் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு (அதான் ஹெல்மெட் போடலையே? 50-அழ வேண்டுமே?) போனை எடுத்தேன்.

   "Hellow! Nila?" (நா பேரு)

    "Yes speaking"

    "I am Charles Here, I'm going to join as a manager for your company in Dubai. Shall we meet? Can u come to my home? Note down the address ......... "


தமிழ்ச் செம்மொழி மாநாடு – சில உண்மைகள்

      திருப்பூரில் தங்கியிருந்த சமயம் அலுவலக நண்பி ஒருவர் டெல்லியிலிருந்து வந்திருந்தார். அவர் சுத்த ஹிந்தியர், தமிழ் தெரியாது. பணிகள் முடிந்து அவரை வழியனுப்ப கோவை ஏர்போர்ட்டுக்குச் செல்லும்போது வழி எங்கிலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான போஸ்டர்கள் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் அவர் கேட்டார், “என்ன இது? ஏதேனும் கோவில் திருவிழாவா?”

“இல்லை, தமிழ் மொழிக்கான ஒரு மாநாடு” என்றேன்

“இதனால் என்ன பயன்?”

“தமிழ் மொழி வளர இலக்கியம், கணினியில் அதன் பயனை மேம்படுத்த உதவிடும். தமிழ் மன்னர்களின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்” என்றேன்.

அவர் சிரித்துவிட்டுச் சொன்னார், “தோராயமாக இதற்கு எவ்வளவு செலவாகும்??

“ஒரு 1500 கோடி செலவாகும்!”

“என்னது 1500 கோடியா??? இது மாநாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட எல்லோருடைய சொந்த பணம்தானே???”

“இல்லையில்லை, இது தமிழ்நாடு அரசினுடைய பணம்”



ஹிந்தியர்கள்! - தலையங்கம்


          சமீபத்தில் என்னுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு. தமிழனுக்கு ஹிந்தி என்பது திணித்தாலும் வராது என்பது ஊர் அறிந்த விஷயம். இதற்கான காரணங்கள் சில தெய்வங்களையே சாரும். ஆனால் அந்த தெய்வங்களின் வாரிசு, பேரன், பேத்தி எல்லோரும் எங்கே என்ன படிக்கிறார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். இவைகள் முடிந்து போன விஷயங்கள். எனவே நடந்த நிகழ்வுக்கு வருவோம்.

    துபையில் இந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் இந்தியர்கள் (வேற பிரச்சினையே வேண்டாமே!). காலையில் வழக்கம்போல் பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றேன். உள்ளே நுழைந்ததும் எதிரே வந்த நண்பர் (மராத்தியர்), “கேஷா (எப்படி இருக்கிறீர்கள்) என ஹிந்தியில் கேட்டார்.
குட் என ஆங்கிலத்தில் பதிலளித்தேன். (நமக்கு பேசும்போது அது ஹிந்தி என்று தெரியும், அவ்வளவுதான்)

நான் ஹிந்தியில்தானே கேட்டேன், நீயும் ஹிந்தியில்தானே பதில் சொல்லவேண்டும் என்றார்.

பதிலேதும் சொல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?? என தமிழில் கேட்டேன்.
புரியவில்லை என்றார்.

நான் தமிழில்தானே கேட்டேன், நீயும் தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்??? மொழி என்பது மற்றவர் புரிந்துகொள்ள மட்டுமே தவிர நீயோ நானோ பேசுவதற்கல்ல! நாம் எந்த மொழியில் பேசினாலும் மற்றவர் புரிந்துகொள்ளவில்லையனால் அதனால் பிரயோஜனமில்லை என்றேன்.


தேசிய மொழியான ஹிந்தி தெரியாத நீயெல்லாம் ஒரு இந்தியானா? என்றார்.