Blogger Widgets

காதல் வசனம் காமெடி கலாய்த்தல்

காதல் வசனங்கள் 1:

அவன் : இவ்வளவு அழகா இருக்கியே? உன்னை எவன் பெத்தான்?
அவள் : போடா லூசு
அவன் : போடா லூசுதான் மாமா பேரா? ஹா! ஹா!
அவள் : நான் உன்னைச் சொன்னேன்!
அவன் : சரி விடு நம்ம குடும்பமே அப்பிடித்தான்!




காதல் வசனங்கள் 2:

அவன் : (போனில்) போடி லூசு
அவள் : டொக்
அவன் : ஹெலோ ஹெலோ!!  The number you have dialed is cutrrrrrently switched offff. (ஏர்செல் வாய்ஸ்)

அடுத்த நாள்-

அவன் : ஏண்டி நேத்து போனை கட் பண்ணின?
அவள் : நீ என்னை லூசுன்னு சொன்ன இல்ல? அதான் பீல் பண்ணட்டும்னு!
அவன் : ................
அவள் : ஹெலோ என்ன பதிலையே காணோம்?
அவன் : பீல் பண்ணிட்டு இருக்கேன்!
அவள் : பண்ணு நல்லா பண்ணு! அப்பத்தான் புத்தி வரும்!
அவன் : சாரிடி! என்னை மன்னிச்சிடு நேத்து தெரியாம உண்மையை சொல்லிட்டேன்! J



காதல் வசனங்கள் 3:

அவன் : (போனில் பேசிக்கொண்டிருக்கும்போது) என்ன ஒரே சத்தமா இருக்குது? உன் தம்பி வந்துட்டானா?
அவள் : இல்லை, அது பின்னாடி இருக்கிற காக்கா!
அவன் : ஓ! உன் அண்ணன் வந்துட்டானா! J



டிஸ்கி 1 : இதையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் ட்ரை செய்து வழக்கைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது வலக்கை ஒடிந்து போனாலோ அல்லது காதல் புட்டுகிட்டாலோ  அதற்கெல்லாம் நிலப்பெண்ணுக்கு & கம்பேனி எந்த வகையிலும் பொறுப்பேற்காது!

டிஸ்கி 2 : இதையெல்லாம் வெளியிடுவதற்காக நான் இதுவரை கடலை போட்ட, போட்டுக்கொண்டிருக்கும், கடலை போடப்போகும் அனைவரும் மன்னிக்க! ஆமென்!




இப்படியெல்லாம் செய்தும் உங்கள் காதல் புட்டுகிடலைன்னா இது அதுக்குன்னே ஒரு அறிவுரை - காதலில் தோற்பது எப்படி?


14 COMMENTS:

  1. "poda loosu"
    nanum theriyama unmaiya ularittean

    ReplyDelete
    Replies
    1. எப்படா இவன் போஸ்ட் பண்ணுவான், நாம கலாய்க்கலாம்னு காத்திருப்பாய்ங்க போலிருக்கு! போஸ்டை படிக்கவே 5 நிமிடம் வேணுமேடா?

      Delete
  2. ஹய்யோ.. ஹய்யோ..

    ReplyDelete
  3. சப்பா... முடியல!

    ReplyDelete
  4. சொல்லப் போனா இப்படித்தான் இருக்காங்க நிறைய பேர் .

    ReplyDelete
  5. hahahahahahahahahahahahahahaha

    ReplyDelete
  6. டிஸ்கி 1 2 தான் ரொம்ப நல்லா இருக்கு நிலவன்பன்.

    ReplyDelete
    Replies
    1. டெர்ரரா சொல்லும்போது இன்னா சிப்பு?

      Delete
  7. இப்ப யூத்ஸ் (நாங்க) எல்லாரும் இப்பிடித்தான்.....ஹிஹிஹி !

    ReplyDelete