Blogger Widgets

சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

  சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும் 2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள் பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் - அது சிங்களம்.

தமிழ் - சிங்களம்

அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா - அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
அண்ணா- ஐயா
அப்பா - தாத்தா
ஆச்சி - ஆச்சி
மாமா - மாமா
இலக்கம் - இலக்கம
அங்கம் - அங்க
அங்கூரம் - அங்குர
அங்கம்/பிரிவு - அங்ஸய
வீதி -வீதி
இரட்டை - இரட்ட
வாகனம் - வாகனய
உதாரணம் - உதாரணய
முதலாளி - முதலாளிய
குடை - குடைய-
கடை -கடைய
அப்பம் - ஆப்ப
இடியப்பம் - இதியாப்ப
வடை - வடே
தினம் - தினய
காலம் - காலய
வருடம் - வர்ஸய
சரீரம் - சரீரய
இடம் - இடம
மூலஸ்தானம் - மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் - ஆகாரய
நீர்/ஜலம் - ஜலய
சக்தி - சக்திய
உச்சம் - /உஸ
விசேடம் - விஷேச
கல் - கல்

இரசாயனம் - ரசாயன
திரவியம் - திரவ்ய
வர்ணம் - வர்ண
சாதி - ஜாதிய
பொது - பொது
பெரிய/மா - மா
வீரர் - வீரு
மக்கள் /ஜனம்/சனம் - ஜனதாவ
சமாதானம் - சமாதான
சீனி - சீனி
அவசியம் - அவஷ்ய
யுத்தம்- யுத்தய
நீதி -நீதிய
அநீதி - அநீதிய
அகாலம் - அகால
வனம் - வனாந்தரய
பிரதான - பிரதான
முதல் - முல்
பிரகஸ்பதி(வியாழன்) -பிரகஸ்பதின்தா
சாகரம் (கடல்) - சாகர/முகுத
வர்த்தி/அரசன் - வர்த்தனா
பிரசித்தம்/ அறிவிப்பு(விளம்பரம்) - பிரசித்த
நடத்துதல் - நடத்துகரனவா
நிர்மாணித்தல் - நிர்மாணகரனவா
பாவித்தல் - பாவிதாகரனவா
கதை - கதா
ஆதாயம் - ஆதாயம
இலாபம் - இலாபய

கபடம் - கபடிய
பாஷை/மொழி - பாஷா
காரியாலயம்/பணிமனை -கார்யாலய
வித்தியாலயம்(வித்தை + ஆலயம்) - வித்யாலய
கோயில் - கோவில
விரோதம் - விரோத
பக்கம்/ அணி/கட்சி - பக்‌ஷய
நரி - நரியா
சிங்கம்/அரிமா - சிங்கயா 
பட்டியல் நீள்வதால் மேலும் சொற்களுக்கு காண விக்கிப்பீடியா


"அம்மா" (அம்மே) வார்த்தையே நாங்க கொடுத்திருக்கோமே போயும் போயும் காலடி நிலம் - அதைக் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க? அம்மா வார்த்தைக்கு ஈடு இணை உண்டா?

டிஸ்கி : உலகில் இருக்கும் ஒரே ஒரு சீதையின் கோவிலை நீங்கள் இன்னும் பார்க்காமல் இருந்தால் பார்க்கவும்


8 COMMENTS:

  1. சிங்களம் என்பது மொழியா? 60வீதம் தமிழயும் பாலி மற்றும் வடமொழிகளின் கலப்பே சிங்களம். என்ன தான் வீராப்புப் பேசினாலும் இதை அவர்களால் இல்லை என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  2. இங்கு தமிழ்ச்சொல் என்று தொகுத்துள்ளதில் 80% சமஸ்கிருத்தில் இருந்து தமிழுக்கு வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா...?

    ReplyDelete
    Replies
    1. மூலஸ்தானம்
      ஸ்தானம்
      ஜலம்
      விசேடம்
      சாதி
      ஜனம்
      பிரகஸ்பதி(வியாழன்)
      வர்த்தி (சக்கரவர்த்தி)
      பாஷை
      // இவைகளெல்லாம் இந்து சமய வழிபாடலுடன் தமிழில் கலந்தவை //

      150ல் 8 வார்த்தைகள் என்பது 5.3% மட்டும்தான். ஒருவேளை நான் படித்த ஸ்கூல்ல தப்பா சொல்லிக்கொடுத்துட்டாங்களோ?

      இரை (இரா)என்ற சொல் சமஸ்கிருதத்திலும் உண்டு. அதற்காக அதன் மூலம் சமஸ்கிருதம் அல்ல. அச்சொல் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு சென்றவை

      :-)

      Delete
  3. நல்ல தகவல்கள். நன்றி!

    ReplyDelete
  4. சமஸ்கிருத மொழியின் மூலமொழி தெரியுமா? இரானியன் மொழியிலிருந்து தோன்றியதே சமஸ்கிருத மொழி.
    இரானியன் -> ஆர்யோ-இரானியன் -> இண்டிக் -> சமஸ்கிருதம்.

    ReplyDelete
  5. ''நான் பதிவர் அறிமுகம்'' - ''நிலாப்பெண்ணுக்கு''

    தொழிற்களத்தில் தங்களை பற்றிய அறிமுகம் வெளியிடப்பட்டுள்ளது....

    அறிந்து கொள்ள கீழே சொடுக்கவும்....

    http://tk.makkalsanthai.com/2012/09/blogger-introduction-nana-pathivan.html

    நன்றி சகோ...

    ReplyDelete
  6. அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...

    ReplyDelete