உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
மச்சா உனக்கு குவாட்டர் அடிச்சாதான் போதை, ஆனா நீ மூடியை மோந்து பார்த்தாலே போதையாய்டுவ அது வேற விஷயம். ஆனா என் ஆளு அம்முக்குட்டி, செல்லக்குட்டி, ஜாங்கிரிய நினைச்சாலே போதை; அவளைப் பார்த்தாலே போதை! ம்ம்மா!
உடம்பொடு
உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
மடந்தையொடு எம்மிடை நட்பு.
சாலமன்
பாப்பையா உரை:
உயிர் உடலை பிரியுமாய்யா? உடல்தான் உயிர பிரியுமாய்யா? அப்படி பிரிஞ்சுதான் இருக்க முடியுமாய்யா? முடியாது. அந்த மாதிரிதான் என் காதலியும், அவளை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
போழப் படாஅ முயக்கு.
அடேய் கோமுட்டித்தலையா லவ்சு வந்தாலே கிக்குதாண்டா, அதிலயும் எனக்கும் அவளுக்கும் நடுவுல காத்தே வராம இருக்க்க்கமா கட்டி புடிக்கிறதில இருக்கிற கிக்கே தனிடா.
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
வடிவேலு உரை:
திவ்வு குட்டி, திவ்வு செல்லம் மாமன் மேல அவ்ளோ ஆசைய வச்சிக்கிட்டு என்னை கட்டிபுடிக்காம இருந்தாலும், என்னை கோவமா பார்த்தாலும், என் கண்ணு உன்னைப் பார்க்காம இருக்காதுடி செல்லம்!
கண்ணுள்ளார்
காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
கோவை சரளா:
பெருமாள், நீங்க என்ர கண்ணுக்குள்ளேயே இருக்கிதால மை வச்சா மறைஞ்சிடுவீங்கலோன்னு நானு மையே வைக்கறதில்லை. நீங்க என் கண்ணுக்குள்ளயே கட்டுண்டு இருங்கோ!
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
அவரை பாக்கிறதுக்கு முன்னாடி, பார்த்த உடனே சண்டைபோடனும்னு நினைச்சேன். ஆனா அவரைப் பார்த்தனோ இல்லையோ உடனே எல்லாத்தையும் மறந்துட்டு அவரோட சேரவே போயிட்டேன், ச்சீ! ச்சீ! எனக்கு வெக்க வெக்கமா வருது.
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
டி. ராஜேந்தர் உரை
கடல் தாங்க முடியாத அளவுக்குக் காதல் வரக்காரணம் கண்ணும்மா,
இப்போ தூங்க முடியாம வலியால் வாடுதும்மா.
இப்போ தூங்க முடியாம வலியால் வாடுதும்மா.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
செவ்வி தலைப்படு வார்.
காமம் அப்படிங்கறது மலரை விட மென்மையானது. மலர் அப்படின்னா பொண்ணு பேர் கிடையாது பூ. பூ எவ்ளோ மென்மையானது? காமம் அதைவிட மென்மையா இருக்கனும், உன் வெறித்தனத்தையெல்லாம் அங்கே காட்டக்கூடாது :-)
Tweet |
மிக அருமையான பதிவு .. கலக்கல்....
ReplyDeleteதொடர்ந்து வருவேன்
ReplyDeleteஎன் பின்னாடி பார்த்தா உங்களை காணோமே?
Deleteகாமம் அதைவிட மென்மையா இருக்கனும், உன் வெறித்தனத்தையெல்லாம் அங்கே காட்டக்கூடாது :-)
ReplyDelete//note this point அன்பர்களே
சுவாகா!
Deleteஇப்பிடியெல்லாம்..............யோசிக்கிறாங்கப்பா !
ReplyDelete