Blogger Widgets

ஜோக்ஸ் - தமிழ் மன்னர்கள் செய்த மெகா காமெடி.நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தான் அதியமான் நெடுமான் அஞ்சி.பின்னே அவனுக்கு இருந்தது ஒரே ஒரு மனைவி. இவன் மட்டும் நெடுநாள் தனியா இருந்து என்னய்யா பிரயோஜனம்? அதனால அந்த நெல்லிக்கனியை பிரம்மச்சாரி ஒளவைக்கு கொடுத்துட்டான். என்னமா யோசிச்சிருக்கான்யா? அப்பவே பிளான் பண்ணி பண்ணியிருக்கான்.


குளிர்காலத்தில் அகவிய(VOICE) மயிலுக்குப் போர்வை அளித்தான் வள்ளல் பேகன் மன்னன்.

அவன் ஆண்ட பழனிமலைல போர்வை போர்த்திட்டு மாறுவேடத்தில மயில் திருடப்போனபோது, அது சத்தம் போட்டிருக்குது. சத்தம் போடாம இருக்க அதுமேல போர்வையை போட்டிருக்கார் (நம்மூர்ல கோழி திருடுவோமில்லையா அந்தமாதிரி). ஆனா சத்தம் கேட்டுவந்த வீட்டுக்காரங்க "மயிலுக்கு போர்வை கொடுத்தாரு...... மன்னர் மயிலுக்கு போர்வை கொடுத்தாரு"ன்னு வள்ளலாகிட்டாங்க.

முல்லைக்குத் தேர் தந்தான் பாரி வள்ளல்.

காட்டில் மான் வேட்டையாடப் போகும்போது தேரை நிறுத்திவிட்டு நடுக்காட்டுக்குள்ள போனவனுக்கு வழி மறந்துபோச்சு. தேர் இருந்த இடமும் மறந்து போச்சு. காட்டுக்குள்ளேயே திரிந்து ஒரு வாரம் கழித்து தேரை கண்டிபிடித்தான். ஆனா அதுமேல முல்லைக்கொடி வளர்ந்திடிச்சி. அங்கிருந்தவங்க எல்லோரும் "முல்லைக்குத் தேர் தந்த பாரி வாழ்க" அப்படின்னு அவனை வாழ்த்தினாங்க! அப்புறம் தேரை எடுக்கவா முடியும்? "சண்டாளப்பயலுகளா"ன்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே அரண்மனைக்கு நடந்து போய்ட்டார்.


நீலநாகம் கொடுத்த ஆடையையை   ஆலமரத்தின் கீழிருந்த   சிவபெருமானுக்கு கொடுத்தார் ஆய் வள்ளல்.


பின்னே நாகப்பாம்போட சட்டையை அவரா போடமுடியும்? உபயோகமே இல்லாததை இவராவது போட்டுக்கிடட்டும்னு சிவபெருமானுக்கு கொடுத்துவிட்டார்.
வாடிய பயிரை கண்ட போது வாடினார் இராமலிங்க சுவாமிகள்! 


பின்னே அவர் தோட்டத்தில பயிர் வாடினா அவர் வாடாம என்ன சிரிக்கவா செய்வார்சோறு யார்யா போடுவாங்க?பின்குறிப்பு : அண்ணாத்தே இதெலாம் சும்மா காமெடிக்கு; இதுக்கீலாம் ஆட்டோ அனுப்பப்படாது, ஓ.கே?


11 COMMENTS:

 1. இதை காமெடியாக பார்த்தாலும் காவியங்களில் உயர் செய்கையாகவே பார்க்கப்படுகின்றன...

  ஆனாலும் கூறிய விதம் சிரிப்பை வர வைத்தது அண்ணா...

  ReplyDelete
 2. அழகு...


  புராணத்தையும் கிண்டல் அடிச்சாச்சா...
  ரைட்டு...

  ReplyDelete
 3. gana nerathil uthiththadhu indha yosanai,


  shappaa ithukku imsai arasanea dhevalai pola irukkea
  awww...........

  ReplyDelete
 4. இருங்கோ இருங்கோ....உங்களைக் கடிக்கவும் ஆக்கள் வருவினம் !

  ReplyDelete
  Replies
  1. வரட்டும் வரட்டும்

   Delete
 5. இவற்றை நகைச்சுவையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை :(

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா திட்டி கமெண்ட் பண்ணனும், உங்ககிட்ட நான் இன்னும் எதிர்பார்க்கிறேன் :-(

   Delete
 6. விஷ்வரூபம் பார்த்த பிறகாவது திருந்துங்கள். கூட்டத்தை கூட்டுங்கடா. இப்பதிவை தடை செய்ய வேண்டும். இது என்னை புண்படுத்துகிறது..lol

  ReplyDelete