ஆஸ்திரேலிய பழங்குடியினர் தமிழர்கள்?

 இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! கட்டுரையை படித்துவிட்டு வரவும்!


 இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது.

 ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்.


சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

  சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும்,  2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள் பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் - அது சிங்களம்.

தமிழ் - சிங்களம்

அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா - அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
அண்ணா- ஐயா
அப்பா - தாத்தா
ஆச்சி - ஆச்சி
மாமா - மாமா
இலக்கம் - இலக்கம
அங்கம் - அங்க
அங்கூரம் - அங்குர
அங்கம்/பிரிவு - அங்ஸய
வீதி -வீதி
இரட்டை - இரட்ட
வாகனம் - வாகனய
உதாரணம் - உதாரணய
முதலாளி - முதலாளிய
குடை - குடைய-
கடை -கடைய
அப்பம் - ஆப்ப
இடியப்பம் - இதியாப்ப
வடை - வடே
தினம் - தினய
காலம் - காலய
வருடம் - வர்ஸய
சரீரம் - சரீரய
இடம் - இடம
மூலஸ்தானம் - மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் - ஆகாரய
நீர்/ஜலம் - ஜலய
சக்தி - சக்திய
உச்சம் - /உஸ
விசேடம் - விஷேச
கல் - கல்


காதலர் தினம் தமிழர் விழா? 2500 ஆண்டுகளுக்கு முன்பே காதல் விழா கொண்டாடிய தமிழர்கள்!

காதலர் தினம் என்றால் மேற்கத்திய திருவிழா என்றுதானே இதுவரை நினைத்துக்கொண்டிருந்தோம்? ஆனால் உண்மை அதுவல்ல. காதலர் தினம் முதன்முதலில் பண்டைய  தமிழகத்தில் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா.



ரோமில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான். ஆனால் பண்டைத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருந்திருக்கிறது. பூம்புகாருக்கு வர்த்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் அதை ரோமில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


தமிழர் - ரோமானியர் வர்த்தகம்:

ரோம் மன்னர் அகஸ்டஸ் காலத்தில் கி.மு 1-ம் நூற்றாண்டில் ரோமிற்கும், பண்டைத் தமிழகத்திற்கும் இடையான வர்த்தகம் துவங்கியது. லத்தீன் மொழியில் சேர மன்னர் (முசிறி துறைமுகம்) பாண்டிய மன்னர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பைபிள் 10:22 : சாலமன் மன்னனின் வர்த்தகக் கப்பல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள், வெள்ளி, யானைத்தந்தம், மயில்களை ஏற்றிக்கொண்டு திரும்பியிருக்கின்றன. பண்டைய இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே மயில்களும் யானைத்தந்தமும் இருந்தது.

ரோம் - தமிழர் வர்த்தகம்


2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்!

  இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு பற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். 
அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்)

  தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

  உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

  Olmec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

  இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

கடலில் மூழ்கிய தமிழர்களின் வாணிகக் கப்பல்:

  நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.





ஜோக்ஸ் - தமிழ் மன்னர்கள் செய்த மெகா காமெடி.



நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தான் அதியமான் நெடுமான் அஞ்சி.



பின்னே அவனுக்கு இருந்தது ஒரே ஒரு மனைவி. இவன் மட்டும் நெடுநாள் தனியா இருந்து என்னய்யா பிரயோஜனம்? அதனால அந்த நெல்லிக்கனியை பிரம்மச்சாரி ஒளவைக்கு கொடுத்துட்டான். என்னமா யோசிச்சிருக்கான்யா? அப்பவே பிளான் பண்ணி பண்ணியிருக்கான்.






குளிர்காலத்தில் அகவிய(VOICE) மயிலுக்குப் போர்வை அளித்தான் வள்ளல் பேகன் மன்னன்.

அவன் ஆண்ட பழனிமலைல போர்வை போர்த்திட்டு மாறுவேடத்தில மயில் திருடப்போனபோது, அது சத்தம் போட்டிருக்குது. சத்தம் போடாம இருக்க அதுமேல போர்வையை போட்டிருக்கார் (நம்மூர்ல கோழி திருடுவோமில்லையா அந்தமாதிரி). ஆனா சத்தம் கேட்டுவந்த வீட்டுக்காரங்க "மயிலுக்கு போர்வை கொடுத்தாரு...... மன்னர் மயிலுக்கு போர்வை கொடுத்தாரு"ன்னு வள்ளலாகிட்டாங்க.


மனிதன் அழிந்துவிடுவானா? எல்லா நாகரீகங்களும் அழிந்துபோகக் காரணமென்ன?

இந்தக்கேள்விக்கான விடை, கீழுள்ள கதையைப் படியுங்கள் புரியும்!

ஈஸ்டர் தீவின் மர்மங்கள்:

   ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன. இத்தீவுக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.



  இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.


எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதா?

  இது கட்டுக் கதையல்ல.  கண்ணீரால் நிறைந்த நிஜம்.. நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ராஜீவ் படுகொலை தொடர்பான புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது என்பதினை படிக்க படிக்க உறக்கமின்றி தவித்தேன்...


  அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை "ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.  குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு" என்று 100ரூபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.


   ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும்  ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
காமராஜர் என்றொரு எளிய இதயம் - இறைவனைப்போல்
   அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச்சொன்னார்..வீட்டிலுள்ளவர்களை..அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார். "அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார். 

   முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா" என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்" என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.


தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!

  தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.


  உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.


  எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.