Home
ஜோக்ஸ்
தத்துவம்
தொழில்நுட்பம்
சினிமா
மனதைத் திற
கவிதை
SEARCH
காதல் கவிதைகள்!
நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 3
என்னை மறக்கடித்தவளே!
என்னை மறந்தாலும்
உன்என்னை மறந்துவிடாதே!
கண்களால் நான் சொல்வது
காதல் காதல் என்றறிந்தும்
உணர்வின்றி உணர்ச்சியின்றி
ஒன்றும் அறியாதவளாய்ப் போகையில்
எப்படிச் சொல்வேன்? – நான்
உன்னைக் காதலிக்கிறேன் என்று.
காதல் கவிதைகள்!
நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 2
அடிக்கடி மவுனங்களால்
மனதை
உறைய வைக்கிறாய்!
அடிக்கடி புன்னகையால்
மனதை
உரசிப் புண்ணாக்குகிறாய்!
நம் மனதின் தேசியகீதமே
மவுனம்தானோ?
தினம் ஒரு பூவைச் சூடுபவளே
என் மனதில் சூடிய
ஒரு பூவே
வாழ்நாள் முழுதும் மனம் வீசிக்கொண்டிருப்பது
உனக்கெப்படித் தெரியும்
அது நீயாய் இருந்தும்?
பேச்சில்லை நீ பேசும்போது
மூச்சில்லை நீ பார்க்கும்போது
நானேயில்லை நீ இல்லாதபோது.
காதல் கவிதைகள் நிலாப்பெண்ணுக்கு தொகுதி - 1
நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 1
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
உன் உறங்காத கனவுகளோடு
நான் விழித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்பற்றிய நினைவுகளோடு
பூக்களுக்கும் உனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
நீ மட்டும்தான்
நடக்கும் பூ.
நன்றி! நன்றி! நன்றி!
காதலிக்கும் நன்றி!
காதலுக்கும் நன்றி!
காதலன் என்னைக்
கவிஞனாக்கியதற்கு....
இதயம் நனையட்டுமே? - இயற்கை கவிதைகள்
வழியெல்லாம் மழை
,
குடையுடன் நான்
இதயம் நனைந்துவிட்டது!
யாரேனும் ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை!
குறுகுறு பார்வை
,
மறைக்க முயலும் தெற்றுப்பல்
,
தலைமுடி கோதும் விரல்கள்
என உன் சாயலில்
ஏதேனும் யாரேனும்
ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை!
கடவுள்
ஒவ்வொருமுறை உன்னிடம் வரும்போதும்,
ஒவ்வொருமுறை உன்னை வேண்டும்போதும்
வரம் கொடுக்கிறாயோ இல்லையோ,
மறக்காமல் கொடுத்துவிடுகிறாய்
ஒரு கை பிரசாதம்!