Blogger Widgets

கடவுள் எத்தனை பேர்யா இருக்காங்க?

  இரவு பத்து மணிக்கு நானும் இன்னொரு நண்பரும் சாப்பிட போனோம்! நான் சிக்கனை ஆர்டர் செய்துவிட்டேன், அவனுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன்!

இன்னிக்கு ஹனுமான் ஜெயந்தி அதனால் நான் நான்வெஜ் சாப்பிடமாட்டேன் என்று சொன்னான்!

யாரு ஹனுமான்?”

கடவுள்!!

(இதோட வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்!)

அப்படின்னா ஹிந்து கடவுள்கள் குறைந்தபட்சம் ஆயிரமாவது இருக்குமல்லவா?

ம்ம்ம் இருக்கும்!

அப்படின்னா ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு சாமி பொறந்திருக்கும்! எல்லா சாமியும் ஒரே நாளில் பொறந்திருக்க கண்டிப்பாய் முடியாது! அப்போ நீ நான்வெஜ் எப்பவுமே சாப்பிடக் கூடாது!
இன்னும் இருக்கு - நமக்குதான் இடம் போதவில்லை

  “உனக்கு கிரிக்கெட் பிடிக்கும், இந்தியா விளையாடுற போட்டிகள பார்க்குற! அதற்காக தமிழ்நாடு விளையாடுற ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் போட்டிகளை ஏன் பார்ப்பதில்லை? அதே போல் பங்களாதேஷ் விளையாடுற போட்டிகளை ஏன் பார்ப்பதில்லைஎல்லாமே கிரிக்கெட்தானே? நீ ஏன் எல்லா போட்டிகளையும் பார்ப்பதில்லை?

(ரூம் போட்டு யோசிச்சாலும் இதற்கு பதில் சொல்ல முடியாது போலிருக்கே!)

அதே போல்தான் நானும் எனக்கு விருப்பமான கடவுளின் தினத்தில் விரதம் இருக்கிறேன்!

(நான் எதுவும் பேசவில்லை)

இப்படி வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கிறதே நம்ம பொழப்பா போச்சு!



முடிவுரை: 

  நன்றி – தமிழ்பொண்ணு ரிஷி! : என்னை பொறுத்த மட்டில் விரதம் இருப்பது நல்லது! அவர்களை நாம் தடுக்கவோ குறை சொல்லவோ கூடாது friend! விரதம் இருந்தால் சிலருக்கு அவர்கள் தாங்கள் கடவுளிடம் கேக்கும் காரியங்கள்! நிறைவேறும் என்று ஒரு நம்பிக்கை!

அது மட்டும் இல்லாமல் விரதம் இருந்தால் தான் சில தவறான பழக்கங்கள் தவறான சிந்தனைகளில் இருந்து நம் மனத்தை கட்டு படுத்த முடியும்! இந்த திறன் விரதம் இருப்பதன் மூலம் நமக்குள் வளரும் இது தான் விரதம் இருப்பதன் என் கொள்கை!!!!!!!!!!!!!


9 COMMENTS:

  1. thevaiya intha avamanam,
    evan viratham irundha enna,

    ReplyDelete
  2. நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !

    Read This Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html

    ReplyDelete
  3. உருவ வழிபாடு இந்துமதத்தில் முதல் படி. மனதை ஒருமுக படுத்த ஒரு வழி. இது பலருக்கும்(உங்களையும் சேர்த்து) புரியாததால் தான் இது போன்ற கிண்டல்கள் எழுகின்றன. புரிந்து கொள்ளமுடியாதது நம் தோல்வியே அன்றி மதத்தின் தோல்வி அல்ல..

    ReplyDelete
    Replies
    1. இப்படி வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கிறதே நம்ம பொழப்பா போச்சு! :(

      Delete
  4. ஏதோ எழுதியிருக்கின்க வாசிச்சன் அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. உன் குத்தமா? என் குத்தமா?
      யார நானும் குத்தஞ்சொல்ல!

      Delete
  5. என்னோட வொய்ஸ்ல சொன்னமாதிரி இருக்கே !

    ReplyDelete