முதல் ரவுண்டு பேச்சுவார்த்தை நடக்கிறது – தேமுதிக



1. நேரம் இல்லாததால் திருச்சி இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம் -விஜய்காந்த்!

நல்லவேளை உங்களுக்கு உள்ளாட்சி தேர்தலுக்காவது நேரம் கிடைத்ததே!

 

2. ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த முடியாது- சிபிஐ திட்டவட்டம்

அப்படியே ராசா, கனிமொழி, கல்மாடி இவங்க மீதும் விசாரணை நடத்த முடியாதுன்னு சொல்லீட்டிங்கனா நாங்க எங்க வேலையையாவது  பார்ப்போம்!

 

3. ப.சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்கக் கூடாது -ராசா திடீர் 'அந்தர் பல்டி'- 

சார் நீங்க இதுக்கு முன்னாடி சர்கஸ்ல வேலை செஞ்சீங்களா என்ன?


 


4. ஜெயலலிதாவால் கழட்டிவிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வைகோ, விஜயகாந்த், தா.பாண்டியன் என நீண்டுகொண்டே போகிறது!


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!


ஹைக்கூ...










கடவுளின் தவறுகூட

அழகுதான்,
உதாரணம்-
உன் தெற்றுப்பல்!


தேரும் கடவுளும்!!!


அமர்க்களமாய்த் தேர்,
உள்ளிருந்த கடவுளுக்கோ
ஆவல்!
வருடத்தில் ஒருநாள்தானே
ஊரைச் சுற்றி பார்கிறார்!

அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி
தேரை இழுக்கப் போவதால்!
அனைவரும் இழுத்தனர்.
நடுவீதியை அடைந்தது தேர்.
அதற்குப் பின்தான் குழப்பமே
யார்வீதியில் முதலில் இழுத்துச் செல்வதென்று!

ஒரு மேல்சாதிக்கும்,
மற்றுமொரு மேல்சாதிக்கும்
வாக்குவாதம்.

சூடத்தை ஏந்திய
கைகளில்
அரிவாள்களும், கத்திகளும்
நடுங்கினார் கடவுள்.
தவறுதலாய்த் தன்னை
ஒரு சாதியாய் நினைத்து
மற்ற சாதியினர்
வெட்டிவிடுவார்களோ? என்று.

முடிவாய்க் கடவுளிடமே
கேட்டனர் மக்கள்,
யார் வீதியில்
முதலில் இழுத்துச்செல்வது?”

மனிதர்கள் இருக்கும் வீதியில்
முதலில் இழுத்துச்செல்லுங்கள்
கடவுளின் பதில்.

அனைவருக்கும் ஒரே குழப்பம்
மனிதர்கள் எந்த வீதியில்
இருக்கிறார்கள்???

கடவுளின் பதிலால்
நடுத்தெருவில்
அனாதையாய்
தேரும், கடவுளும்!!


சர்தார்ஜியும் கொள்ளைக்காரர்களும்!



     கொள்ளையர்கள் ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு அனைத்து போன் ஒயர்களையும் துண்டித்துவிட்டு வங்கியின் உள்ளே நுழைந்தனர். உடனே அங்கிருக்கும் அனைவரையும் ஓரமாக நிற்க வைத்துவிட்டு கேஷியரிடம்  இருந்து பணத்தை எடுத்துக்கொண்டனர். மற்றவர்கள் ஒரு சுவர் ஓரமாக பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

      உடனே கொள்ளையர் தலைவன் “இங்கிருக்கும் அனைவரிடம் இருந்தும் செல்போன், நகை, பணத்தை பிடிங்கிக்கொள்ளுங்கள்” என்று ஆணையிட்டான்! 


அப்போது யாருக்கும் தெரியாமல் அங்கு வேலை செய்யும் சர்தார்ஜி அந்த வங்கியின் மேனேஜரிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.

மேனேஜர் மெதுவாக "என்ன இது???”



காங்கிரஸ் கோஷ்டிகள் உண்ணாவிரதம்


சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் உண்ணாவிரதம் இருக்கப்போகின்றனர்!

தலைமை மற்றும் துவக்கம் : தங்கபாலு கோஷ்டி

முடித்து வைப்பவர் : ஈவிகேஎஸ். இளங்கோவன் கோஷ்டி
நேரம் :  9 மணி - மாலை 5 மணி
இடம் : சென்னை தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் பின்புறம்


அண்ணே இதுல நீங்க எந்த கோஷ்டி?



காதல்






காதல்
இன்னும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது
என் தாடிக்குள்ளும்,
உன் நாடிக்குள்ளும்!


தங்கபாலு கிச்சு கிச்சு பேச்சு



தற்போதைய செய்திகள் :



    1.   தமிழகத்தின் 12,618 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான இடங்களிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கிச்சு கிச்சு பேச்சு.

அவரு எப்பவுமே இப்படித்தான்! ஒரு சின்ன டவுட்? இவ்வளவு பேர் கட்சில இருக்காங்களா என்ன?
2.   ஜாமீன் கோரி கனிமொழி-சரத்குமார் மனு: அக். 10ல் விசாரணை.

எல்லா மார்கெட்டுக்கும் போய் கேட்டோம்னே! நெய்மீன் இருக்குங்க்கிறான் நெத்திளிமீன் இருக்குங்க்கிறான் ஏன் சுறா கூட இருக்குங்க்கிறான் ஆனா ஜாமீன் மட்டும் இல்லேனுட்டான்!


அடுத்த பிரதமர் - நரேந்திர மோடி!!!



தேர்தல் 2014 :




2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (பிறப்பு 17 செப், 1950) போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தினம் ஒரு ஊழல், மணிக்கொரு கைது என காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை மக்கள் கொதிப்பில் உள்ளனர். அன்னா ஹசாரேவை கைது செய்தது, அவரை திகார் சிறையில் அடைத்தது, பாபா ராம்தேவை நடத்திய விதம், 2G ஊழல் அடுத்த பத்து வருடங்கள் நடக்கும் என்பதாலும், காமன்வெல்த் ஊழல், செயற்கைக்கோள் ஊழல் (இது மறைக்கப் பட்டுவிட்டது) இன்னும் வராத ஊழல்கள் எத்தனையோ??? (India corruption என்றால் கூகுள் மொத்தம் 141,000,000 results-ஐ தருகிறது.)

2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்துநரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அவரை பாஜக தேசியத் தலைவராக்கவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. குஜராத் சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது. நரேந்திர மோடி மீது குஜராத் கலவர வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்படுகிறது. 


குடியும், யோகாவும் ஒன்று என ஒரு ஆய்வு உறுதிசெய்கிறது!

     குடியும், யோகாவும் ஒன்று என ஒரு ஆய்வு உறுதிசெய்கிறது!


Savasana:



  மொத்த தளர்வு நிலை.




Balasana:



  அமைதியான உணர்வை கொடுத்தல்



பெண்பித்தன் – சுட்டவை 40



ஒரு ஊரில் இரு இணைபிரியா  நண்பர்கள்  இருந்தார்கள். ஒருவன் சோமு, இன்னொருவன் ராமு. ராமு பெயருக்கேற்றவாறே மிகவும் நல்லவன். குடிக்க மாட்டான், பெண்களுடன் ஊர் சுற்ற மாட்டான். ஆனால் சோமு அப்படியில்லை, எப்பொழுதும் குடி, பெண்கள் என்று வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தன். ஒருநாள் இருவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது, ஒருவேளை இருவரில் யாராவது முதலில் இறந்து போய்விட்டால் என்னசெய்வது? இருவரும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள், அதாவது ஒருநாள் யாராவது முதலில் இறந்துவிட்டால் அவர் மற்றவர் கனவில் வந்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள்அவர்கள்  இருப்பது நரகத்திலா அல்லது சொர்கத்திலா என்று சொல்ல வேண்டும் என்றும் உடன்பாடு செய்து கொண்டார்கள். 

அதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தில் சோமு இறந்துவிட்டான். ராமு அவனை நினைத்து ஒருமாதம் முழுதும் அழுது புலம்பினான். பின் ஒருவழியாக வழக்கம்போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். பிறகு இப்படியே இரண்டுவருடம் கழிந்து போனது. ஒரு வழியை முற்றிலும் சோமுவின் நினைவுகளை மறந்து விட்டான். திடிரென ஒருநாள் கனவில் ராமு வீட்டு தொலைபேசி அடித்தது.

“ஹலோ நான் சோமு பேசுகிறேன்.”


என்னவள்! - சுட்டவை 40


என்னவள்!




நீ
சேலைக்கடையில்
நுழைந்தால்,
சேலைகள் எல்லாம்
சினுங்குகின்றன
“என்னைக் கட்டிக்கொள்”
“என்னைக் கட்டிக்கொள்”
என்று என்னைப் போலவே!

-கவிஞர் சோலவலசு ஜெயராம்!







எவ்வளவோ கவிதைகள் இருந்தாலும் இதற்கே இப்பகுதியில் முதலிடம்!




TAMIL RADIO ONLINE LIVE - தமிழ் வானொலி நேரலை

LISTEN ALL TAMIL RADIO LIVE - தமிழ் வானொலி நேரலை


நிலாப்பெண்ணுக்கு தேடல்!


Loading









பிரபுதேவா பேட்டி:






என் மேல் வைத்திருந்த காதலுக்காக திரையுலகில் நடிப்பதை தியாகம் செய்தவர் நயன்தாரா. அவர் சீதைப் படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு படமான ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் கிடைத்த வாய்ப்புகள் மாதிரி புனிதமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் திருமணத்திற்கு முன்பு நடித்துக் கொடுக்க இப்போதும் தயாராக இருக்கிறார். எனக்கும் நயன்தாராவுக்கும் நடக்க இருக்கும் திருமணம், உலகுக்கு வெளிப்படையாக இந்த நேரத்தில், இந்த நாளில் என சொல்லப்பட்ட பின்பே நடக்கும்." பிரபுதேவா பேட்டி. 



உங்க மனைவி உங்களுக்காக அவங்க வாழ்கையவே தியாகம் செய்தாங்களே!
பருவத்துல பன்னிக்குட்டிகூடத்தான் அழகா இருக்கும்!


விஜயகாந்த் டெர்ரர் பேட்டி:












          






 நீங்க நடிக்கரத நிறுத்திட்டா அவங்க ஏன் காமெடி பண்ணப்போறாங்க...


காதல்






கண்கள்
செய்து கொண்ட
கலகத்தில்
ரணப்பட்டுப்போனது
எனது இதயம்!












தினமலருக்கு ஒரு மறுப்பு கடிதம்


இன்று தினமலரில் வந்த கட்டுரையும் அதற்கு நமது மறுப்புக் கடிதமும்:-

செய்தி : ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்:

சென்னை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர்.

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர். இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை. இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?இதிலிருந்து என்ன தெரிகிறது

இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள். சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.