Blogger Widgets

பெண்பித்தன் – சுட்டவை 40



ஒரு ஊரில் இரு இணைபிரியா  நண்பர்கள்  இருந்தார்கள். ஒருவன் சோமு, இன்னொருவன் ராமு. ராமு பெயருக்கேற்றவாறே மிகவும் நல்லவன். குடிக்க மாட்டான், பெண்களுடன் ஊர் சுற்ற மாட்டான். ஆனால் சோமு அப்படியில்லை, எப்பொழுதும் குடி, பெண்கள் என்று வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தன். ஒருநாள் இருவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது, ஒருவேளை இருவரில் யாராவது முதலில் இறந்து போய்விட்டால் என்னசெய்வது? இருவரும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள், அதாவது ஒருநாள் யாராவது முதலில் இறந்துவிட்டால் அவர் மற்றவர் கனவில் வந்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள்அவர்கள்  இருப்பது நரகத்திலா அல்லது சொர்கத்திலா என்று சொல்ல வேண்டும் என்றும் உடன்பாடு செய்து கொண்டார்கள். 

அதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தில் சோமு இறந்துவிட்டான். ராமு அவனை நினைத்து ஒருமாதம் முழுதும் அழுது புலம்பினான். பின் ஒருவழியாக வழக்கம்போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். பிறகு இப்படியே இரண்டுவருடம் கழிந்து போனது. ஒரு வழியை முற்றிலும் சோமுவின் நினைவுகளை மறந்து விட்டான். திடிரென ஒருநாள் கனவில் ராமு வீட்டு தொலைபேசி அடித்தது.

“ஹலோ நான் சோமு பேசுகிறேன்.”

ராமுவுக்கு எல்லையில்லா ஆனந்தம், “ டேய் நீ கூப்பிடுவேன்னு எதிர்பார்க்கவே இல்லடா, சொன்ன மாதிரியே கூப்பிட்டுடே, எப்படிடா இருக்கே?”

“எனக்கென்ன நான் ரொம்ப நல்ல இருக்கேன், தினமும் வேளாவேளைக்கு சாப்பாடு வந்துடும். கலையில் 9 மணிக்கே பெண்கள் வந்துவிடுவார்கள், ஒவ்வொரு நாளும் குறைத்து 10 பேரையாவது சமாளிக்க வேண்டும், வாழ்க்கை ரொம்ப சந்தோசமா போயிட்டு இருக்குடா!”

கேட்கவே சந்தோசமா இருக்குடா, சொர்கத்துல இதெல்லாம் கூட கிடைக்குதா?

“சொர்க்கமா? இது காங்கயம்டா! காளைமாடா பொறந்திருக்கேன்!”

   
-                                                         - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒருமுறை சொன்னது.


0 COMMENTS:

Post a Comment