நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 2
மனதை
உறைய வைக்கிறாய்!
அடிக்கடி புன்னகையால்
மனதை
உரசிப் புண்ணாக்குகிறாய்!
நம் மனதின் தேசியகீதமே
மவுனம்தானோ?
தினம் ஒரு பூவைச் சூடுபவளே
என் மனதில் சூடிய
ஒரு பூவே
வாழ்நாள் முழுதும் மனம் வீசிக்கொண்டிருப்பது
உனக்கெப்படித் தெரியும்
அது நீயாய் இருந்தும்?
பேச்சில்லை நீ பேசும்போது
மூச்சில்லை நீ பார்க்கும்போது
நானேயில்லை நீ இல்லாதபோது.
என் அவளே!
உன்னை நான்
என்னவளாக்குவது எப்போது?
புரியாத மொழியைஎல்லாம்
மனதில் நிறுத்துபவளே
புரிந்த என் காதலை
மனதின் ஓரத்திலாவது
வைக்க மாட்டாயா?
நான் பூக்களாக
இருந்திருந்தால் – உன்
முடிகளையாவது
மணம் முடித்திருப்பேன்
நான் பொட்டாக
இருந்திருந்தால் – உன்
முகத்திலாவது
முழுமையாய் ஒட்டியிருப்பேன்
நான் காதலனாகி
இருப்பதனால்தானோ – உன்
நினைவுகளில்கூட
ஒட்ட முடியவில்லை?
காதல் அன்
என் பெயரில்கூடவா
எதிர்ப்பதம்?
நிலாப்பெண்ணுக்கு கவிதைத் தொகுப்பு 1, தொகுப்பு 2, தொகுப்பு 3 - soon
காதல் கவிதைகள் 1, கவிதைகள் 2, கவிதைகள் 3
Tweet |
ம்... அழகிய காதல் கவிதை...
ReplyDeleteநிலப்பெண்ணுக்கு கவிதை சமர்ப்பணம் தொடரட்டும்
ReplyDeleteநன்றி!!!
Deleteஎன்னவொரு வேண்டுதல்... ரசித்தேன்...
ReplyDeleteவேண்டுதலா? அவ்வ்வ்வவ்...
Deletenalla kavithai vaazhththukal
ReplyDeletesenthilkumaran
அன்புக்கு நான் அடிமை!!
Delete//நான் பூக்களாக
ReplyDeleteஇருந்திருந்தால் – உன்
முடிகளையாவது
மணம் முடித்திருப்பேன்///
அட அட கலக்கல் பாஸ் ரசித்தேன்
என்னோட கலங்கல் உமக்கு கலக்கல்! :-(
Deleteஎன்னை மறுந்து விடு என்று சொன்னால் அவள் உதட்டிலிருந்து ஆனால் உன்னை என்னால் மறக்க இயலவில்லை என் உள்ளத்திலிருந்து
ReplyDeleteநம்மளவிட பீலிங்கா வருதே????
Delete