"தராசோட விலை ஐயாயிரமா? அடேய் மோசம்
போய்ட்டோமேடா! மோசம் போய்ட்டோமேடா! எவ்வளவு நாளா வியாபாரம் பண்றோம் நம்மள
ஏமாத்திட்டானடா!"
என்னது என் டயலாக்கை எல்லாம் இவன் பேசிட்டு
போறான்? என்று முஸ்லிம் தலைவர்களைப் பார்த்து அமெரிக்கா கேட்க வேண்டியது, ஆனா இவங்க முந்திகிட்டாங்க! உதாரணமாய் படத்தில் ஒரு வசனம்
“நாம அல்லாவுக்காகப் போராடுறோம், அமெரிக்கா
ஆயிலுக்காகப் போராடுறது!” நியாயமா
பார்த்தா இந்த வசனத்திற்கு அமெரிக்காவுலதான் தடை பண்ணியிருக்கோணம்! பயலுக
அவசரத்துல இங்க பண்ணிட்டாள்!
நிறைய வசனங்களில் கமல் டச்!
கமலை அடிக்கும்போது “கிருஷ்ணா” னு கத்துகிறார்.
“நீ முஸ்லிமா இருந்துகிட்டு கிருஷ்ணானு கத்துறே?” என்கிறான் தீவிரவாதி, அதற்கு
கமல் “சரி அல்லா” என கத்துகிறார்.
கமல் மற்றும் அவர் உதவியாளரால் தவறுதலாய்
ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. அப்போது கமல், “நம்மை அல்லா மன்னிக்கவே
மாட்டார்.”
அதற்கு உதவியாளர், “நம்மையில்ல; உன்னை!”
(இந்த படத்தை இன்னும் பார்க்காமலிருந்தேள்னா
இந்தப் பத்தியை படிக்க வேணாம்!)
அமெரிக்காவுல கதக் டான்ஸ்மாஸ்டரா புருஷன் கமலும்,
அவா ஆத்துக்காரியும் குடித்தனம் நடத்தறாள்! ஆத்துக்காரிக்கு அவா கம்பனி எம்டிமேல
லவ் வந்துட்றது. சரி புருஷன பிரிய காரணம் தேடுறபோது ஒரு டிடெக்டிவ் வச்சு புருஷன
கண்கானிக்கிறாள். என்னடா இது திரும்பவும் ஐய்யர் கதையான்னு யோசிக்கும்போதே கமல்
மசூதிக்குப் போய் அல்லாவ தொழுறார். இதை கண்டுபிடித்து சொன்னவுடனே டிடெக்டிவ்வ
தீவிரவாதிங்க கொன்னுடறாள்! பிறகு தீவிரவாதிங்க வந்து கொத்தோட மூணு பேரையும் (புருசன்,
ஆத்துக்காரி, அவ எம்டி) தூக்கிட்டுபோய் ஒரு கொடோன்ல போட்டு போட்டோவ தலைவனுக்கு
அனுப்பறாள். தலைவன் நான் வர்றவரைக்கும் அவனை விடாதேன்னு சொல்லிடுறான். எம்டியை
போட்டு தள்ளிடராள்.
கமல் நான் நமாஸ் பண்ணனும்னு சொல்லி அவரு கட்ட
அவுத்துவிட்ட உடனே ஒரு பைட் வரும் பாருங்கோ!!! கண்ணுல கமலைவச்சு ஒத்திண்டே
இருக்கலாம்! அவ்ளோ நன்னா இருக்கு! அதே மாதிரி “உன்னைக் காணாது” பாட்டுக்கு
பொண்ணுங்க மாதிரி ஆடி முக பாவனை வருமே??? அடடா ஆண்டிரியாவை விட அழகா இருக்கும்.
ரெண்டுபேரும் தப்பிச்சி போன உடனே தீவிரவாதிங்க
தலைவன் வந்து சொல்லுறான், எங்க எல்லா தாலிபானுக்கும் ட்ரெயினிங் கொடுத்ததே
அவன்தான்! அப்புறம் ஒரு அரைமணிநேரம் ஆப்கானிஸ்தானில் கதை,
தீவிரவாதி தலைவன் அமெரிக்காவுக்கு எதிரா போராடுவதும், குழந்தையை துப்பாக்கி
பிடிக்கச்சொல்வதும், ஆனால் அந்தக் குழந்தையோ டாக்டராக விரும்புவதும், குழந்தை
கண்ணைமூடிக்கொண்டே தோட்டாவின் ரகத்தை சொல்லுவதும் மனதை பிசையறது. கமல் வைக்கிற
நேவிகேட்டார் மூலமா அமெரிக்க ராணுவம் வந்து எல்லா தீவிரவாதிகளையும் அழிச்சிட்றது.
பின் தாலிபான் தலைவன் அமெரிக்கா நகரத்தையே அளிக்கிற நியுக்ளியார் பாம் வைக்கிறான்
அதை கமல் வழக்கம்போல தடுத்துட்றார்! அப்புறம் தீவிரவாதி இந்தியா போயிட்றான், அவனை
பிடிக்க இந்தியா வந்து பிளைட்ல இருந்து குதிகிறார் கமல் – முற்றும்!
கதை இவ்ளோதானா இல்லே நெட்ல கட்
பண்ணிட்டாகளான்னு நேக்கு தெரியாது. ஆனா முற்றும் வந்துட்டது. (விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே கமல் பாதி எடுத்தவிட்டாதாக தகவல் - என்னா ஒரு தைரியம்?)
விஸ்வரூபம் - 8.5 / 10
டிஸ்கி – 1 : துபாயில் ஏற்கனவே தடை செய்யப்பட்டதால் ரிலீஸ் கிடையாது. ஏற்கனவே ரிலீஸ் ஆகும்னு வாங்கின டிக்கெட் காசை திருப்பி கொடுத்திட்டாங்கோ! அப்புறம் பிப்-7லும் ரிலீஸ் இல்லை (ஐயா ராசா போராடுனா தியாகிகளுக்கு நன்றி). கூடவே தமிழ் டொரென்ட்க்கும் நன்றி J
டிஸ்கி 2 : இதுவரை வெளிவந்த தமிழ்த்
திரைப்படங்களில் IMDbயில் (Internet Movie Datebase) விஸ்வரூபம் அதிக
ரேட்டிங் 9.5/10 பெற்றுள்ளது. ஏற்கனவே 13 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றுவிட்டது, இன்னும் 12 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்றால்
இந்தப்படம் உலகின் சிறந்த 250 படங்களின் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு ஏற்படும். வாக்களிக்க இங்கு செல்லவும்
கேப்டன் : தடை செய்யப்பட்ட தசாவதாரம் படத்தை அரசு உடனே வெளியிடுமாறு எச்சரிக்கிறேன்
பின்னாடி நிற்பவர்: அது தசாவதாரம் இல்லே,
விஸ்வரூபம்னு சொன்னா பொடனிலயே அடிப்பார், நமக்கெதுக்கு வேண்டாத வேலை.
ஒரே ஒரு சின்ன டவுட்!
இப்படி தப்பா ஒண்ணுமே இல்லாத படத்தை தடை செய்ய சொன்னவர்கள் லூசா? இல்ல தடை செய்ய தூண்டியவர்கள் லூசா? படத்தையே பார்க்காம அதைக்கேட்டுட்டு ஜால்ரா போட்டவங்க லூசா? இல்ல இதையெல்லாம் கேட்கிற நான் லூசா? இதைப்போய் படிக்கிற நீங்க லூசா?
Tweet |
சந்தேகமே வேண்டாம், இதப் படிக்கிற நாங்கதான் லூசு.
ReplyDeleteஐயா பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது :-)
Deletegood review!
ReplyDeleteடைமிங் ஜோக் செம காமெடி!
Rating given by the top 1000 IMDB users is still 4.1. Unless it crosses 6 it can't come in the top 250 :) This 9.5 rating is just an illusion created by kamal fans. Certainly, it can't compete with the top 50 atleast!!
ReplyDelete