Blogger Widgets

காதல் கவிதைகள் நிலாப்பெண்ணுக்கு தொகுதி - 1

நிலாப்பெண்ணுக்கு - தொகுதி 1

நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
உன் உறங்காத கனவுகளோடு

நான் விழித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்பற்றிய நினைவுகளோடு

பூக்களுக்கும் உனக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்தான்
நீ மட்டும்தான்
நடக்கும் பூ.

செடிகளில் பூக்கள்
இருக்கலாம்
பூவே
செடியாக இருப்பது
நீ மட்டும்தான்

மண் வாசத்தையும்
மலர் வாசத்தையும்
உன் வாசத்தால்தான்
உணர்ந்து கொண்டேன்

உன் பார்வைகளைவிட
உன் வெட்கத்தைவிட
உன் பேச்சுகளைவிட
உன் காதலைவிட
உன் புன்னகையையே
விரும்புகின்றேனே ஏன்?


உன்னை நினைத்தேன்
என்னை மறந்து
உன்னை மறக்க முடியவில்லை
என்னை நினைத்து.

நிலாப்பெண்ணுக்கு கவிதைத் தொகுப்பு 1,  தொகுப்பு  2,  தொகுப்பு 3 - soon
காதல் கவிதைகள் 1,  கவிதைகள் 2,  கவிதைகள் 3 


2 COMMENTS:

  1. காதலை மறக்கவே முடியாது...

    ReplyDelete
  2. //பூக்களுக்கும் உனக்கும்
    ஒரே ஒரு வித்தியாசம்தான்
    நீ மட்டும்தான்
    நடக்கும் பூ.///

    அட இது புதுசாலா இருக்கு அருமை

    ReplyDelete