Blogger Widgets

சில குண்டுவெடிப்புகள் சில உண்மைகள்!


  கடந்த சில குண்டுவெடிப்புகளின்போது நாட்டில் நடந்த பிரச்சினைகள் ஒரு அலசல்.


செப், 7, 2011 – டெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டுவெடிப்பு 11 பேர் மரணம், 76 பேர் காயம். 

நாடே 2G ஊழல் அதிர்ச்சியில் இருந்த சமயம். ராஜா, கனிமொழி கைது, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் என்று இந்தியாவே களேபரத்தில் இருந்த சமயம். ஆகஸ்ட் மாதம் 2G ஊழலை எதிர்த்து, வலுவான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அன்னா ஹசாரே ஆகஸ்ட் 16 முதல் 12 நாட்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம், மொத்த இந்தியாவும் இதற்கு ஆதரவு தெரிவித்து ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 28-ல் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்தத் தொடர் உண்ணாவிரதத்தால் ஆட்சி கவிழும் சூழல் இருந்தது.

ஆகஸ்ட் 1, 2012 -  புனேயில் ஐந்து இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ( ஐந்து இடங்களிலுமே ஆட்கள் இல்லை )
ஜூலை 29-ல் ஊழலைக் கண்டித்து திரும்பவும் உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே. டெல்லியில் பவர்கட், மின்சார மெட்ரோ ரயில் நிறுத்தம் இவை இரண்டும் ஒரு வாரம் நீடித்தது. இதே போல அஸ்ஸாம் கலவரம் ஜூலை 20 முதல் 10 நாட்கள் நீடித்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தனர். பலர் கொல்லப்பட்டனர்.


பிப் 21, 2013 - ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் நகரின் இரண்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


இத்தாலி ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், தெலுங்கானா பிரச்சினை, பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்த்து எதிர்கட்சியினர் ஒருநாள் வேலை\நிறுத்தம், சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு என ஏகப்பட்ட பிரச்சினைகள். அஜ்மல் கசாப் கடந்த வருடமும் அப்மல் குரு இந்த மாதம் பிப்-9ல் தூக்கிலிடப்பட்டார்.
                                                        ---------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி 1 : எப்போதும் மு.கவிற்கு ஒரு பழக்கம் உண்டு, அதாவது ஒரு பிரச்சினையை சமாளிக்க இன்னொரு பிரச்சினையை உண்டாக்குவார், எல்லோரும் முதல் பிரச்சினையை மறந்துவிட்டு இரண்டாவதை கவனிப்பவர். முதலாவது பிரச்சினை SOLVED.
டிஸ்கி 2 :  சூரியநெல்லி பாலியல் பலாத்காரவழக்கு: இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் யார் தெரியுமா? மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் – நாட்டின் கடவுளாய் மதிக்கப்படும் ஒரு பதவியிலிருப்பவர்?????
டிஸ்கி 2 : மேற்கூறியவற்றில் எதற்கும் எதற்கும் சம்பந்தம் இல்லை, நீங்களாகவே சம்பந்தப்படுத்திக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல! :D


1 COMMENTS:

  1. மு. க எப்போதும் இதைதான் செய்து கொண்டு இருக்கிறார் . மக்கள் அதனால் தான் சரியாக தீர்ப்பு வழ்ங்கியுள்ளார்கள்

    ReplyDelete