Blogger Widgets

விஸ்வரூபம் – நல்லவேளை எனக்கு மதம்பிடிக்கவில்லை!

  காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில் என்ன இருக்கிறதென்று தெரியாது, ஆனாலும் எதிர்ப்போம்/ஆதரிப்போம். இதை ஒரு இந்து/முஸ்லிம் பிரச்சினையாக மாற்றியதில்தான் அரசியல்வாதிகளின் சாதுர்த்தியம் ஒழிந்திருக்கிறது.

  இதைவிட ஒரு காமெடி என்னவென்றால் ஒருவர் இப்படிக் கமெண்ட் எழுதினார். “இந்தப்படத்தில் ஐயர் அசைவம் சாப்பிடுவது போல் காட்டியிருக்கிரார்கள் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும்” இதற்கு எங்கே போய்முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.

  இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் சொன்ன உடனே அரசு பட வெளியீட்டை இரண்டுவாரம் தள்ளிவைத்துவிட்டது. தொலைக்காட்சி உரிமைதான் விஜய் டி.விக்குப் போய்விட்டதே? இப்படி வெளியீட்டை தமிழக அரசு தடை செய்ததுதான் இன்றைய இத்தனை பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரம். 


  இத்தனைக்கும் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிமைத் தாக்கி எதுவும் இடம்பெறவில்லை. கமல்ஹாசனே முஸ்லிமாகத்தான் வருகிறார். இந்தக் கதையில் தமிழ்நாடே இடம்பெறவில்லை, அமெரிக்காவும்/ஆப்கானிஸ்தானுமே கதைக்களங்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களைப் பற்றிய கதை எடுக்கும்போது அவரது பெயரை நித்யானந்தா என்றா வைக்க முடியும்? மும்பை வெடிகுண்டை படமெடுக்கும்போது அஜ்மல் கசாப்பை புத்தமத சாமியாராகவா காட்ட முடியும்?
  
  இந்தியாவில் தணிக்கைத் துறை என்று இருக்கும்போது எதற்காக ஒவ்வொருவருக்கும் படத்தைப் போட்டுக்காட்ட வேண்டுமென்று தெரியவில்லை. பிறகு எதற்கு தணிக்கைத் துறை?

  சரி தமிழ்நாட்டில் தடை வாங்கியாயிற்று. கேரளாவில் படம் ஓடும்போது படத்தை தடை செய்ய வேண்டுமென்று கேரள முதல்வரை இவர்கள் ஏன் கோர வேண்டும்? படத்தில் மோசமான காட்சிகள் இருந்தால் அவர்களே நிறுத்திவிடப்போகிறார்கள், நிறுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவது ஏனோ?
இப்படி ஏதேனும் பிரச்சினையைக் கிளப்பினால் தேர்தலில் மத ஓட்டுக்களை முழுவதும் பெற்றுக்கொள்ளலாம்.

  இத்தனைக்கும் முஸ்லிம் நாடான மலேசியாவில் தணிக்கை சான்றிதழ்பெற்று படம் வெளியானது. தமிழ்நாட்டில் படம் தடை செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதை அறிந்ததும் உடனே அங்கும் ஒரே நாளுடன் நிறுத்திவிட்டனர்.

யோசிக்க வேண்டிய கேள்வி

  இந்து, முஸ்லிம், கிறித்துவர், புத்தம் பற்றியெல்லாம் படமெடுக்கக்கூடாது, சாதி பற்றியும் படமெடுக்கக்கூடாது, காதல் பற்றியும் படமெடுக்கக்கூடாது(அதில்கூட பெயர் வருமே?), மனிதர் பற்றியே படமெடுக்கக்கூடாது. அட நாய்களை வைத்துக்கூட படமெடுக்க முடியாது, என் வீட்டு நாயைப்போலவே வால் வளைந்திருக்கிறது, இது எங்கள் நாயை அவமானப்படுத்தும் செயல் என்றுகூறி தடை கோருவர்!

  சாதியும், மதமும், இனமும் ஒழிந்து நாம் அனைவரும் மனிதர் என்ற எண்ணம் வராதவரை நாலு முட்டாள்கள் கத்துவதைக் கேட்டுக்கொண்டு வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் சாகும் அறிவிலிகள் இருக்கத்தான் செய்வார்கள்.

  காவியாக இருக்கட்டும் அல்லது பச்சையாக இருக்கட்டும் மக்களைத் தூண்டிவிட்டு பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக _______________________

நல்லவேளை எனக்கு மதம் பிடிக்கவில்லை! - மதம்பிடிக்கவில்லை!


24 COMMENTS:

 1. அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! தமிழ் மணத்தின் உறுதி மொழி!
  கட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கு.......

  please go to visit http://tamilnaththam.blogspot.com/

  ReplyDelete
 2. உணர்ச்சிகள் தூண்டபடுவதால் நீதியை மறந்து விட வேண்டாம் .!

  கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.

  கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.

  இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?


  ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ////இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?////

   அருமையான கேள்வி. காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து இங்கு உள்ள ஒரு முஸ்லீம் கூட போராட்டமோ ஒரு அறிக்கையோ விடவில்லை. போகட்டும். இன்றைக்கு உலகில் தீவிரவாதம் செய்பவர்கள் 99% முஸ்லீம்கள்தானே. தீவிரவாதிகளில் 90% முஸ்லீம்கள்தானே. தீவிரவாதத்தை செய்யும் முஸ்லீம்களை எதிர்த்து இதுவரை உங்களில் யாராவது ஒருவர் ஒரே ஒரு அறிக்கையாவது விட்டிருப்பீர்களா? இதெல்லாம் இப்படி இருக்க சாதாரன ஒரு சினிமாவிற்கு இப்படி வரிந்து கட்டிகொன்டு வந்துவிட்டீர்கள். இதில் காமெடி என்ன வென்றால் இதை எதிர்பவர்களில் 99% பேர் இதுவரை படத்தையே பார்க்கவில்லை. யாரோ ஒரு சிலர் பார்த்து சொன்னதை கேட்டு தலையும் தெரியாமல் வாலும் புரியாமல் பேசுகிறீர்கள். யோசிக்கவே மாட்டீர்களா? சொல்புத்தி மட்டுமல்ல சுய புத்தியும் வேன்டும். இது கமல்ஹாசனுக்கு ஆதரவான கருத்து அல்ல. நியாயத்துக்கு ஆதரவான கருத்து.

   அன்புடன், தமிழச்சி.

   Delete
  2. நல்லவேளை எனக்கு மதம் பிடிக்கவில்லை! - மதம்பிடிக்கவில்லை!

   Delete
  3. i agree with you Thamizhachi.

   Delete
  4. தமிழச்சி அவர்களுக்கு,

   99% தீவிரவாதிகள் முஸ்லிம்கள்தான் என்று எதன் அடிப்படையில் கூறினீர்கள், நாட்டில் வெடித்த குண்டுவெடிப்புகள் அனைத்திலும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணை சொல்கின்றது, அப்போ நான் அனைத்து இந்துக்களும் தீவிரவாதிகள் என்று எடுத்துக்கொள்ளலாமா. காஷ்மீரிலும், மனிபூரிலும் நம் வீட்டு பெண்களை சூறையாடியது இந்திய ராணுவம் இதனை எதிர்த்து அருந்ததி ராய் போன்றோர் குரல் கொடுத்தார்கள், இரோம் ஷர்மிளா என்பவர் பன்னிரண்டு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கின்றார், ஆகையினால் இந்திய ராணுவத்தில் உள்ளவர்களில் 99% பேர் மோசமானவர்கள் என்று கூறுவிர்களா ? இப்பொழுது புரிகிறதா நாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்று, மீடியாவும் சினிமாவும் தவறான தகவலை மக்களிடம் பரப்பியதால் உதிர்ந்த வார்த்தைகளே இங்கே நீங்கள் குறிப்பிட்டு இருப்பது.

   Delete
  5. சரியாக சொன்னீர்கள். சாதிக்.

   இப்பொழுது காவி தீவிரவாதம் தான் வான் எல்லை வரை போய் கொண்டு இருக்கிறது. இஸ்ரேல்காரன் கூட கூட்டு சேர்ந்து, அவன் சொல்லி கொடுத்த முறையில் செய்தும், இந்த காவிகளால் விஷயம் வெளி வராமல் செய்ய முடியல்லையே. உண்மை வெளியில் வந்தே தீரும். தமிழச்சி தினசரிகள் பார்பதே இல்லை போல். அல்லது அவர்களின் சொந்த மீடியா செய்திகளை தான் நம்புவார்களா?

   Delete
  6. அமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல்.. இப்போது ஆட்சேபணை இந்துக்களிடமிருந்து...!

   அப்படிப் போடு அருவாள!

   அமீர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ஆதிபகவன் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இந்தப் படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வெளியிடும் முன் படத்தைத் திரையிட்டுக் காட்டக் கோரியுள்ளனர்.

   உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்' ரவி நடித்த ‘ஆதிபகவன்' படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர். அதில், "இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்' என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார்.

   தற்போது ‘ஆதிபகவன்' என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்' என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும். ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்.

   தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் நீக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

   Delete
 3. Enakku Therinju MUslimgala Nallavangala kaati sameepathula vanda orey oru padam neer paravai mattumthan...

  ReplyDelete
 4. To Mr.Mohamed,

  Athula kooda naan kumpudura esaiya nee nu solluvaru, athu eppadi avaru oru muslima esayna nu sollapochii.. so athulaiyum olunga katala.

  ReplyDelete
 5. இது போன்ற எதிர்ப்புகள் இஸ்லாமியர் மீதான நல்லெண்ணத்தை குறைத்து விடும் என்றே அஞ்சுகிறேன்.

  ReplyDelete
 6. // தொலைக்காட்சி உரிமைதான் விஜய் டி.விக்குப் போய்விட்டதே?//ஓ இதான் காரணமா ?

  ReplyDelete
 7. ஒவ்வொரு வருடமும்வெளிவரும் நூற்றுக்கணக்கான அனைத்து இந்தியமொழித்திரைப்படங்களில் 99.99 வீதமானவற்றில் ஹிந்துக்கள்தான் வில்லன்களாகவும்,விபச்சாரிகளாக,ரவுடிகளாக,ஊழல் அரசியல்வாதிகளாக வருகிறார்கள்.இதை எதிர்த்து ஹிந்துக்களும் போராடி ஒட்டுமொத்தமாக சினிமாத்தயாரிப்பையே நிறுத்திவிடலாமே....

  ReplyDelete
 8. //இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள் //

  ஹசரத்பால் மசூதி மறந்து விட்டதா அதில் அதில் ராணுவத்தை எதிர்க்கும் அளவு தீவிரவாதிகள் ஆயுதம் வைக்கவில்லை... இதை கமல் சொன்னால் தப்பாக படுகிறதா ??

  http://www.nytimes.com/1993/10/17/world/indian-troops-surround-mosque-in-kashmir.html

  ReplyDelete
  Replies
  1. டேம் 999 தமிழ் நாட்டில் வெளி வந்தால் தப்பாக படுகிறதா? படத்தை படமாக பார்த்தால் போதுமே ஐய்யா?

   Delete
 9. குஜராத்தில் என் வீட்டு பெண்களை கற்பழித்து கொன்றபோது யாரும் கேட்கவில்லை.....கர்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவை கீறி வெளியே எடுத்து வெட்டி வீசியபோது யாரும் கேட்கவில்லை.....சந்தர்ப்பம் கிடைத்தால் அதை இன்னும் அதிகமாக செய்திருப்பேன் என்று பாபு பஜ்ரங்கி என்ற ரத்தவெறி பிடித்த ஓநாய் கொக்கரித்தபோது யாரும் கேட்கவில்லை.....நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான குண்டு வெடிப்புகளுக்கு காரணம் முஸ்லிம் தீவிரவாதம் என்று கண்மூடித்தனமாக அறிவித்துவிட்டு பின் விசாரணையில் அதை செய்தது ஹிந்து தீவிரவாதம்(மன்னிக்கவும் அவர்களை அடையாளம் கூறவே உபயோகித்துள்ளேன்) என்று தெரியவந்தபோது யாரும் கேட்கவில்லை.....அமெரிக்காவும் இஸ்ரேலும் என்வீட்டு குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து குவிக்கும்போதும் கேட்கவில்லை......இன்னும் எத்தனையோ கேட்கவில்லை.... நல்லவேளை இன்னும் எங்களுக்கு மதம் பிடிக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. Americavum Isrelum enna India vula eppa kundu poddana?

   Delete
 10. matha veri.......


  yaarukku nadunilaiyodu konjam sinthippom. ......!

  ReplyDelete
 11. நண்பர் சீனி,

  அப்பாவி மக்களை கொள்ளும் யாராக இருந்தாலும், அவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருந்தாலும் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.

  உங்கள் வீட்டு சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் மட்டும் உண்ணாதீர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

  அதன் அடிப்பயிலேயே பெரும்பாலான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.இதனை மதவெறி என்றால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

  குறிப்பு: படத்தை தடை செய்ததில் எனக்கும் உடன்பாடு கிடையாது.

  ReplyDelete
 12. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3RZHBoTEbaM
  need to ban this film as well. they are showing kasab as a muslim. he is a hindu or Christian. in case if he is muslim he is not terroist. ban the movie. ban the movie. matham piditha matha veriyarkal.

  ReplyDelete
 13. //'அவ்வை சண்முகி , பிராமணர்களை குறி வைத்து கேவலப்படுத்துகிறது'

  'ஹே ராம் படத்தை நிறுத்து . காந்தியை கேலி செய்கிறாயா?'

  'சண்டியர்' பெயரை மாற்று. சாதிய வன்மத்தை தூண்டாதே.'

  அது என்ன வசூல்ராஜா ? மருத்துவர்களை அவமதிக்காதே '

  u can view the whole post from the link below

  http://abimanyuonline.blogspot.sg/2013/01/blog-post.html


  'தசாவதாரத்தை தடை செய். கடவுள் மறுப்பை திணிக்காதே '

  http://abimanyuonline.blogspot.sg/2013/01/blog-post.html

  ReplyDelete
 14. ///இது போன்ற எதிர்ப்புகள் இஸ்லாமியர் மீதான நல்லெண்ணத்தை குறைத்து விடும் என்றே அஞ்சுகிறேன்.//

  ReplyDelete
 15. எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
  தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ஓடாது என்று பி.ஜெய்னுலாப்தீன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய்னுலாப்தீன் வடிவில் பால்தாக்கரேயைப் பார்த்தேன். இந்த அறிவிப்பும் மிரட்டலும் முட்டாள்தனமானது. கண்டிக்கத்தக்கது. வேடிக்கையானது.

  அமைதியை விரும்புகின்ற, கடினமாக உழைக்கின்ற, அப்பாவியான தமிழக முஸ்லிம்கள் மீது சேறும் கல்லும் வாரி இறைத்திருக்கின்றார் கமல் ஹாஸன். கமல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒட்ட நறுக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. அவருடைய விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதிலும் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. இந்திய வரலாற்றிலேயே விஸ்வரூபம் போன்று மோசமான படம் எடுக்கப்பட்டதில்லை. ஒப்புக்கொள்கின்றேன்.

  ஆனால் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்வதாக அறிவிப்பதும் அரசாங்கத்தையும் மக்களையும் மிரட்டுவதும் எந்தவகையிலும் சரியானதல்ல. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு இயைந்ததும் அல்ல. பால் தாக்கரே போன்ற பாசிஸ்டுகள் வேண்டுமானால் அவ்வாறு மிரட்டல் இட்டு காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். சட்டத்திலிருந்துத் தப்பித்துவிட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்துகொள்வது எந்த வகையிலும் அழகு அல்ல.

  வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததன் மூலமாக பி.ஜே கமல் ஹாஸனைப் போன்றுதான் நடந்துகொண்டிருக்கின்றார். இஸ்லாத்தைக் குறித்தும் தமிழக முஸ்லிம்களைக் குறித்தும் கமலுக்கு இழிவான, கேவலமான கருத்து இருந்தது. தன்னுடைய அந்த இழிவான கருத்தை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது சினிமா பைத்தியங்கொண்ட, அப்பாவியான, அன்பான மக்கள் மீது திணிக்க முற்பட்டார் கமல். பி.ஜேயும் அதே தொனியில்தான் குரல் கொடுத்துள்ளார். இது நல்லதல்ல.

  இது நம்முடைய நோக்கத்திற்கே கேடு விளைவிப்பதாகத்தான் முடியும். இப்போது காலம் மாறிவிட்டது. ஆட்டத்திற்கான விதிகளும் நெறிகளும் மாறிவிட்டன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பால்தாக்கரேயாலேயே ஷாரூக்கானின் ‘மை நேம் இஸ் கான்: ஐயம் நாட் எ டெரரிஸ்ட்‘ படத்தைத் தடை செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற தாக்கரே தனமான மிரட்டல்கள் இந்தக் காலத்தில் உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  இது போன்ற மிரட்டல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்குத்தான் உதவும். கமல்ஹாஸனுக்குத்தான் உதவும். பி.ஜே.யின் இந்த மிரட்டலிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.

  கமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீண்ட, நீண்ட, நீண்ட சட்டப் போரில் அவரை இழுத்து அடிப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நீதிமன்றமாக அலைய விடுங்கள். ஆற்றல் அனைத்தையும் உறிஞ்சி விடுங்கள். நிச்சயமாக அவர் மண்டியிடுவார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதனையும் செய்வார். இன்றைய நீதிமன்ற அமைப்பு இருக்கின்ற நிலையில் இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்கலாம். அந்த வெறிபிடித்தவன் சட்டச் சிக்கல்களிலிருந்து மிக இலாகவமாக தப்பித்து வந்துவிட மாட்டானா, என்றும் நீங்கள் கேட்கலாம். சரிதான். அந்த வாய்ப்பும் இருக்கின்றதுதான். என்றாலும் சட்டரீதியாகத் தீர்வும் நீதியும் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கின்றது. சட்டரீதியாக இதனை அணுகுவதுதான் சரியான வழிமுறை ஆகும்.

  ReplyDelete
 16. அடுத்ததாக, இஸ்லாத்தின் அமைதித் தூதை எடுத்துரைப்பதற்காக கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், அரங்கக் கூட்டங்கள்,பொதுக்கூட்டங்கள், தேநீர் விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதிக அளவில் நடத்த வேண்டும். கருத்து சுதந்திரத்தின் எல்லைகள் என்ன என்பதைக் குறித்தும் இஸ்லாம் சொல்வதென்னவென்பதைக் குறித்தும் பேச வேண்டும். விஸ்வரூபம் போன்ற கேடுகெட்ட,இழிவான, அருவருப்பான படங்கள் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக, அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கலாம். திரைப்படங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து தவறாகச் சித்திரிக்கப்படுவது தொடர்பான நம்முடைய கவலையை,குமுறலை, வேதனையை, கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அனைத்துவிதமான அமைதியான, ஆக்கப்பூர்வமான,சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

  எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய மார்க்கம் நம்முடைய செயல்களிலும் அன்றாட வாழ்விலும், நடப்புகளிலும் வெளிப்பட வேண்டும். இனிய மார்க்கத்தின் அன்பான அறவுரைகள் நம்முடைய செயல்பாடுகளில் புலப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு இது ஒன்றே வழி. ஒன்றைக் கவனித்தீர்களா?முஸ்லிம்களை வில்லன்களாய், தேசத் துரோகிகளாய்,பயங்கரவாதிகளாய்ச் சித்திரித்து எண்ணற்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த கேப்டனும் அர்ஜுனும் போட்டி போட்டுக்கொண்டு கமலை விட அதிகமான எண்ணிக்கையில் இத்தகைய படங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றால் உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் நம்முடைய நண்பர்களின் கருத்து மாறிவிட்டதா, என்ன? மக்கள் திரைப்படப் பிம்பங்களைவிட இரத்தமும் சதையுமாய் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைப் பார்த்துதான் உங்களையும் என்னையும் பார்த்துத்தான் தாக்கம் பெறுகின்றார்கள்.

  சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடனான நம்முடைய நட்பும் உறவும் நம்முடைய செயல்பாடுகள், நடத்தை,அணுகுமுறை, பழகும்விதம் ஆகியவற்றைப் பொருத்தே அமையுமே தவிர திரைப்படங்களில் தவறாகச் சித்திரிக்கப்படுகின்ற மாயைகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

  நம்முடைய செயல்பாடுகளும் நடத்தையும் அன்பும் பண்பும் நிறைந்ததாய், நேசமும் பாசமும் மிகுந்ததாய், சத்தியமும் வாய்மையும் ததும்பியதாய் இருக்குமேயானால் எத்தனை கமல்கள் வந்தாலும் எத்தனை கேப்டன்களும் அர்ஜுன்களும் எத்தனை படம் எடுத்தாடினாலும் எத்தனை விஸ்வரூபங்கள் வந்தாலும் உறவையோ நட்பையோ பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.இந்த நாள் வரை இஸ்லாத்தை ஏற்றவர்களில் 99 சதவீதத்தினர் நம்முடைய நடத்தையையும் கனிவையும் பார்த்துதான் வந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை.
  விஸ்வரூபத்தை எதிர்கொள்வதற்கு இதுதான் சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி.

  -T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

  ReplyDelete