Blogger Widgets

கிரிஸ் கெயிலாக மாறிய ஜெ! அத்தனையும் சிக்ஸர்!


பந்து கமெண்டரி:

  "இலங்கையில் இறுதிப்போரின்போது இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இதையெல்லாம் கண்டித்து மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள், இலங்கையின் நடுவர்கள், களப் பணியாளர்கள் என யாரும் தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக் கூடாது" என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

எடுக்கப்பட்ட ரன்கள்:

  1. IPL தொடங்கும் இந்த சமயத்தில் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்பே இல்லை. ஜெ. என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதே போல IPL நிர்வாகம் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட மாட்டார்கள் என ஒத்துக்கொண்டது. நமக்கு பணந்தான் முக்கியம்! நாய் வித்தகாசு குரைக்கவா போகுது?

  2. சென்னை அணி இரண்டு இலங்கை வீரர்களைப் மொத்த தொடருக்கும் புறக்கணித்தது எதிர்பார்த்ததுதான். அதனால் பெரிய இழப்பில்லை. ஆனால் அணிக்கு ரசிகர் ஆதரவு முக்கியந்தானே? சீனிவாசன் வாயாலயே சீனி விக்கிற ஆளாச்சே?


  3. இப்போ தி.மு.கவுக்கும், சன் டி.விக்கும் ஆப்பு. இலங்கை வீரர்கள் கூடாது என கூறிவரும் மு.க வீட்டிலேயே (அதாங்க கலகம் சாரி கழகம்) உள்ள மாறன்களின் ஹைதராபாத் அணியில் உள்ள இலங்கை சங்கக்கரா கேப்டனை தூக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தாய் பகை பிள்ளை உறவா? என்ற கேள்வி எழுமே? விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என தயாநிதி மாறன் கூறியதாக ஒரு செய்தி (அவ்வ்வ்!)

  4. ஹைதிராபாத் டீம் சங்கக்கரா இருந்தாலே சொங்கி மாதிரித்தான்  இருக்கும். இனி ஜெயிக்கவா போகுது? இலங்கை வீரர்களைத் தூக்கலேன்னா மக்கள் தி.மு.க.வைத் தூக்கிவிடுவார்கள் என்று மு.க.விற்குத் தெரியும்.

  5. மத்திலியிருந்து விலகி நாடகமாடிய மு.க விற்கு இது ஒரு பேரதிர்ச்சி. இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் எங்கே தி.மு.க விற்கு எதிராக மாறிவிடுமோ என்றே கூட்டணி விலகினார். இப்போது ஆதரவில்லை, ஆனால் ஆட்சி கவிழ விடமாட்டோம் என காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார். வயசான காலத்தில ஒரு ரன் எடுக்கவே போராடிகிட்டு இருக்காரு!

  6. மாணவர்களின் போராட்டத்தை அரசு எதிர்ப்பதுபோல் ஒரு தோற்றம் இருந்தது. இந்த அறிவிப்பால் அதுவும் மறைந்துவிட்டது. கருணாநிதியின் கூட்டணி விலகல், மாணவர் ஆதரவு வேஷம் எடுபடவில்லை.

  7. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது கருணாநிதி என்றுகூறி அடுத்த ஆப்பும் வச்சாச்சு. இப்போது தமிழக அரசு இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காம். இலங்கையை நட்பு நாடு என்றுகூறக் கூடாது என்றுவேறு தீர்மானம் நிறைவேற்றம்.

  8. இதெல்லாம் போக தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அம்மா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். வடஇந்திய மீடியாக்களோ குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டிருக்கின்றன. இத்தனைநாள் நாங்க கத்தினோம் இனி நீங்க கத்தி சாவுங்கடா! ஆமா பிரதர் சாரி பிரதமர் எங்கே போனாரு?? பாவம் அவரை வச்சே எல்லோரும் காமெடி பண்றாங்கப்பா.

எல்லாஞ் சரிதேன், ஆனா கரண்டைக் காணலியேப்பா?  


6 COMMENTS:

 1. Very nice article....

  ReplyDelete
  Replies
  1. அய்ய்ய் ஒருத்தர் படிச்சிட்டாரே!!! :-)

   Delete
 2. ஒரே ஆப்புல இலங்கை திமுக ஐபிஎல் என்று மூன்று பேருக்கும் சொருகிய ஜெயலலிதாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  ReplyDelete
 3. எல்லாஞ் சரிதேன், ஆனா கரண்டைக் காணலியேப்பா?

  பைனல் டச் சூப்பர்

  ReplyDelete