Blogger Widgets

ரசித்த தெலுங்கு படங்கள் 1

ஆர்யா–2 (AARYA 2)

  ஒவ்வொரு சீனும் ரசிச்சு ரசிச்சு பார்த்த படம்னா அது இதான்! நம்ம எப்படி வீட்டுல நல்லவன் வேஷமும் உண்மைல தெள்ளவாரியாவும் நடிக்கிறோம்? அதை அப்படியே காட்டுவதுதான் இந்தப்படம். தெரியாம தம்மடிப்போம், தம்மடிச்சுட்டு வாயில ஸ்பிரே பண்றது, டாய்லட்ல சரக்கடிக்கிறது செம செம.



  அல்லு அர்ஜுன் நடிப்பு சான்ஸே இல்லை. இசை, டான்ஸ், பாட்டு என எல்லாமே ஒருசேர அருமை. காஜல் அகர்வால்கூட லிப்ட்ல லிப்ல கிஸ் சீன் இருக்குப்பா :-)

              

பிசினெஸ்மேன் (BUSINESSMAN)

  ஆக்சன் படங்களில் மகேஷ் பாபு மாதிரி வேற யாரும் பண்ணமுடியவே முடியாதுங்கிறதுக்கு உதாரணம் இந்தப்படம். டயலாக் செம. மகேஷ்பாபுவிற்கு மட்டும் டான்ஸ் சிம்பிளா ஸ்டெப் கொடுப்பாங்க பாரு ஸ்டைலிஷா இருக்கும். குறிப்பு – விஜய் இன்னும் இந்தப்படத்தை ரீமேக் செய்யவில்லை.

                       


லீடர் (LEADER)

  ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்றால் இதை பார்க்கவும். ஒரு லீடரா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு ஒவ்வொரு சீனிலேயும் சொல்லியிருப்பாங்க. டையலாக் ஒவ்வொன்றும்  சூப்பரா இருக்கும்.

குறிப்பு : விஜயின் தலைவா டீசர் இந்தப்படம்போல்தான் உள்ளது. ரிலீஸ் ஆனாதான் தெரியும் எது உண்மை என்று. (விஜயை கலாய்க்கலைனா உங்களுக்கெல்லாம் தூக்கமே வராதாடா?) 

             

டிஸ்கி : தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை.


0 COMMENTS:

Post a Comment