Blogger Widgets

அபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only! Apocalypto watch movie online

  இந்த படத்தைபற்றி சொல்வதைவிட படத்தைக்  கீழே பார்த்துவிட்டு வாருங்கள்.

  படத்தின் காலம் மாயா நாகரிக அழிவின்போது நடக்கும் கதை. மாயா நாகரிகம் என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்புமுதல் இப்போதைய வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நாட்டின் சுற்றுவட்டாரத்தில் தோன்றிய நாகரிகம். படத்தின் மொழி மாயன் மொழி. (WITH ENGLISH SUBTITLES). இந்தப்படத்திற்கு மொழி புரிய வேண்டிய அவசியமில்லை.


கதை:

மாயன் நாகரிக அழிவின்போது, புதிய கோவில் கட்டி கடவுளுக்கு மனிதர்களைப் பலி கொடுத்தால் தங்கள் பஞ்சம் தீர்ந்துவிடுமென தீர்மானித்து ஒரு காட்டுக்கு போய் அங்கு வேட்டையாடி பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரு கிராமத்தையே பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அதில் நாயகன் ஜாகுவார் பாவும் சிக்கிக்கொள்கிறான், அதிலிருந்து அவன் மீள்கிரானா? இல்லையா? என்பதே கதை. 


முக்கிய குறிப்பு :

  படத்தில காட்டப்படுபவை அனைத்தும் ஒரிஜினல். அத்தனை மக்களும், ஆடை அலங்காரமும், (ஆடை எங்க இருக்குது?) துரத்தும் கருப்பு சிறுத்தைப்புலி உட்பட எல்லாமே ஒரிஜினல். ஒரிஜினல் சிறுத்தைப்புலியை துரத்தவிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் ஒரிஜினலாய் இருக்கவேண்டுமென்று மாயன் இனத்தைச் சேர்ந்தவர்களையே தேடிப்பிடித்து போட்டிருக்கிறார் இயக்குனர். இத்தனை பேருக்கு உடை அலங்காரம் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

  இந்த படத்தை பார்த்துவிட்டு இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நீங்கள் வியாக்காமலிருந்தால் அதுதான் வியப்பு.

Directed by - Mel Gibson
Starring -  Rudy Youngblood, Raoul Trujillo, Mayra Sérbulo
Music by - James Horner


                            


உலகில் இதுவரை இருந்த எல்லா நாகரீகங்களும் அழிந்துபோகக் காரணமென்ன? இயற்கை? கிடையவே கிடையாது. அதைவிட முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

தெரிந்தவர்கள் சொல்லலாம்!

பதில் - இங்கே! :-)


8 COMMENTS:

 1. //இந்த படத்தை பார்த்துவிட்டு இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நீங்கள் வியாக்காமலிருந்தால் அதுதான் வியப்பு.//

  உண்மை.. இதை பார்த்துவிட்டு நானும் வியந்து போனேன் இந்தப்படத்தை மெல் கிப்சன் எப்படி எடுத்தார் என.... உலகில் இதுவரை வெளிவந்த சிறந்த படங்களில் சந்தேகமில்லாமல் இதுவும் ஒன்று..!!

  எதுக்கு 18+ அந்த கால கட்ட நாகரீகத்தை அப்படியில்லாமல் காட்சிபடுத்த முடியாது..!!

  ReplyDelete
  Replies
  1. 18+ வன்முறைக் காட்சிகளுக்காக! :-)

   Delete
 2. யூ ட்யூப்ல கிடைச்சால் பாக்கிறேன்...நன்றி !

  ReplyDelete
 3. ///உலகில் இதுவரை இருந்த எல்லா நாகரீகங்களும் அழிந்துபோகக் காரணமென்ன? இயற்கை? கிடையவே கிடையாது. அதைவிட முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

  தெரிந்தவர்கள் சொல்லலாம்!//

  மனிதன்..?

  ReplyDelete
 4. Mayangal Mel Gibson varnithathai pola migavum kaattu mirandigal illai....
  Oru padathai vaithu oru inathin varalarai ariya mudiyathu....
  Mayangal migavum aaraichi ennam kondavargalagavum, vaanaviyalili kai thernthavargalagavum irunthaargal enbathu unmai....
  Avargal suriyanai vanangiyathaga aatharam illai.... aanaal Mel Gibson padathil avargalai suriyanai vanangubavargalaga kaati irukiraar....

  ReplyDelete
 5. நண்பரே! Mel Gibson என்பவர் கத்தோலிக்கப் பழைமைவாதத்தில் மிக ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். மாயன்களின் நாகரீகம் கத்தோலிக்க பழைமைவாதக் கருத்துக்களுக்கு முரணாகவும் சவாலாகவும் இருந்ததால் மாயன்களின் மேல் அளவற்ற வெறுப்புக் கொண்டிருந்த Mel Gibson மாயன்களையும் அவர்களின் நாகரீகத்தையும் கொச்சைப்படுத்துவதற்காக மிகக் குள்ளநரித்தனத்துடன் எடுத்த திரைப்படமே இந்த Apocalypto. மாயன்களைப் பற்றிய ஆராய்ச்சியின் போது அவர்கள் தொழினுட்பத்தில் சிறந்து விளங்கினர் என்பது தெரியவந்தது. காலம்காலமாக எதற்காக விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டார்களோ அதுதான் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கமும்.

  ReplyDelete
  Replies
  1. :-( அப்பவே நம்மூர்ல சொன்னாங்க "நாய் விற்ற காசு குரைக்காது!"

   Delete