Blogger Widgets

ஹிந்தியர்கள்! - தலையங்கம்


          சமீபத்தில் என்னுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு. தமிழனுக்கு ஹிந்தி என்பது திணித்தாலும் வராது என்பது ஊர் அறிந்த விஷயம். இதற்கான காரணங்கள் சில தெய்வங்களையே சாரும். ஆனால் அந்த தெய்வங்களின் வாரிசு, பேரன், பேத்தி எல்லோரும் எங்கே என்ன படிக்கிறார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். இவைகள் முடிந்து போன விஷயங்கள். எனவே நடந்த நிகழ்வுக்கு வருவோம்.

    துபையில் இந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் இந்தியர்கள் (வேற பிரச்சினையே வேண்டாமே!). காலையில் வழக்கம்போல் பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றேன். உள்ளே நுழைந்ததும் எதிரே வந்த நண்பர் (மராத்தியர்), “கேஷா (எப்படி இருக்கிறீர்கள்) என ஹிந்தியில் கேட்டார்.
குட் என ஆங்கிலத்தில் பதிலளித்தேன். (நமக்கு பேசும்போது அது ஹிந்தி என்று தெரியும், அவ்வளவுதான்)

நான் ஹிந்தியில்தானே கேட்டேன், நீயும் ஹிந்தியில்தானே பதில் சொல்லவேண்டும் என்றார்.

பதிலேதும் சொல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?? என தமிழில் கேட்டேன்.
புரியவில்லை என்றார்.

நான் தமிழில்தானே கேட்டேன், நீயும் தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்??? மொழி என்பது மற்றவர் புரிந்துகொள்ள மட்டுமே தவிர நீயோ நானோ பேசுவதற்கல்ல! நாம் எந்த மொழியில் பேசினாலும் மற்றவர் புரிந்துகொள்ளவில்லையனால் அதனால் பிரயோஜனமில்லை என்றேன்.


தேசிய மொழியான ஹிந்தி தெரியாத நீயெல்லாம் ஒரு இந்தியானா? என்றார்."இந்திய பிரதேசங்களில் தோன்றிய முதல்மொழி தமிழ்தான். நீண்ட கால இலக்கணம் (தொல்காப்பியம் - கி.மு நான்காம் நுற்றாண்டுகொண்ட இந்தியாவின் ஒரே மொழி தமிழ் மட்டும்தான்.  இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதும தமிழ்மொழி மட்டும்தான் (அறிவித்தவர் டாக்டர் அப்துல்கலாம்  ஆண்டு 2004),  ஏன் உலகில் முதலில் தோன்றிய அனைத்து மொழிகளிலும் தொன்மையான இலக்கியம் கொண்டதும், இன்னும் அதன் வடிவம், இனிமை, இலக்கணம் மாறாமல் இருக்கும் ஒரே மொழி தமிழ்தான். முதலில் தோன்றிய சுமேரிய மொழியும், எகிப்திய மொழியும் (கி.மு-3000) முழுவதும் அழிநதுவிட்டன அல்லது வடிவம் மாறிவிட்டது.


குமரிக்கண்டத்தில் தோன்றிய தமிழில் இருந்து சுமார் 85 மொழிகள் தோன்றியுள்ளன. பாகிஸ்தானில் பேசப்படும் ப்ராகுய் மொழிக்கும் தாய் தமிழ்தான். எகிப்திலும், தாய்லாந்திலும், இலங்கையிலும் கி.மு ஒன்றாம் நுற்றாண்டைச சேர்ந்த  தமிழ் பற்றிய குறிப்பகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் கொரியன், ஜப்பான், ஐநு, மற்றும் பல ஆஸ்திரேலிய மொழிகளின் உச்சரிப்பும் தமிழை ஒத்திருக்கின்றன. ஜப்பான் மொழியில் சுமார் 250 வார்த்தைகள் முழுவதும் தமிழை ஒத்திருக்கின்றன. தமிழ்மொழிக் குடும்பமானது மற்ற எந்த மொழிக் குடும்பத்துடனும் எவ்வித சம்பத்தமும் கொண்டதல்ல. இது கி.மு 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தோன்றியிருக்க வேண்டும்.


தமிழின் ஒரு வாக்கியத்தில் எந்த சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. (ராமன் ராவணனைக் கொன்றான் - எதை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA - இதை மாற்றிப் பாருங்கள் - இது ஒன்றே போதும் தமிழின் செழுமையைப் பறைசாற்றுவதற்கு!) இதையெல்லாம் நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. உண்மை என்ன என்பதற்காகத்தான் சொன்னேன்!  இந்தியர்கள் ஹிந்தி படிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. உனக்குத் தேவை என்பதால் படித்தாய், எனக்குத் தேவையில்லையாதலால் விட்டுவிட்டேன். நான் இந்தியனே தவிர ஹிந்தியன் கிடையாது.” என்றேன்.

அவர் அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை. உண்மைகளை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. ஏன் ஹிந்துகடவுள்களும் ஹிந்துயிசமும்கூட ஆரியர்கள் மூலம் வந்தவைதான். அதற்குமுன் சூரியனும் இயற்கையும் மட்டுமே நம் கடவுள்களாக இருந்தன.
அவரர் நம்பிக்கைகளை விட்டு யாரும் வெளியேவரத் தயாராக இருப்பதில்லை!


யாது ஊரே யாவரும் கேளிர்!(இன்னா 40 என்ற இப்பகுதி நாம் சந்தித்த சில மனிதர்களை பற்றிய, சில நேரங்களில் நடந்தவற்றின் தொகுப்பு,)

0 COMMENTS:

Post a Comment