Blogger Widgets

ரா ஒன் – அந்தன சிந்தனயக்கிட்டாங்களே!

     170 கோடியைக் கொடுத்து வீடியோ கேம் விளாண்ட்டு வான்னா எப்படியிருக்கும்??? அப்படியிருக்கிறது படம். இனி விஜயை கிண்டல் செய்வதை விட்டுவிடலாம், அவரைவிட மோசமாக எடுப்பவர்கள் இருக்கிறார்கள், உதாரணம் – ரா ஒன். ஆழ்வார் படத்திற்கு பிறகு நான் பார்த்த மோசமான படம்.


மோசமான விமர்சனம் வந்தாலும் வாங்கிய டிக்கெட்டை என்னசெய்வதென்ற காரணத்திற்காக படம் பார்க்க சென்றேன். (Lamcy Plaza - Hindi versoin)

காட்சிகள்:

  • நீங்கள் எந்திரன், TRANSFORMERS, SPIDER MAN படங்களை பார்த்துவிட்டிருந்தால் இந்த படத்தை பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொன்றிலிருந்தும் 10 நிமிடங்களை சுட்டு ஒரு படமாக காட்டி இருக்கிறார்கள் – அவ்ளுதான்!
  • எந்திரனிலிருந்து ரயில் சண்டை, ரயில்மேல் ஓடுவது, இரும்புகளை இழுப்பது (இந்த கட்சியில்தான் நம்ம ரஜினி சிட்டியா வர்றார் – இந்த படத்தில் ஏன் வர்றார்னு அவருக்கே தெரியல), சுட்டிருக்கிறார்கள். (பாபாவில் ரஜினி செய்யும் வாலிபால் சண்டையையும் சுட்டிருக்கிறார்கள்.)
  • TRANSFORMERS படத்திலிருந்து வில்லன், ஹீரோ உடைகளின் நிறங்கள், சிறுசிறு பகுதிகள் ஒன்றாய் சேர்ந்து ரோபோவாக மாறுவது, கையில் பிஸ்டல் முளைப்பது ஆகியவற்றை சுட்டிருக்கிறார்கள்.
  • SPIDER MAN படத்திலிருந்து ஓடும் ரயிலை நிறுத்தும் காட்சியை சுட்டிருக்கிறார்கள்.
  • கதைப்படி ஷாருக்கான் டமிலராம், இவரது தமிழ் எனக்கு விளங்கவே இல்லை. அடிக்கடி ஐயோ(முறை) சொல்கிறார். அப்பா, இங்ஏஏஏ வா (இது தமிழாம்) என்று சொல்லி கடுப்பேத்துகிறார் மை லார்ட்.
  • படத்தில் நிறைய ஓட்டைகள் (மன்னிக்கவும் கிணறுகள்) - இந்தியாவிலும் சரி, லண்டனிலும் நிறைய பேர் செத்தும், வாகனங்கள் உடைந்தும் படத்தில் ஒரு போலீஸ் கூட வரவில்லை. (ஒருவேளை கொடுக்க காசில்லையோ?)
  • ரஜினியை ஸ்கேன் செய்து இது சிட்டி என உணரும் ரா ஒன் (நாயகன்), கரீனா வேடத்தில் வந்திருக்கும் ஜி ஒன்(வில்லன்) உணராதது ஏனோ???
  • மற்றபடி படத்தில் ஷாருக்கானின் பையனாக வரும் சிறுவனின் நடிப்பு அபாரம். "சம்மக்சலோ" பாடல் அருமை. கரீன கபூர் அழகோ அழகு!!! (பார்க்க போனதே அதற்குத்தானே)


கொட்டுகள்:

  • நிறைய வக்கிர வசனங்கள், குழந்தைகளுக்கான படங்களில் இவை எதற்கு??? உதாரணம் I WILL KICK YOUR FAT .SS – குழந்தைகளுக்கு நாம்தான் உதாரணம், நம்மிடமிருந்துதான் அவர்கள் கற்றுக்க் கொள்கிறார்கள், இதுபோன்ற வசனங்கள் நஞ்சை விதைக்கும் செயல்.
  • கிளைமாக்ஸ் சண்டையின்போது சிறுவன் ஜி ஒன்னிடம் சொல்கிறான் “மெயின் பாயிண்ட்ட பிடி”, அவரும் பிடித்துவிட(எங்கேன்னு கேக்கப்படாது) வில்லன் ரோபோ கேட்கிறான், “என்ன செய்கிறாய்??” -ஜி ஒன் சொல்கிறார் “தெரியவில்லை’
  • தமிழை இதைவிட கேவலப்படுத்தும் படம் வெளியாகுமா என்றால் தெரியவில்லை?? கரீனா கபூர் சொல்கிறார் “காண்டம் காண்டம்”. (இது தமிழ் வார்த்தையான “கொஞ்சம் கொஞ்சம்” என்பதை சொல்கிறாராம்)

MARKS - RA ONE - NOT EVEN ONE.


0 COMMENTS:

Post a Comment