Blogger Widgets

வாகை சூடவா : வாழ்நாளில் இழக்கக்கூடாத ஒரு படம் – திரை விமர்சனம்




      இனியா: முதலில் வீட்டில் சொல்லி சுத்திப்போடுங்கள்! என்ன நடிப்பு? வெட்கம், சிரிப்பு, அழுகை! “தைலத் தைலக் கிளி என அவர் ஆடுவதை ஆயிரம் முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்! படம் முழுவதும் அவர்மீதிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.

விமல்: இப்படியும் விமல் நடிப்பாரா?? ஒரு வெள்ளந்தி ஆசிரியராக வாழ்ந்திருக்கிறார்.

இயக்குனர்: 1966-க்கான கதையை எடுப்பது என்பதே சிரமம். ஆரம்பம் முதல் ஒவ்வொரு காட்சியியும் அழகாய் மிளிர்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தைக் கொடுத்ததற்காக நன்றிகள்.

நடிப்பு : விமல், இனியா, பாக்யராஜ் மற்றும் பல சிறுவர்கள்.
இயக்கம் : சற்குணம்
இசை : ஜிப்ரான்

1966-இல் நடக்கும் கதை. முதல் காட்சியிலேயே தியேட்டரில் எம்ஜிஆரை அடிக்கும் நம்பியார் மீது கோவப்பட்டு ஒருவர் துப்பாக்கியால் திரையச்சுட்டுவிடும் காட்சியில் தொடங்குகிறது படம்.
அரசாங்க ஆசிரியர் வேலை மகனுக்காவது கிடைக்க வேண்டும் என விருப்பப்படும் அப்பா பாக்யராஜின் ஆசைக்காக 6 மாதங்கள் தனியார் தொண்டு நிறுவனம் தரும் சான்றிதழுக்காக ஒரு கிராமத்திற்குச் செல்கிறார் விமல்.


ஊர்த் தலைவரிடம் வாங்கிய கடனுக்காக வாழ்நாள் முழுவதும் செங்கல்சூளையில் செங்கல் செய்யும் கிராம மக்களும், அவர்களது குழந்தைகளும். வாத்தியாரக் கண்டவுடனே ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.
டீக்கடை நடத்துபவராக இனியா! அவர் திரையில் தோன்றியதிலிருந்து அவரின் ஒவ்வொரு அசைவும் நம் கண்முன்னே நிற்கிறது.

ஊர்த்தலைவர் செங்கல் எண்ணிக்கையில் ஏமாற்றுகிறார் என்று விமல் சொல்லும்போது நம்பாத வெள்ளந்தி கிராம மக்கள் அதை நேரில் கண்டவுடன் உடனே கோவத்துடன் அவர்களின் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு சென்று விமல் தங்கியிருக்கும் கொட்டகையில் விட்டு, “எங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது சொல்லிக்கொடுங்கள் எனும் காட்சி நெகிழ வைக்கிறது.
மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டும் ஊர்த்தலைவர், குழந்தைகளின் கல்வியையும் எதிர்க்கிறார். பாடம் சொல்லிக்கொடுக்கும் விமலை ஆள்கொண்டு அடிக்கிறார். விமலுக்கு திடீரென அரசாங்க வேலை கிடைத்துவிடுகிறது. விமல் அந்த கிராமத்தை விட்டுச் சென்றாரா?? பிள்ளைகளுக்கு கல்வி அறிவு கிடைத்ததா??? திரையில் காணுங்கள்.


           படத்தின் ஒவ்வொரு காட்சியுமே அழகுதான். செங்கல்லில் “அனா எழுதிப் பழகுவதாகட்டும், “சிவகமி எனத் தவறாய் எழுதிய சிலேட்டை விமல் திருத்தும்போது “கால்விட்டுப் போச்சா?? என நொண்டி பையன் கேட்பதாகட்டும், ஆட்டைக் கண்டு பயந்து ஓடி விமல் சேற்றில் விழுவதாகட்டும், என படத்தின் தொடக்கம் முதல் நகைச்சுவை இழையோடுகிறது.

வெற்றிலை வாங்கும் ஒரு கிழவன், இனியாவிடம் என்னிடம் இன்னும் திறமை இருக்கிறது எனும்போது, “பார்த்து வெற்றிலை விழுந்துவிடப் போகிறது என கிராமத்துக்கே உரிய நக்கலில் பதிலளிக்கிறார்.
சிறுவர்களிடம் விமல் கதை சொல்லும்போது முன்பு எனது மார்பு இவ்வளவு பெரிதாய் இருந்தது என்றவுடன் ஒரு சிறுமி, சார் அதிலிருந்து பால் வருமா சார்??? என்கிறாள்.

பாடல்கள் ஒவ்வொன்றும் இனிமை
 சோளக்காத்து வீசும்போது
 போறானே போறானே
 செங்கல்சூளைக்காரா

வாகை சூடவா கேள்வி எதற்கு????


0 COMMENTS:

Post a Comment