தலைவா - திரை விமர்சனம்.

  ஓட்டையான ரோடுகளைச் சரிசெய்ய வக்கில்லை, போகிற கரண்டை சரி செய்ய தெம்பில்லை, இலவசம் கொடுத்தே ஏமாற்றி வரும் அரசாங்கங்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எண்ணிப்பார்க்கக்கூட நேரமில்லை ஆனால் ஏதாவது சினிமாவை ரிலீஸ் ஆகாமல் முடக்குவதென்றால் அப்படியொரு ஆனந்தம். முதலில் காவலன், விஸ்வரூபம் இப்போது தலைவா.

  இந்தப்படத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியாதாம். பிறகு எதற்கு அரசாங்கம் நடத்த வேண்டும், ரிசைன் செய்துவிட வேண்டியதுதானே? ஒரு படத்தைக்கூட வெளியிட எங்களுக்கு வக்கில்லை அதனால் ரிசைன் செய்கிறோம் என்று சொல்லிவிட வேண்டியதுதானே?

  அரசாங்கம் தடை செய்யும் அளவுக்கு துளிகூட அரசியலோ, அரசியல் வசனங்களோ இல்லை. சத்தியராஜ் கேரக்டர் பெயர் அண்ணா. ஒருவேளை இதற்குத்தான் தடையோ என்ன எழவோ!




தத்துவங்கள் தன்னம்பிக்கை வாழ்க்கை!


  • அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை!

  • பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர எல்லா ஆண்களும் போய்விட வேண்டும் :-)
  
  • வீடு சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்தாலும் பராவாயில்லை, மைக்செட் வைத்து ஆசிர்வதிக்கப்படும் இடத்திற்குப் பக்கத்தில் வேண்டாம்!

  • ஊருக்குள்ள எதைப்பார்த்தாலும் போட்டோ எடுத்து ஸ்டேடஸ் போட்டுர்றானுக. நம்பி உச்சா போக முடியல! சே!

  • குடிக்காமலும் சிகரெட் பிடிக்காமலும் இருந்து ஒரு பிறந்தநாளை அதிகப்படுத்துங்கள்!


சர் ரவீந்தர ஜடேஜா – SIR RAVINDRA JADEJA


  • சர் ரவீந்தர் ஜடேஜா பேட்டிங் பண்ணும்போது ஸ்டைன் வீசின பந்து பேட்டில படாம அவரு உடம்பில பட்டுடுச்சு. அப்புறம் எங்க தேடியும் அந்த பந்தைக் காணவே இல்லை. பேட்டில பட்டிருந்தாகூட சிக்ஸ்ஸோட போயிருக்கும், சர் உடம்பில பட்டது கிடைக்குமா?


  • சென்னைல நடந்த சென்னை சூப்பர்கிங்க்ஸ் VS பெங்களூர் மேட்ச் முடிஞ்சுட்டு மும்பையோட விளையாட மும்பைக்கு பிளைட்ல போயிட்டிருந்தாங்க. அப்போ டமால்னு ஒரு சத்தம். என்னடான்னு பார்த்தா கிரிக்கெட்பால் விமான இறக்கைல விழுந்திருக்கு. சர் மேட்ச்ல அடிச்ச சிக்ஸர்ல மேலே போன பால் இப்பத்தான் திரும்பியிருக்கு.


ரசித்த தெலுங்கு படங்கள் 1

ஆர்யா–2 (AARYA 2)

  ஒவ்வொரு சீனும் ரசிச்சு ரசிச்சு பார்த்த படம்னா அது இதான்! நம்ம எப்படி வீட்டுல நல்லவன் வேஷமும் உண்மைல தெள்ளவாரியாவும் நடிக்கிறோம்? அதை அப்படியே காட்டுவதுதான் இந்தப்படம். தெரியாம தம்மடிப்போம், தம்மடிச்சுட்டு வாயில ஸ்பிரே பண்றது, டாய்லட்ல சரக்கடிக்கிறது செம செம.



  அல்லு அர்ஜுன் நடிப்பு சான்ஸே இல்லை. இசை, டான்ஸ், பாட்டு என எல்லாமே ஒருசேர அருமை. காஜல் அகர்வால்கூட லிப்ட்ல லிப்ல கிஸ் சீன் இருக்குப்பா :-)

              


தொப்பி தொப்பி


  எப்படி பேசினாலும் கேட் போடுறானுக சிலர். இவிங்ககிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி மான் கராத்தேதான் பிறவு என்ன செய்ய? ஏலே இது சரிதானேனேனு கதைய படிச்சிட்டு சொல்லுவினம்.


  It happened at a New York Airport. This is hilarious. I wish I had the guts of this girl. An award should go to the United Airlines gate agent in New York for being smart and funny, while making her point, when confronted with a passenger who probably deserved to fly as cargo. For all of you out there who have had to deal with an irate customer, this one is for you.

A crowded United Airlines flight was canceled. A single agent was re-booking a long line of inconvenienced travelers.


சேட்டை – டரியல் சினிமா விமர்சனம்.

ஆர்ர்ர்யா – யாருயா இந்தாளு? பிங்க் சொக்காய போட்டுகினு கடசி அஞ்சு படத்திலேயும் அதே பாட்டுக்கு அதே டான்ஸ் ஆடிகினு இருக்காரு?

அஞ்சலி : மாடர்ன் டிரெஸ்ஸ போட்டுகினு வந்தா- ப்பா! யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி?

ஹன்சிகா! – டிரெஸ்ஸையும் தொப்பையயும் குறைச்சா மட்டும் பத்தாது, கொஞ்சமாச்சும் நடிக்கனும் கண்ணு. நைனா இந்த பொண்ணு பேசும்போதெல்லாம் எதோ பஞ்சாபி டப்பிங்க் படத்துக்கு வந்தமாதிரியே பீலிங்.

டைரு டக்டர்ர்ர்ரு : ஏப்பா கதைய செலக்ட் பண்ணும்போதே எதுக்கு பண்றோம்னு யோசிக்க வேணாமா? ஹிந்தில டெல்லி பெல்லி ஓடினதே பிட்டுக்காகவும், டபுள் மீனிங்குக்காவும் மட்டும்தான். தமிழ்ல ஒன்னும் இல்லாததற்கே படத்திக்கு சென்சார் கொடுக்க மாட்டனுவள். பின்னே பிட்டை எல்லாம் நீக்கிட்டு எடுத்தா? (ஏமாந்தது நானு). ஹிந்தி படத்தின் மிகப்பெரிய பிளஸ் “கருமி ராஜா, ஐ ஹேட் யூ” பாடல்கள். அதுவும் படத்தில் இல்லை.

படம் பார்த்த ஒரு ஹிந்திவாலா

மூஜிக் – : ட்ரெயின்குள்ளே உக்காந்துகினு பழைய ரேடியோ பொட்டில பாட்டு கேட்கற மாதிரியே ஒரு பீலிங்க். எல்லா பக்கத்திலிருந்தும் சொஈஈஈஈநனு ஒரு சவுண்டு. 40 நிமிஷம் அவ்வ்வ்!


கோழி எதுக்கு கடைல முட்டை வாங்குச்சு?

  2050-ம் வருடம், மனிதர்களைப்போலவே அனைத்து விலங்குகளும் பேசக் கற்றுக்கொண்டன. தமிழ்மொழி, மலையாள மொழிபோல் கோழிமொழி, ஆடு மொழி என தனித்தனி மொழிகள் உருவாகிவிட்டது. ஆங்கிலம், சீன மொழியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி கொசுவின் மொழிதான் மிக அதிகமாய்ப் பேசப்பட ஆரம்பித்தது. கொசுக்களின் குடும்பத்தில் மட்டும் ஒருமுட்டைதான் இடவேண்டும் என குடும்பக்கட்டுப்பாடு திட்டமே கொண்டுவரப்பட்டது.

நாயர் ஒருவர் மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது கடைக்கு சாமான்கள் வாங்க கோழி ஒன்று வந்தது.

கோழி முட்டை என்ன விலை? என்றது கோழி.

ஐந்து ரூபாய்

ஒரு முட்டை கொடுங்க! என்று ஐந்து ரூபாயை நீட்டியது கோழி.