இந்த படத்தைபற்றி சொல்வதைவிட படத்தைக் கீழே பார்த்துவிட்டு
வாருங்கள்.
படத்தின் காலம் மாயா நாகரிக அழிவின்போது
நடக்கும் கதை. மாயா நாகரிகம் என்பது 4000 ஆண்டுகளுக்கு
முன்புமுதல் இப்போதைய வட அமெரிக்காவின்
மெக்ஸிகோ நாட்டின் சுற்றுவட்டாரத்தில் தோன்றிய
நாகரிகம். படத்தின் மொழி மாயன் மொழி. (WITH ENGLISH SUBTITLES). இந்தப்படத்திற்கு மொழி புரிய வேண்டிய அவசியமில்லை.
கதை:
மாயன் நாகரிக அழிவின்போது, புதிய கோவில் கட்டி கடவுளுக்கு மனிதர்களைப் பலி கொடுத்தால் தங்கள் பஞ்சம்
தீர்ந்துவிடுமென தீர்மானித்து ஒரு காட்டுக்கு போய் அங்கு வேட்டையாடி பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரு கிராமத்தையே
பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அதில் நாயகன் ஜாகுவார் பாவும் சிக்கிக்கொள்கிறான்,
அதிலிருந்து அவன் மீள்கிரானா? இல்லையா? என்பதே கதை.
முக்கிய குறிப்பு :
படத்தில காட்டப்படுபவை
அனைத்தும் ஒரிஜினல். அத்தனை மக்களும், ஆடை
அலங்காரமும், (ஆடை எங்க இருக்குது?) துரத்தும் கருப்பு சிறுத்தைப்புலி உட்பட எல்லாமே ஒரிஜினல். ஒரிஜினல் சிறுத்தைப்புலியை துரத்தவிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் ஒரிஜினலாய் இருக்கவேண்டுமென்று மாயன் இனத்தைச் சேர்ந்தவர்களையே தேடிப்பிடித்து போட்டிருக்கிறார் இயக்குனர். இத்தனை பேருக்கு உடை அலங்காரம் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
இந்த படத்தை பார்த்துவிட்டு இதை எப்படி
எடுத்திருப்பார்கள் என்று நீங்கள் வியாக்காமலிருந்தால் அதுதான் வியப்பு.
Directed by - Mel Gibson
Starring - Rudy Youngblood, Raoul
Trujillo, Mayra
Sérbulo
Music by - James Horner