சைக்கோ தொடர்கதை - பகுதி 1

     இந்த உண்மைக் கதை யாரையும் புண்படுத்தவோ அல்லது காயப்படுத்தவோ எழுதப்பட்டதல்ல! நிறைய ஆபாசம்/வல்கர் இருந்தால் மன்னிக்கவும்! - அன்புடன் நிலவன்பன்.

     பொதுவா எனக்கு ஒரு குணமுண்டு! யாரைவாவது பார்த்தால் அப்போதே, அடுத்த கணமே என் மனது சொல்லிவிடும், இவன் யார்? எப்படிப்பட்டவன்னு. இது நல்லதுக்குத்தானே! என்றாலும் இதனால் பிரச்சினைகளும் உண்டு. மனது முடிவெடுத்துவிட்டால் பின் ஃபெவிகால் போட்டாலும் அவருடன் ஒட்டி பழக முடியாது. சரி கதைக்கு வருவோம்!

    மழை பெய்து ரோடெல்லாம் குளித்து பிரஷ்ஷா இருந்த சமயம். என் உடம்பெல்லாம் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டே என் ராசியான மொக்கை  CT-100ல் பெங்களூர் லால்பார்க்கின் வழியே கோணப்பன் அக்ரஹாராவிற்குப் போய்க்கொண்டிருந்தேன். சர்ட், பேன்ட், இதர இதர என நனையாத இடமே இல்லை. எனக்கு மழையில் பைக் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். அதுவும் ஆபீஸ் டைம் என்றால் ஆஹா!! அப்போது என் ஃபோன் ரிங்கியது.

வேலைக்காக துபாய் செல்வது என்று முடிவாகியிருந்த சமயம். பைக்கை  லால்பார்க்-கின் அருகே நிறுத்திவிட்டு போலீஸ் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு (அதான் ஹெல்மெட் போடலையே? 50-அழ வேண்டுமே?) போனை எடுத்தேன்.

   "Hellow! Nila?" (நா பேரு)

    "Yes speaking"

    "I am Charles Here, I'm going to join as a manager for your company in Dubai. Shall we meet? Can u come to my home? Note down the address ......... "


நகைச்சுவைக் கவிதைகள்!


 • நான் கனவுகளை வெறுக்கிறேன்
  காரணம்
  நீ வருவதால் அல்ல;
  உன்னுடன் இன்னொருவன் வருவதால்! • யானையின் உடல்
  பன்றியின் முகம்
  கழுதையின் குரல்
  கரடியின் கைகள்
  குரங்கின் புன்னகை
  என்றெல்லாம் விளித்திருப்பேன்;
  நீ மட்டும்
  என் காதலியாய் இல்லாமலிருந்திருந்தால்! • நட்சத்திர உணவகம்,
  நட்சத்திரமாய் அவள்.
  இருவரும் கண்களால்
  கவனித்துக் கொண்டோம்
  மௌனப் பார்வையால்
  பேசிவிட்டுக் கேட்டாள்;
  "சார்! என்ன சாப்புடுறீங்க?"


உன்னைக் காதலிக்கவில்லை!


எனக்கு யாரும் குழிவெட்டவில்லை,
எனக்கு நானே
குழி வெட்டிக்கொண்டேன்.

எனக்கு யாரும் வழிகாட்டவில்லை,
நானே சென்று
அதில் விழுந்துவிட்டேன்.

எனக்கு யாரும் பகையில்லை,
எனக்கு நானே பகையானேன்.

என்னை யாரும் ஏமாற்றவில்லை,
என்னைநானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்-
உன்னைக் காதலிக்கவில்லை என்று!

                                 - நிலவன்பன்.


எனக்கு யாரும் தடையில்லை.
நானே எனக்கு 
தடை போட்டுக்கொண்டிருக்கிறேன்.

என்னை யாரும் கேட்கவில்லை - நானேதான்
அவளை கேட்காமல் இருக்கிறேன்.

எனக்கு யாரும் சொல்லவில்லை.
அவளும் இப்படித்தான்
தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் என்று!

                                 தீபிகா (http://theepikatamil.blogspot.com/)
கேவலமான உண்மைகள்!

 1. அத்தியாவசிய தேவையான அரிசியின விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
 1. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

 2. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

 3. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!


 4. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!


இது செம ஹாட் மச்சி - உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப்


 1. கண்ணா வைரஸ் பாதிப்பில்லாத டெஸ்க்டாப் வேணுமா??

 2. விண்டோஸ விட வேகமான டெஸ்க்டாப் மற்றும் வேகமான இன்டர்நெட் வேணுமா? (இணையம் விண்டோசை விட மிக வேகமாக செயல்படும்)

 3. அத்தனையும் இலவசமா வேணுமா? (இலவசம்னா ஆட்சியயைவே மாத்திரவங்க, இதைப் பண்ணமாட்டமா?)

கண்ணா மூணு லட்டு சாப்பிடனுமா? அப்ப உடனே உபுண்டுவ டவுன்லோட் பண்ணு!!!


சிறப்புகள்:

 • இலவசமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிக் கொள்ளலாம்.

 • உபுண்டு லினக்ஸ்சை விண்டோஸ் உடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.. தேவைப்படும்போது எதேனும் ஒரு டெஸ்க்டாப்பில் நுழைந்து உபயோகித்துக்க் கொள்ளலாம்.

 • வைரஸ் கிடையவே கிடையாது. (99.99999999%)


என் காதல் அது நிலவின்மீது..தண்ணீர் பிடிக்கச் சென்றேன்
குழாயில்
காற்று வரும்போது..


வானொலி கேட்க விரும்பினேன்
ஒலிபரப்பு
முடிந்த பின்பு..


ஓவியம் வரைய விரும்பினேன்
நான்
இதுவரை கண்டிராததை..


என் காதலும் அதுபோலத்தான்,
எட்டா
உயரத்திலிருக்கும் நிலவின்மீது...
இது ஹைக்கூ பயணம்...


 • O நான்
  O2 அவள்
  O3 கனவு...


 • இனிக்கத்தான் செய்கிறது
  உன் முத்தமும்,
  பின் மொத்தமும்...


 • அவள் காந்தியைப்
  போன்றவள் என்றேன்,
  குஜராத்தில் பூகம்பம்...


 • ஒரு நாயைக்
  காதலிக்கிறேன்,
  வாலாட்டுகிறது...


 • பிறப்பது எளிது
  மனிதனாய்!
  வாழ்வதோ கடினம்
  மனிதனாய்!


துபாயில் கடுப்பேற்றிய A.R ரஹ்மான்

   சார்! உங்களுக்கு சோகப்பாட்டு மட்டும்தான் புடிக்கும்னா உங்கவீட்டு குளியலறையில் போய்ப் பாடுங்கப்பா! லைவ்ஷோ என்பது மக்கள் சந்தோசமாகப் பாடி ஆடுவதற்காக வருவது, அதில் சுமார் மூன்று மணிநேரம் சோகப்பட்டாவே போட்டுக் கடுப்பேற்றிவிட்டார் மை லார்ட்!

   9-ம் தேதி இரவு துபாய் கிரிக்கெட் மைதானத்தில் A.R ரஹ்மான் வழங்கிய இசை நிகழ்ச்சியில்தான் இப்படிக் கடுப்பேற்றினார். "இங்கு என்ன பாட்டுப் போட்டியா நடக்குது??" என நண்பர் ஒருவர் கிண்டல் செய்தார். நான்கு ஹிந்தி பாடலுக்குப் பிறகு, "தமிழ் பாட்டு பாடலாமா?" என்று ரஹ்மான் கேட்டுவிட்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து 2 பாடல்கள் பாடினார்கள்.

   காதலன் படத்தின் "பெட்டா ராப்" பாடலுக்கு இசையை ரீமிக்ஸ் செய்து பாடினார்கள். அந்த பாடலுக்கு இனிமையே அந்த எளிமையான இசையும் நடனமும்தான்அதைவிட்டுவிட்டு ஒரு ஆங்கில இசை கொடுத்தால் எப்படியிருக்கும் அதுவும் நடனமில்லாமல்??


   எந்திரன் படத்திலிருந்து "இரும்பிலே ஓர் இருதயம்" பாடலை மெனக்கெட்டு ரோபோக்களாக ஆடியதற்கு பதிலாக "சந்திரலேகா" போட்டிருக்கலாம். அந்தப் பாடலை ஐஸ்வர்யாராய் ஆடினாலே டிவியில் பார்க்க முடியாது, அவ்வளவு கேவலமாக இருக்கும்!

   மிகவும் எதிர்பார்த்துப்போன "தையா தையா", "முஸ்தபா முஸ்தபா", "USE CONTROL (HINDI)" மற்றும் பல ஹிட் பாடல்களைப் போடவில்லை. இரண்டு ஆங்கிலப் பாடல்கள், இவைகள் எந்தப் படத்தில் வருகிறதேன்றே பலருக்குத் தெரியவில்லை (நேக்கும்தான்!)

சிறப்புகள்:

   உண்மையில் லைட்டிங் செய்தவரைப் பாராட்ட வேண்டும் அவ்வளவு அற்புதம்.. ஹாஜா மேரே ஹாஜா என்ற ஹிந்தி பாடலுக்கு 3D லைட்டிங் மிக மிக அருமை (புகைப்படம் இணைப்பு). அந்த பாடலுக்கு இசுலாமிய உடையில் வந்து ரஹ்மான் பாடியது, குரல், இசை என அனைத்தும் அற்புதம்..


ஒரு கடிதம் எழுதினேன்!


"நான் உன்னை
நேசிக்கவில்லை,
பாசமாய்த்தான் பழகினேன்"
எடுத்த உடனேயே
கடிதத்தின் தொடக்கம்!

சுவையான நடையினிலே
வசைமொழிகள் பொழிந்திருக்க
இறுதியில்,
"என்றென்றும் தோழி"
அடிக்கோடுடன்.

படித்து முடித்தபின்தான்
கிடைத்தது நிம்மதி,
அருகில் அழுதுகொண்டு
ஆருயிர் நண்பன்!

யாருடையது கொடூர கதை?

   நூறு ஆண்டுகளுக்குப்பின் (எத்தன நாளைக்குத்தான் முன்னாடி கதையவே சொல்றது?) உலகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டதுஎங்குமே மின்சாரம் இல்லைஅனைத்துக் கட்டிடங்களிலும் லிப்ட் இயங்கவில்லைபத்துமாடிக் கட்டிடம் என்றால் பத்தாவது மாடியை வாங்கவே ஆளில்லைவாடகைக்குக்கூட யாரும் வரவில்லைஏதாவது வேண்டுமென்றாலும் அவர்களேதான் கீழே சென்று எடுத்துவர வேண்டும்.

   பணியின் காரணமாக ஒரு நிறுவனம் மூன்றுபேரை அழைத்திருந்ததுஅவர்களுக்கு ஒரு கட்டிடத்தின் 163ஆவது மாடியைக் கொடுத்ததுமூவருக்கும் சந்தோசம், "ஆஹா இவ்வளவு பெரிய ஹோட்டலில் தங்கப்போகிறோம்!” என்றுஆனால் ஹோட்டலின் ரிசப்ஷனை அடைந்தவுடன்தான் தெரியும், 163மாடியையும் படியில் நடந்துதான் செல்ல வேண்டும் என்றுவேறு வழியில்லாமல் வாழ்கையை நொந்துகொண்டு கடுப்புடன் நடக்க ஆரம்பித்தார்கள்.

   பத்தாவது மாடியைக் கடக்கும்போது ஒருவனுக்கு ஒரு யோசனைஎப்படியும் நமது அறையை அடைய மூன்றுமணி நேரமாகும்அதுவரைக்கும் தங்கள் வாழ்வில் நடந்த ஆளுக்கொரு கொடூர கதையைச் சொல்வது என முடிவெடுத்தார்கள்திடீரென மூன்றாமவன், "நான் முதலில் சொல்கிறேன்இது மிகவும் முக்கியமானதுஎன்றான்

   உடனே முதாலாமவன், "கதை வரிசைப்படிதான் வர வேண்டும்நான் முதலில் சொல்கிறேன்என ஆரம்பித்தான்.


அவள் முடி, அவள் புன்னகை, அவள் நினைவு

அவள் முடி

பூவின்மீது
உதிரும் பூவைச்சூடும்
உதிராப் பூ...


அவள் புன்னகை

தினசரி
எனக்குத் தரும்
தரிசனம்...
அவள் நினைவு

என் உயிரிருக்கும்வரை
என்னைவிட்டுப் பிரியாத
என் நிழல்...
உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க - UPDATED

      இது TOP MENUவிற்கான முந்தைய பதிவின் புதுப்பிப்பு. சில எளிமையான விடயங்கள் நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறதுஅவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில்இன்று நம்முடைய ப்ளாக்கில் TOP MENU-வை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். (TOP MENU – என்று ஆங்கிலத்தில் எழுதியதற்காக உங்கள் கணினியில் தார் பூசினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)


   நீங்கள் பிற இணையதளங்களில் கிடைக்கும் TEMPLATE-ஐ உபயோகிப்பவர்களாய் இருந்தால் TOP MENU உட்பட அனைத்தும் அந்த TEMPLATE-ல் கூடவே இணைந்து வரும்ஆனால் நீங்கள் உங்களுக்கு வேண்டிய TEMPLATE-ஐ நீங்களே உருவாக்கினால் இந்த TOP MENU பெரும் பிரச்சனையாகும்.

   முதலில் BLOGGER DASHBOARD – LAYOUT – ADD GADJET – LINKLIST தேர்ந்தெடுக்கவும்LINKLISTக்கு தலைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம், அதில் உங்களுக்கு வேண்டிய மெனுக்கள் மற்றும் லேபிள் URL இணைக்கவும். இந்த லிங்க் லிஸ்டை ப்ளாக் தலைப்பின்கீழ் வருமாறு வைக்கவும். லிங்க் லிஸ்ட் இணைக்கும்போது லேபலுடன் (?max-results=7) உங்களுக்குத் தேவையான அளவு வருமாறு இணைக்கவும். இதனால் தேவைவான அளவு தேடல் மட்டுமே காட்டப்படும். (உதாரணம் http://nilapennukku.blogspot.com/search/label/கவிதை?max-results=7 )


உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க!


இந்த பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது - புதுப்பிக்கப்பட்ட பதிவிற்கு செல்ல உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க - UPDATED


   சில எளிமையான விடயங்கள் நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில், இன்று நம்முடைய ப்ளாக்கில் TOP MENU-வை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். (TOP MENU – என்று ஆங்கிலத்தில் எழுதியதற்காக உங்கள் கணினியில் தார் பூசினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

   நீங்கள் பிற இணையதளங்களில் கிடைக்கும் TEMPLATE-ஐ உபயோகிப்பவர்களாய் இருந்தால் TOP MENU உட்பட அனைத்தும் அந்த TEMPLATE-ல் கூடவே இணைந்து வரும். ஆனால் நீங்கள் உங்களுக்கு வேண்டிய TEMPLATE-ஐ நீங்களே உருவாக்கினால் இந்த TOP MENU பெரும் பிரச்சனையாகும்.

   முதலில் BLOGGER DASHBOARD – LAYOUT – ADD GADJET – LINKLIST தேர்ந்தெடுக்கவும்LINKLISTக்கு தலைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம், அதில் உங்களுக்கு வேண்டிய மெனுக்கள் மற்றும் லேபிள் URL இணைக்கவும். இந்த லிங்க் லிஸ்டை ப்ளாக் தலைப்பின்கீழ் வருமாறு வைக்கவும்.


அவள் தாவணி, அவள் வளையல், அவள் செவ்விதழ்கள்

அவள் தாவணி


சுற்றியிருப்போருக்குத்
தெரியும்
கொடிமீது சுற்றிய
பாம்பாய்...


அவள் வளையல்


நான் அவளுக்குப்போட
நல்தமிழர் செய்த
நடைமுறை...அவள் செவ்விதழ்கள்


செந்தமிழும்
செழுந்தமிழாய்ச்
சிறக்கும் இடம்...
வால்மார்ட் சில்லறை வணிகம் அனுமதி கொடுத்து இந்தியாவை கூறுபோட்டு விற்கிறார்கள்

   இந்திய சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை 51 சதவிகிதம் அனுமதிக்கிறார்களாம்நாம் விளைவித்துவேலைசெய்துஅறுவடைசெய்து கொடுக்கும் விளைபொருளை ஒரு அமெரிக்கக் கம்பெனி நமக்கே விற்று லாபத்தை அவர்கள் நாட்டுக்குக் கொண்டு போவார்களாம்! - இதை நிறைவேற்ற ஒரு கட்சி துடியாய்த் துடிக்கிறது. நாட்டைத் திரும்பவும் ஆங்கிலேயரிடம் நாட்டை ஒப்படைக்கப் போகிறார்களா?

   தற்போது இந்தியாவில் சில்லறை வணிகர்கள் (சிறு சிறு கடைகள் உட்பட - அதாவது தெருமுனைல கடை வச்சிருக்கிற சேட்டான்கடைகள் உட்பட) மற்றும் அதன் மூலம் வேலைவாய்ப்பில் ஏறக்குறைய 4-கோடி பேர் உள்ளனர்இவர்களின் கதிஇந்த சட்டம் மட்டும் நிறைவேறப்பட்டால் குறைந்தது 2-கோடி பேர் மூன்று வருடங்களுக்குள் வேலை இழக்க நேரிடும்!

   தற்பொழுது நாம் விளைவிற்கும் பொருள் பல சில்லறை முதலீட்டாளர்கள் மூலம் மக்களைச் சென்றடைகிறதுமுக்கிய விஷயம் இவர்கள் அனைவரும் இந்தியர்கள்,
உழைப்பவர்கள்நம்முடைய உழைப்பை நாம்தான் அனுபவிக்கிறோம்வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதித்தால் அவர்கள் ஒன்றும் இங்குவந்து வேலை செய்யப் போவதில்லைஆனால் லாபத்தை எடுத்துக்கொள்வார்கள்!

எவன் செத்தால் எனக்கென்ன?

 • இதை அனுமதித்தால் மூன்று வருடங்களுக்குள் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு சொல்கிறது. - இரண்டு கோடி வேலைகளை அழித்துவிட்டு அதில் பாதி வேலைவாய்ப்பைக் கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? - வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் பெருகும்..

 • இன்று தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதுஇனி அவர்கள் (வெளிநாட்டுக் கம்பெனிகள்) சொல்லுவதுதான் விலை  என்ற நிலை உண்டாகும்தான் ஏமாற்றப்படுகிறோம் என்றுகூட அறியாத அப்பாவி விவசாயி வெளிநாட்டு நிறுவன முதலாளிகளுக்காக உழைத்துக் கொண்டிருப்பான்!.

 • வெளிநாட்டு நிருவனங்களுடன் கூட்டு சேர்ந்து கடைகளைத் திறக்கும்  மிகப்பெரிய இந்திய நிறுவனங்கள் இன்னும் வளரும் ஏழை இன்னும் ஏழையாவான்!. பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆவான்!


TAMIL NEWS - செய்திகள்

இந்தியா, இலங்கை, சினிமா, உலகச் செய்திகள் உடனுக்குடன்!துபாய் சுற்றுலா - 1

   துபாயில் இப்போது குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. நம் ஊட்டியைப்போல் குளிர் அடிக்கிறது. சுற்றுலா வருவதற்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உகர்ந்த சமயம். சில இடங்களை இங்கு பார்ப்போம்.

தேரா படகு சவாரி (DEIRA BOAT)

   படகில் செல்வதென்பது மிகச் சிறந்த ஓர் அனுபவம். நீங்கள் படகில் செல்லச் செல்ல பறவைகள் பறந்து வந்து நீரில் அமர்வதைப் பார்க்க பார்க்க உங்கள் கண்கள் பூரித்துவிடும். (இங்கே இருப்பவர்களுக்கு கோடை காலத்திற்கு பிறகு நவம்பர் தொடக்கத்தில்தான் பறவைகள் கண்ணுக்கே தென்படும்!). அனைத்து படகுகளும் தற்காப்பு உடைகளைக் கொண்டிருக்கின்றன. இறங்கும்வேளையில் உங்களுக்கு உதவ ஒருவர் காத்துக் கொண்டிருப்பார். நெடுந்தூரம் செல்ல வாட்டர்பஸ்சும் உண்டு. இவை அனைத்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன..


ஜுமேரா கடற்கரை (JUMEIRA BEACH)

   துபாய் முழுவதும் கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.. ஜுமேரா சாலை நெடுங்கிலும் நீண்ட கடற்கரை உள்ளதுஇந்த நீண்ட கடற்கரை தனியார் கட்டிடங்களால் சிறுசிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.. கடற்கரைகள் முழுவதும் மென்மையான வெள்ளை மணல்களைக் கொண்டிருக்கிது.. கடற்கரைகள் இந்த மூன்று மாதங்களிலும் ஐரோப்பியர்களால் நிரம்பி வழியும். (நீ எதுக்கு அலையுறேன்னு நேக்கு தெரியும்!)