தலைவா - திரை விமர்சனம்.

  ஓட்டையான ரோடுகளைச் சரிசெய்ய வக்கில்லை, போகிற கரண்டை சரி செய்ய தெம்பில்லை, இலவசம் கொடுத்தே ஏமாற்றி வரும் அரசாங்கங்களுக்கு மக்கள் பிரச்சினைகளை எண்ணிப்பார்க்கக்கூட நேரமில்லை ஆனால் ஏதாவது சினிமாவை ரிலீஸ் ஆகாமல் முடக்குவதென்றால் அப்படியொரு ஆனந்தம். முதலில் காவலன், விஸ்வரூபம் இப்போது தலைவா.

  இந்தப்படத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியாதாம். பிறகு எதற்கு அரசாங்கம் நடத்த வேண்டும், ரிசைன் செய்துவிட வேண்டியதுதானே? ஒரு படத்தைக்கூட வெளியிட எங்களுக்கு வக்கில்லை அதனால் ரிசைன் செய்கிறோம் என்று சொல்லிவிட வேண்டியதுதானே?

  அரசாங்கம் தடை செய்யும் அளவுக்கு துளிகூட அரசியலோ, அரசியல் வசனங்களோ இல்லை. சத்தியராஜ் கேரக்டர் பெயர் அண்ணா. ஒருவேளை இதற்குத்தான் தடையோ என்ன எழவோ!