முதல்ல
ஒட்டு போட்ட அனைவருக்கும் நன்றி! இப்படிப்பட்ட ஒரு முடிவை நிச்சயம் எதிர்பார்க்கவே
இல்லை, ஏன்னா முதலில் வந்திருப்பது நாம் எதிர்பார்த்தது அல்ல! வெற்றி என்பதுதான்
முதலில் வரும் என்று நினைத்தேன்! சரி முடிவுகளை பார்ப்பம்! மொத்தம் பதிவான
ஓட்டுக்கள் – 168.
1. அவளு(னு)க்கு
வேறொருவருடன் கல்யாணமாய்டிச்சி – 49 ஓட்டுக்கள் (29%)
அடப்பாவிகளா
ஊருக்குள்ள நிறைய பேர் இப்பிடிதேன் திரியறானுகளா? விளங்கிடும்! அவிங்களுக்கு
கல்யாணமானாலும் இன்னும் அது என் ஆளுன்னு ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியுற?
வெக்கமா இல்லை உனக்கு? (எப்படி பார்த்தாலும் ஓட்டுல நாங்கதான் ஜெயிச்சம்னு
சந்தோசப்படக்கூடாது!)
2. வெற்றி! வெற்றி! வெற்றி! – 44 ஓட்டுக்கள் (26%)
வாழ்த்துக்கள்!
காதல் வெற்றி பெற்றால் மட்டும் போதாது – நீங்கள் இல்லற வாழ்க்கையிலும் வெற்றி
பெற்றால்தான் உங்களது ஓட்டு முழுமையாக செல்லுபடியாகும்! (ம்கூம்!!! கள்ளாட்டம் ஆடுற
நீ அப்படின்னு சொல்லுற உன் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்)
3. ஊரே
சிரிப்பா சிரிக்குது – 28 ஓட்டுக்கள் (16%)
அதெப்படி
மச்சி ஊரே சேர்ந்து கேவலமா சிரிக்கும்போதும் கொஞ்சம் கூட சொரணையே இல்லாம இருக்கிற?
ஊரு பூரா சிரிக்க நண்பர்களும் ஒரு காரணமா இருப்பாங்க! ஏன்னா உங்க காதலை டமாரம்
அடிப்பதே அவனுகளுக்கு வேலையா போச்சு! இப்பிடி ஊரே சிரிக்கும்போதும் “என் அஞ்சல
மச்சி அவ“ அப்பிடின்னு சொல்லுற உன் தன்னம்பிக்கைய பாராட்டுறேன்!
4. இன்னும்
நினைத்துக்கொண்டெ இருக்கிறேன் - 22 ஓட்டுக்கள் (13%)
என் இனமடா
நீ – அதெப்பிடி அது கிடைக்காதுன்னு தெரிஞ்சும் இன்னும் நினைச்சுகிட்டே இருக்க? அதனால
ஏதாச்சும் பிரயோஜனம் உண்டா? – இது எனக்கு நானே கேட்டுக் கொள்ளும் கேள்விகள்! கொல்லும் கேள்விகள்!
5. காதலை
இன்னும் சொல்லவில்லை – 17 ஓட்டுக்கள் (10%)
அட
பக்கிகளா! சொல்லாம? நீ மட்டும் “எனக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடிச்சி” அப்படின்னு
நினைச்சுகிட்டு திரிஞ்சா என்ன பிரயோசனம்? அவிங்களுக்கு இன்னொருத்தர் மேல லவ்
வர்றதுக்கு முன்னாடி உடனே போய் காதலைச் சொல்லு! (எங்களது காதல் தெய்வீக காதல்,
அவளே புரிஞ்சுக்குவா அப்படின்னு திரிஞ்ச, அப்புறம் உனக்கு எ டண்டனக்கா
டண்டனக்காதான்)
6. அனுமதி
வாங்கினபிறகு சொல்றேன் – 8 ஓட்டுக்கள் (4%)
உங்க காதல்
100% திருமணத்தில் முடியும், ஏன்னா கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே நீங்கள்
துணையாகிவிட்டீர்கள்!J (அதாவது புருசனாயிட்ட! இப்பவே ஒரு ஓட்டு
போடனும்னாலும் கேட்டுட்டு போடுற பாரு, உன் உண்மை எனக்கு பிடிச்சிருக்கு!)
கழட்டி விடுவது எப்படின்னு தெரியணும்னா இதை படிக்கலாம் - காதலில் தோற்பது எப்படி?
கழட்டி விடுவது எப்படின்னு தெரியணும்னா இதை படிக்கலாம் - காதலில் தோற்பது எப்படி?
Tweet |
0 COMMENTS:
Post a Comment