Blogger Widgets

ஹாட் பெல்லி டான்ஸ் உடன் ஒரு DESERT SAFARI

  துபாய்க்கு நீங்கள் வந்தால் ஒருமுறையேனும் சென்றுவர வேண்டியது – துபாய் பாலைவனப் பயணம்! என்ன புரியலையா? அதான் DESERT SAFARI.
  ஏதேனும் ஒரு டிராவல் ஏஜன்ட்டிடம் புக் செய்துவிட்டால் மதியம் 2 மணிக்கு வீட்டிலேயே வந்து பிக்-அப் செய்து கொள்வார்கள் அதேபோல் பயணம் முடிந்தவுடன் 10 மணிக்கு வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுவர்.

டெசர்ட் சஃபாரி:

  பாலைவனத்திற்குள் LAND CRUISER வாகனம் நுழைந்த உடனே வித்தியாசம் தெரியும்,. ஒவ்வொரு இடத்திலும் சரிந்து சரிந்து போகும்போது “காசு கொடுத்து கைலாசம் போகனுமா?” அப்படின்னு தோணும். செத்தாண்டா சேகருன்னு பார்த்தா அவ்வளவு லாகவமாக வண்டியை ஓட்டுவார் டிரைவர். 
                                                

இப்பிடி அரை மணிநேரம் உயிரைக் கைல பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் பிறகு பாலைவனத்தின் நடுப்பகுதில ஒரு கேம்ப்ல கொண்டுபோய் விடுவார்கள்.

ஒட்டக சவாரி:

  ஒட்டகத்துமேல போறதுல என்னய்யா இருக்கு? அப்படின்னு நினைச்சா – தம்பீ நீ இன்னும் வளரனும்! ஒட்டகத்துமேல ஏறி உட்கார்ந்த உடனே, அது எழும்போது வருமே ஒரு பயம் – அவ்வ்வ். முக்கியமா இன்னொரு விஷயம், ஒட்டகம் நடக்கும்போது குலுங்கி குலுங்கி நடக்கும். எந்த ஒரு ஹீரோயினும் அப்படி குலுக்க முடியாது J



HENNA PAINTING – மருதாணி வைக்க:

  கைகளுக்கு மருதாணி டிசைன் பண்ணிக்கொள்ளலாம் – வேறு இடங்களுக்கு வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளலாம்! (சென்சார் கட்)



அரேபியன் உணவு:


  அரேபியன் காபி, டீ-யுடன் அரேபியன் உணவு சைவ, அசைவ வகைகளுடன் ரெடியாய் இருக்கும். 
சரக்கு வேண்டுவோர்க்கு தனியாய் கிடைக்கும்.



ஹாட் பெல்லி டான்ஸ் – BELLY DANCE

  நம் ஊரில் போடுவாங்களே ரெகார்ட் டான்ஸ் அதுமாதிரியான கேவலமான ஆபாச நடனங்களுக்கு (அதில் நடனமே கிடையாது என்பது வேறு விசயம்) இந்த பெல்லி டான்ஸ் 100% தேவலை.

சும்மா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடனும் சரியா?

                                                


TANOURA DANCE:


  இது எகிப்திய புகழ்பெற்ற நடனம்! பெல்லி டான்ஸ்க்கு அடுத்து இந்த நடனம்


                                               


ஷிஷா ஸ்மோக்கிங்

  ஷிஷா ஸ்மோக்கிங் இலவசமாக கிடைக்கும். இந்த ஷிஷா புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை, கூடுமானவரை தவிர்க்கவும். (ஷிஷா ஸ்மோக் என்றால் என்ன?)


இலவசம்னா ஆட்சியையே மாத்துரவங்க? இதை பண்ணமாட்டமா?

DESERT SAFARI இருவகை நேரங்களில் செல்லலாம் 2PM-10PM OR 4PM TO 8AM (இதில் இரவு அங்கேயே தங்க சிறப்பு கேம்ப் வசதி கிடைக்கும்


UPDATE : துபாய் பற்றிய பதிவுகள் - 1. துபாயில் தமிழர்கள் 2. துபாய் சுற்றுலா


13 COMMENTS:

  1. ம்ம..நாங்கலாம் எப்போ துபாய் வந்து இதெல்லாம் பார்க்குறது,?

    ReplyDelete
    Replies
    1. இக்கரைக்கு அக்கரை பச்சை :)

      நான் எப்படா பசுமையா ஒரு இடத்திற்கு போவேன்னு ஏங்கிகிட்ருக்கேன்! நீங்கவேற!

      Delete
  2. ஒரு ஜோக் ஞாபகம் வருது -
    Difference Between Rain In CHENNAI And DUBAI
    In Dubai After Rain, Water Disappears In 5 Mins
    .
    .
    In CHENNAI After Rain, The Road Disappears In 5 Mins...!

    (இந்த கைலாசத்த கண்ல காட்டறதேல்லாம் எங்க சென்னை ஆடோகாரர்களுக்கு ஜுஜுபி...)

    ReplyDelete
    Replies
    1. But there you can see the people not the traders :)

      Delete
  3. பெல்லி டான்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்........

    ReplyDelete
    Replies
    1. நாங்கெல்லாம் DESERT SAFARI போவதே அதற்காகத்தான் :)

      Delete
  4. Replies
    1. இந்த மொக்க தளத்த பத்தி சொன்ன அந்த நல்லவர் யாருங்கோ?

      Delete
  5. நிலவன்பன்,
    துபாய் பாத்துடணும்கறதுதான் என் கடைசி ஆசை. இங்க இருக்கற டூரிஸ்ட் மூலமா வரலாமா? டெசர்ட் சபாரி காட்டுவாங்களா? கைலாசத்துக்கு கூட்டிட்டுப் போவாங்களா? உங்களைப் பாக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா, தாராளமாய் வாங்கோ! Deser Safari தாராளமாய் போகலாம்! ஆனால் வருவதால் இருந்தால் Oct-Feb மாதங்களில் வரவும், அப்போது மட்டுமே குளிர்காலம்!

      ஆனா கடைசியா இந்த குயந்தைய பாத்து என்ன ஆகப்போகுதுங்கோ?

      Delete
  6. Replies
    1. ஆமா! அது எப்பிடி இந்த தளத்தில வந்திச்சு?

      Delete
  7. desert safaarikkaagave kandippaa dubaay poay varanum

    ReplyDelete