Blogger Widgets

ஜோக்ஸ் - என் மாமன் என் உரிமை! நகைச்சுவை வசனம் 2

வாசகர்கள் காதல் காமெடி வசனங்கள் 1-ற்கு கொடுத்த பேராதரவைத் தொடர்ந்து அடுத்த பதிவை வெளியிடுகிறோம். (எத்தனை பேர் அப்டின்னு மொக்கை போடக்கூடாது)

காதல் வசனங்கள் 4:

அவன் : குட்டி... உன் அப்பன் எங்கடி? பார்த்து ரொம்ப நாளாச்சு?

அவள் : ஏய்! என்ன பத்தி என்ன வேண்ணாலும் சொல்லு! எங்கப்பாவ பத்தி எதுக்குடா அவன் இவன்னு சொல்லுற?

அவன் : ம்ம்ம்ம் சரி! என் மாமன் ஒரு சரியான லூசு! குடிகாரன்!

அவள் : ஏய் ஏண்டா திரும்பவும் எங்கப்பாவ வம்புக்கு இழுக்கிற?

அவன் : இங்க பார் உங்கப்பாவ பத்தி பேசுனா என்னை என்னன்னு கேளு! நான் பேசுறது என் மாமனை பத்தி! என் மாமன் நான் பேசுவேன்! அதைக் கேட்க நீ யார்?

அவள் : ஆனா அது எங்கப்பாதானே?

அவன் : அதெல்லாம் எனக்கு தெரியாது. என் மாமன் என் உரிமை! என் மாமன் குடிச்சிட்டு குடிச்சிட்டு போதைன்னு ஒரு பேதையை பெத்துவிட்டிருக்கான் பார்த்தவுடனே எனக்கு கிக்கு ஏறிடுது!

அவள் : இப்ப நீ என்னை புகழ்றியா இல்லை எங்கப்பாவ குடிகாரன்னு திட்டுறியா?

அவன் : மனசுக்குள் (ஆஹா! புரிஞ்சிடிச்சு போலிருக்கு டாபிக்க மாத்திடுடா கோபாலு!)


காதல் வசனங்கள் 5:

போன் ரிங் ஆகும் – எடுக்கலாம்னு பட்டனை அமுக்குவதற்குள் கட்டாகிடும்,பெண்களால் மட்டும் சரியா ரெண்டே டோனில் மிஸ்டு கால் எப்படித்தான் கொடுக்க முடிகிறதோ? திரும்ப கூப்பிடுவோம்!

அவள் : அப்புறம்.........சாப்பிட்டாச்சா..... ப்ளா – ப்ளா - ப்ளா - ப்ளா

அவன் : சாப்பிட்டாச்சு....... ப்ளா – ப்ளா - ப்ளா – ப்ளா அப்புறம் ......

இரண்டு மணி நேரம் கழித்து,

அவள் : அப்புறம்?

அவன் : சொல்லுடி, நீதான் சொல்லனும்.

அவள் : அப்புறம்.... ஆமா உனக்கு செல்போன் பில் அதிகமா வரும்ல?

அவன் : அடிங்கொய்யாலே! 2மணி நேரமா அப்புறம் அப்புறம்ங்கிறதையே பேசிட்டு போன்பில் அதிகமா வருமில்லனு கேள்வியைப்பாரு!

காமெடி வசனங்கள் 6:

நண்பன் 1 : மச்சி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?

நண்பன் 2 : அந்தக்கொடுமைய ஏன் மச்சி கேட்குற? இன்னும் இல்லை.

நண்பன் 1 : காலாகாலத்துல பண்ணிடனும் மச்சி

நண்பன் 2 : எங்க மச்சி பொண்ணு பார்க்க போனா துவைக்கத்தெரியுமா? சமைக்கத்தெரியுமான்னு கேட்கிறாங்க!

நண்பன் 1 : இதெல்லாம் தெரியாம யார் பொண்ணு கொடுப்பா? தெரியும்னு சொல்லவேண்டியதுதானே?

நண்பன் 2 : அட நீ வேற! பொண்டாட்டி புடைவை துவைக்கச்சொன்னா பரவா இல்லை, மாமனார் மாமியார் டிரஸ்களையும் துவைக்கனும்னு சொல்லுராங்கப்பா!

நண்பன் 1 : பக்கிப்பயலே? நீ வீட்டோட மாப்பிளையா போக ட்ரை பண்ணுனியா? அப்ப செஞ்சுதான் ஆகனும்டியேய்!


9 COMMENTS:

 1. haaaaaaaaa haaaaaaaaaaa


  vayiru valikkuthuppaa.....

  ReplyDelete
  Replies
  1. சுந்தரா டிராவல்ஸ் படம் பார்த்த மாதிரி இருந்திச்சா?

   Delete
 2. ஏர்போர்ட் போற வழியில, "காதலர்களின் கண்கண்ட தெய்வமே..,ஆ.ராசா" ன்னு ஒரு பேனர் பார்த்தேன். உண்மைய சொல்லுங்க, வச்சது நீங்கதான?

  ReplyDelete
  Replies
  1. என்கிட்டேதான் டைலாக் கேட்டாங்க! நான் சொன்னதுல "கள்ள" இந்த வார்த்தைய எடிட் பண்ணி போட்டுடானுவள்!

   Delete
  2. கள்ள - கபடமற்றனு சொல்ல வந்தேன், தப்பா புரிஞ்சுகிட்டா ஞான் பொறுப்பில்லை!

   Delete
 3. ஹா ஹா ஹா, வீட்டோட மாப்புள சரியான காமெடி :)

  ReplyDelete
  Replies
  1. குறிப்பு - இது அனுபவமல்ல! :)

   Delete
 4. hahahahahahahaha அவனும் அவளும்..........

  ReplyDelete
 5. //பக்கிப்பயலே? நீ வீட்டோட மாப்பிளையா போக ட்ரை பண்ணுனியா? அப்ப செஞ்சுதான் ஆகனும்டியேய்!//செம கலக்கலுங்கோ

  ReplyDelete