Blogger Widgets

காதலை உதறுவதா? உருகுவதா? - காதல் மொழி!



எதையோ தேடுகையில் தட்டுப்பட்டது தொலைந்து போனதாய் நான் நினைத்த உனது புகைப்படம்!

அப்போ திருப்பி கொடுத்திடு



உன்னைத் திருப்பி எடுத்துச் சென்று விட்டாய். புகைப்படமாவது இருந்து விட்டுப் போகட்டுமே இவளோடு :-)

விட்டுப்போனதை எதற்கு விடாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறாய்? விட்டுவிடு!



உன்னோடு உன் நினைவுகளையும் நீ எடுத்துச் சென்றிருக்கலாம். என்னைப் பிடித்துக் கொண்டு 
தொடர்கின்றது நான் உதறியபோதும் :-)

நீ பிடித்துக்கொண்டே உதறினால் எதுவும் விழாது! எப்போதும் உன்னுடனேதாம்!



நான் உதறுகையில் என்னை உறுதியாய் பிடித்துக் கொள்கின்றது உனது நினைவுகள்.

உதறுகையில் குழப்பம் போலும் - உதறுவதா? உருகுவதா?



உதறுகையில் உருகாமல் தடுத்துக் கொள்கிறேன் என்னை.

கையில் தடுத்துக் கொள்கிறாய்; கண்ணீரில் தடுக்கி விழுகிறாய்!



சிந்தாமல் சிறைப்பிடிக்கும் கண்ணீர் தொண்டைக்குழியில் சிக்கி என்னை வதைத்தபோதும் சிதறவிடவில்லை நான் என்னையும் என் கண்ணீரையும்!

உன் சிதறாத கண்ணீர் காணும்போதெல்லாம் சிதறிவிடுகின்றேன் இப்போதும், எப்போதும்!



சிதறிடிடும் கண்ணீர் உன்னையும் சுமந்து வெளியேறி விடும் என்ற அச்சத்தில் விழுங்கியே விடுகின்றேன்!

உலர்ந்துபோன எனக்கு உரமிடுகிராயோ? உனக்குள் இருப்பது நான்!



உனைத் தேடுகையில் எனை மீட்டெடுத்தேன். எனை மீட்டெடுக்கையில் உனைக் கண்டுபிடித்தேன்.

உன்னை மனதில் தேடும்போதுதான் உணர்ந்தேன்! எங்கே எனது மனது?



உன் மனதைத் தேடுகையில் நான் தட்டுப்பட்டிருப்பேனே?

உன்னைத்தவிர வேறெதுவும் தட்டுப்படவில்லை!



@kokilahkb மற்றும் @nilapennukku


மொழி 2 

டிஸ்கி : இது புதிய பகுதி. உங்களின் LIKE மற்றும் SHARE பொறுத்தே, இந்த பகுதியைத் தொடரவா? வேண்டாமா? என்பது தீர்மானிக்கப்படும். பிடித்திருந்தால் மட்டும் லைக் அல்லது ஷேர் செய்யவும்!


9 COMMENTS:

  1. காதலின் மறுமொழி ரசிக்கும் படியாக ..

    ReplyDelete
  2. வீட்ல ம்ம்ம் போடறதுல நீங்க கில்லாடி போலிருக்கு!

    ReplyDelete
  3. நான் உதறுகையில் என்னை உறுதியாய் பிடித்துக் கொள்கின்றது உனது நினைவுகள்.


    நினைவுகள் தொடர்கதையைத்தான் கொடுக்கும் எப்போதும்...

    தொடருங்கள் இந்த பகுதியை...... இது இந்த ச்கோதரியின் அவா :)

    ReplyDelete
    Replies
    1. வெள்ளனே உக்காந்து கவிதை எழுதி போஸ்ட் பண்ணினா இங்கிட்டு எம்புட்டு பேர் வர்ராக தெரிமா?

      100க்கும் கம்மி!

      Delete
  4. Like போட்டாச்சு! தொடருங்க.
    இப்போ இதுல எங்களையும் சேர்த்தாச்சு..அதானே?

    ReplyDelete
    Replies
    1. அடி வாங்கும்போது நீங்கல்லாம் இருக்கீங்கன்ற நம்பிக்கயில சேர்த்தனான்!

      ஆனா அடிவாங்கும்போது பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தீர்கலெண்டால்!

      Delete
    2. ச்சே..ச்சே..நல்லா கைதட்டுவோமில்ல??

      Delete
  5. வித்தியாசமாக உள்ளது கேள்வி பதில் .நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. எப்பிடியெல்லாம் மாத்தி யோசிக்கிறாங்கப்பா....!

    ReplyDelete