SMS இலவசம் - இந்தியா உட்பட உலகம் முழுவதற்கும்!

  கூகிள் இந்த சேவையை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செளுத்தவேண்டியதில்லை. இந்தியா உட்பட உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையவும்! அங்குள்ள CHAT – பாக்ஸிலிருந்து உங்கள் நண்பரின் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பவும், அவ்வளவுதான்! 

நுணுக்கங்கள்!
  • முதலில் 50 SMS உங்களுக்கு இலவசமாய் கொடுக்கப்படும்! ஒவ்வொரு SMS நீங்கள் அனுப்பும்போதும் அதன் அளவு குறையும்!
  • நீங்கள் செய்யும் எஸ்எம்எஸ்க்கு Reply பெறும்போது உங்களது கணக்கில் 5 SMS சேர்க்கப்படும். (உங்க மொபைலுக்கு நீங்களே அனுப்பிக்கூட REPLY பண்ணிக்கொள்ளலாம்! REPLY செய்வதற்கு உங்கள் MOBILE OPERATOR கட்டணம் விதிக்கலாம், கவனம்!)
  • ஒருவேளை இலவச SMS தீர்ந்துபோய்விட்டால்? உங்கள் கணக்கில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் இலவச SMS CREDIT சேர்க்கப்படும்!
  • அழைக்கும் எண்ணை ஸ்டோர் செய்துவைத்துக்கொள்ளலாம்! PHONE BOOK SERVICE


சென்னை சுகாதாரம் - செம காமெடி!

  சென்னை பற்றிய இந்த கல்லூரிப்பெண்ணின் காமெடியை எத்தனி பேர் பார்த்தோம் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ!  காமேடின்னா காமெடி அப்பிடி ஒரு காமெடி.. இது அத்தனையும் நிஜமும் கூட.  தினமும் நாம் அனுபவிக்கும் சுவாரஸ்யங்களின் தொகுப்பு! நிச்சயம் இந்த கல்லூரி பெண்ணின் வெகுளித்தனம் கலந்த நகைச்சுவை உணர்வைப் பாராட்ட வேண்டும்!விவசாயி - என்று மடியும் எங்கள் சோகம்?

பருத்தியை விதைத்துவிட்டு
பருவமழைக்குக் காத்திருந்தோம்
பருவமதுவும் பொய்த்துப்போனதால்
சருகானது பயிரெல்லாம்!

பேருழைப்பு வீணாகி
திறமைகளோ சருகாகி
பேரிழப்பு வந்ததனால்
உருக்குலைந்து போனோம்!

இறந்துவிட்ட பயிர்களால்
எரியாமல்போனது விறகுகளும்,
மறக்காத பசியினால்
மறந்தேபோனது உலகமனைத்தும்!


உறுதிசெய்த பத்திரத்தால்
உண்டான கடனோ ஏராளம்,
வறுமையே வாழ்க்கையானதால்
வருங்காலமோ கேள்விக்குறி?

தெரியாத வழியினால்
வருத்தமோ பெருகியபோது,
இறுதியாய் வலிகுறைக்ககையில்
ஒருகுவளை பாலிடால்!

                                                - நிலவன்பன் (2002-ல் எழுதியது) 

  வருடந்தோறும் வறுமை, கடன் போன்ற பிரச்சினைகளால் 15,000 மேற்பட்ட விவசாயிகள் (இந்தியாவில் மட்டும்) தற்கொலை செய்துகொள்கிறார்கள்! விவசாயிகளின் நாடு என நாம் பீத்திக் கொள்கிறோம்! 


  உணவு கொடுப்பவனுக்குப் பணமில்லை! சினிமா, கிரிக்கெட் என பொழுதுபோக்காளர்களின் சம்பளமோ கோடிகளில்! இந்த லட்சணத்தில் அவர்களுக்குப் பிரதமர் விருந்து வேறு!

  ஒரு நாள் விவசாயிகளே அழிந்துபோய் அவர்களின் பிணங்களைத் தின்னும் நேரம்கூட வரலாம்! எதிர்பார்த்திருக்கவும்  - விவசாயிகளில் ஒருவன்!


இந்தியா - கொலைகாரர்களுடன் எதுக்கிந்த நாறப்பொழப்பு?

  சமீபத்திய சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், கிருஷ்ணசாமி, மாணிக்கம் தாகூர் ஆகியோரும் அடங்கிய குழுவின் இலங்கைப்பயணம் (APRIL 17-21) இந்தியாவின் நாறப்பொழப்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவர்கள் எதற்கு போனார்கள் என்று இவர்களுக்கும் தெரியவில்லை, அனுப்பிய அரசாங்கமும் சொல்லவில்லை போலும்!

  டக்லஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளி! அவரது அழைப்பினாலேயே யாழ்ப்பாணம் வந்ததாக திருவாய் மலர்ந்தருளினார் சுஷ்மாசுவராஜ். ஒரு கொலைக்குற்றவாளியுடன் போய் நிகழ்ச்சியைச் சிறப்பித்துவிட்டு வந்திருக்கிறார்! ஒருவேளை காந்தியைக் கொன்ற கோட்சே உயிரோடிருந்து அவர் அழைத்தாலும் அவருடன் போய் உணவருந்தி சிறப்பித்துவிட்டு வந்திருப்பர் நம் இந்திய அரசியல்வியாதிகள்!


  இதைவிட காமெடி என்னவென்றால் அதிகாலையில் விழித்து யாருக்கும் தெரியாமல் குழுவின் தலைவி ராஜபக்சேவுடன் காலைச்சிற்றுண்டி (சிலோன் பரோட்டா)  உணவுண்டுவிட்டு வந்திருக்கிறார்!

  சோகம் என்னவென்றால் இந்தக்குழு பாதிக்கப்பட்ட எந்தவொரு தமிழர்களையோ அல்லது முள்வேலி முகாம்களையோ பார்வையிடவில்லை! மாறாக புதிதாய் திறக்கும் மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதையும், இந்திய அரசால் கட்டப்பட்ட ரயில்வே தண்டவாளம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதையும், அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களைப் பாராட்டுவதையுமே முழுப்பணியாக செய்துவிட்டு திரும்பியிருக்கிறது!


ஐபிஎல் நகைச்சுவைகள் – IPL COMEDY 2012

நிலவன்பன் : என்ன தல கைலேயே போட்டுடானுகளா?

சச்சின் : அதுகூட பரவாயில்லை தம்பி! ஆனா இவனுக, நான் மேட்ச்ல அடிச்சாலும் சாதனைக்காக விளையாட்றேன்னு சொல்லுராணுக, அடிக்கலேன்னாலும் வயசாயிடிச்சி ரிடயர்ட் ஆகணும்னு சொல்லுராணுக! அதுதான் ரொம்ப வலிக்குது!


நான் மனைவி பேய் – திகில் சிறுகதை


  ஒரு இரவு நேரம்! சரியாய் 12 மணி. நாயின் குரைப்பு கூட பேயின் உளறல்போல் கேட்டுக்கொண்டிருந்தது ஓவர்டைம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தான். அவன் வீட்டுக்குச் செல்ல ஒரு சுடுகாட்டைத் தாண்டித்தான் போக வேண்டும்! அது ஆள் அரவமில்லாத தனியான ஒரு சுடுகாடு!

சுடுகாட்டை அடைந்துவிட்டான்!

திடீரென மிகப்பெரிய உருவத்துடன் பேய் ஒன்று கண்முன் தோன்றியது, பெரும் சப்தத்துடன் "ஹா ஹா ஹா! நான் யார் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே அவனின் அருகில் வந்தது.

“யார் நீ?”

“நான்தான் இந்த சுடுகாட்டில் வாழும் பேய்!”

“நான் எப்படி நம்புவது?”

“என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லை?” என்றது பேய்

“நிச்சயமாக இல்லை."

பேய் குழம்பிப்போய்விட்டது, “ஆமாம்! என்னைப்பார்த்தால் ஏன் உனக்கு பயமில்லை?”

"கடந்த பத்து வருசமா உன் தங்கையுடன்தான் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறேன்."


தறுதலைகளுக்கு ஒரு தகவல்!உயிர் கொடுத்த ஜீவன்!


விழிகள் இருந்தும்
பார்க்க இயலா விழிகள்!
பேச முடிந்தும்
கேட்க யாருமில்லாமல்
சுவற்றுடனும், அடுப்புடனும்
மட்டும் பேசிக்கொள்ளும்
அந்த வயதான ஜீவன்!
 இன்னும் எத்தனையோ பேர், முதியோர் இல்லங்களில் தம் பெற்றோரை சேர்த்து கனிவுடன் பார்த்துக்கொண்டிருக்கும் அத்துணை நல்லவோங்களுக்கும் இது சமர்ப்பணம்!

 பெற்றோர் தினத்தில் மட்டும் பாசம் பொழிய அவர்களை சென்று பார்க்கும் அல்லது பெற்றோர் தின வாழ்த்துக்களை தங்களது status update  செய்துகொள்ளும் உங்களுக்கு ஒரு தகவல் - நீங்கள் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்த அதே நாளில் உங்களுக்கான இடமும் அங்கு ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது

 இன்னும் சிலர் இதைவிட மோசம்! பெற்றோர்களை வீட்டிலிருந்து துரத்திவிடும் நல்லவோங்கள்! இவர்களின் பெற்றோர் செய்த ஒரே தவறு - இவர்களைப் பெற்றெடுத்ததுதான்!


நகைச்சுவை தத்துவம்! காதல் தத்துவம்

  • உன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமாநீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்!!

  • என்னதான் நாற்காலிக்கு நாலுகால் இருந்தாலும் அதால் ஓடமுடியுமாஅப்படியே ஓடினாலும் அதை ஓடுகாலின்னுதான் சொல்ல முடியுமா?

  • ஜோடியா பைக்ல அவளை கூட்டிட்டு போகும்போது காதல் சாங்கு! அவளோட அண்ணன் பார்த்து உன் காலை எடுத்திட்டான்னா அப்புறம் உனக்கு சங்கு!

  • ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரியவேண்டுமென்றால், அவளை நீங்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும்!


சிறகை விரியுங்கள் பறவையாய் பறக்க!


சிறகை விரியுங்கள்
பறவையாய்ப் பறக்க!
கூண்டை உடையுங்கள்
விண்ணை வீழ்த்திவிட,வானம் காத்திருக்கிறது
உன்னை எடுத்துக்கொள்ள,
சிறகை விரியுங்கள்
பறவையாய்ப் பறக்க!
கடவுள் எத்தனை பேர்யா இருக்காங்க?

  இரவு பத்து மணிக்கு நானும் இன்னொரு நண்பரும் சாப்பிட போனோம்! நான் சிக்கனை ஆர்டர் செய்துவிட்டேன், அவனுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன்!

இன்னிக்கு ஹனுமான் ஜெயந்தி அதனால் நான் நான்வெஜ் சாப்பிடமாட்டேன் என்று சொன்னான்!

யாரு ஹனுமான்?”

கடவுள்!!

(இதோட வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்!)

அப்படின்னா ஹிந்து கடவுள்கள் குறைந்தபட்சம் ஆயிரமாவது இருக்குமல்லவா?

ம்ம்ம் இருக்கும்!

அப்படின்னா ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு சாமி பொறந்திருக்கும்! எல்லா சாமியும் ஒரே நாளில் பொறந்திருக்க கண்டிப்பாய் முடியாது! அப்போ நீ நான்வெஜ் எப்பவுமே சாப்பிடக் கூடாது!


நகைச்சுவைத் தத்துவங்கள்!

கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!!இப்போதெல்லாம் "உறவு" என்பதற்கான அர்த்தம் முற்றிலும் மாறிப்போய்விட்டதுசாப்பிட்டு முடித்ததும் சர்வர், "சார் எல்லாத்தையும் எடுத்திறவா??"
"எடுத்துக்குங்க! அப்படியே இந்த பில்லையும் எடுத்திட்டு போய்டுங்க!!!"நம் நாட்டில் சாட்சிக் கலைப்பு-களாலேயே பல நீதிக்குழந்தைகள் சாவடிக்கப்படுகின்றன!லவ்வு லவ்வு லவ்வு!


நிலவிலும்
இரவுண்டு
தெரியும் பெண்ணே!
உன்
தலைமுடி பார்த்ததிலிருந்து!


காதலை
மறைத்துச் செய்த நிச்சயத்தில்
எப்படி வந்தது காதல்?
தாம்பூலத்தட்டில் வெற்றிலை!


என் கவிதைகளுக்கு
வாசுகியாய் வருவாய் என நினைத்தேன்
ஆனால் நீயோ
வாசகியாய் அல்லவா வருகிறாய்!


தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க - HOTSPOT SHIELD

To view blocked websites:

உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிற Facebook, Yahoo Chat, Twitter  போன்றவற்றை தடை செய்துவிடலாம்!

ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்!  உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!

வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?

இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்! - HOTSPOTSHIELD


கவர்ச்சிப் படம் - ஜில்சா ராணியின் ஜல்சா படம்!

  நேத்து ராத்திரி சரியா 12மணி இருக்கும், நான் பாட்டுக்கு போய்கிட்டிருந்தேன், திடீர்னு எதிர்ல ஒரு பிகர்! அந்த பிகர பார்த்த உடனே பட்டுன்னு மயங்கிட்டேன்! க்ளோப்ஜாமூன் முன்னாடி வந்து நின்னா எப்பிடி இருக்கும்? அப்பிடி ஒரு பிகர்! அந்த ராத்திரி வேலைல அதுக்கு என்ன வேலையோ? கேக்கலாம்னு நினைச்சேன் நீ உண்மைலேயே மனிஷியா இல்லை தேவதையா


  இதுல டிரஸ் வேற கண்ணை உருத்திகிட்டே இருந்துச்சு! TOPS & SKIRTS ல ஹை ஹீல்ஸ் வேற! உடனே எனக்கு ஒரு ஐடியா தோனிச்சு! நாம கண்ட இந்த காட்சிய நம்மோட நண்பர்களும் பார்க்கட்டுமே எனு சொல்லி உடனே போன் எடுத்து ஒரு போட்டோ எடுத்தேன்!