Blogger Widgets

இந்தியா - கொலைகாரர்களுடன் எதுக்கிந்த நாறப்பொழப்பு?

  சமீபத்திய சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், கிருஷ்ணசாமி, மாணிக்கம் தாகூர் ஆகியோரும் அடங்கிய குழுவின் இலங்கைப்பயணம் (APRIL 17-21) இந்தியாவின் நாறப்பொழப்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவர்கள் எதற்கு போனார்கள் என்று இவர்களுக்கும் தெரியவில்லை, அனுப்பிய அரசாங்கமும் சொல்லவில்லை போலும்!

  டக்லஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளி! அவரது அழைப்பினாலேயே யாழ்ப்பாணம் வந்ததாக திருவாய் மலர்ந்தருளினார் சுஷ்மாசுவராஜ். ஒரு கொலைக்குற்றவாளியுடன் போய் நிகழ்ச்சியைச் சிறப்பித்துவிட்டு வந்திருக்கிறார்! ஒருவேளை காந்தியைக் கொன்ற கோட்சே உயிரோடிருந்து அவர் அழைத்தாலும் அவருடன் போய் உணவருந்தி சிறப்பித்துவிட்டு வந்திருப்பர் நம் இந்திய அரசியல்வியாதிகள்!


  இதைவிட காமெடி என்னவென்றால் அதிகாலையில் விழித்து யாருக்கும் தெரியாமல் குழுவின் தலைவி ராஜபக்சேவுடன் காலைச்சிற்றுண்டி (சிலோன் பரோட்டா)  உணவுண்டுவிட்டு வந்திருக்கிறார்!

  சோகம் என்னவென்றால் இந்தக்குழு பாதிக்கப்பட்ட எந்தவொரு தமிழர்களையோ அல்லது முள்வேலி முகாம்களையோ பார்வையிடவில்லை! மாறாக புதிதாய் திறக்கும் மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதையும், இந்திய அரசால் கட்டப்பட்ட ரயில்வே தண்டவாளம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதையும், அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களைப் பாராட்டுவதையுமே முழுப்பணியாக செய்துவிட்டு திரும்பியிருக்கிறது!

  திரிகோணமலை மாவட்டம் சம்பூர் முகாம் காட்டப்படவில்லை! இவர்களும் சென்று பார்க்கவில்லை! இங்கு 1200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 5000 மேற்பட்ட மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர் - அவர்களின் நிலை?

  இந்தக் குழு முல்லைத்தீவில் புதிதாய் இந்திய அரசால் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்துவைத்துவிட்டு வந்திருக்கின்றனர். நம்ம ஊரில நடிகையைக் கூப்பிட்டு திறந்து வைப்போம் இல்லையா? அதுபோல்தான் சுஷ்மாவையும் நடிகைன்னு நினச்சிட்டாங்க போல! குறிப்பாக இறுதிக்கட்ட போரின்போது இந்த மருத்துவமனையை அரசாங்கம் குண்டுவீசி தகர்த்தது, அங்கிருந்தவர்களைக் கொன்றது! எல்லாரையும் கொன்னுட்டு யாருக்கு மருத்துவமனை கட்டுரானுகள்னே தெரியல?

  முல்லைத்தீவில் இந்திய அரசு கட்டிவரும் 50,000 வீடுகளையும். ஒரு மருத்துவமனையையும் பார்வையிட்டனர். இதில் காமெடி என்னவென்றால் கடந்த மூன்றாண்டுகளாக இவர்கள் கட்டிமுடித்தது 1000 வீடுகள்கூட கிடையாது! இதே நிலைமையில் போனால் வரும் கி.பி. 2159ம் வருடம் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்காக வழங்கப்படும்! அவ்வ்வ்!

  செய்தியாளர்களிடம் சுஷ்மா பேசும்போது, "பதின் மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் சென்றே தீர்வு காணப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் தெரிவித்தார். அதை அவர் செய்வார் என்று நம்புகிறோம்'' என்றார். அப்படின்னா என்னன்னு இந்த அம்மாவுக்கும் தெரியாது, ஏன் சொன்ன ராஜபக்சேவுக்கும் தெரியாது. முதல்ல இப்பால புடிங்கினது என்னன்னு சொல்லட்டும்! அப்புறம் அப்பால புடுங்கிரதை பார்த்துக்கலாம்!

  மொத்தத்தில் இந்தப்பயணம், ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த காரணத்தால் இலங்கையின் கோபத்தைச் சமாதானப்படுத்த சென்ற ஒரு பயணமே தவிர, முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கோ அல்லது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ சென்ற பயணம் கிடையாது.

  நம் நாட்டு எம்பிக்களுக்கு இலங்கைப்பயணம் ஒரு இன்பச்சுற்றுலா!

  எதுக்குடா இந்த நாறப்பொழப்பு? இதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்! - இது பழமொழி இல்லையில்லை புதுமொழி!


3 COMMENTS:

  1. பார்த்தோம் இந்த பாழாய் போன இந்திய குழுவை 45 விதவைகளை பார்த்து கண்ணீர் விட்டார்களாம் விட்டும் என்ன பணன் கண்டோம்.

    ReplyDelete
  2. இவர்கள் வந்தது உல்லாச பயணம். தமிழரின் துன்பத்தில் கண்ணீரில் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற. ஐநாவில் கொலைவெறியருக்கு எதிராக கொண்டுவந்த பிரேரனையை ஆதரித்து வாக்களித்ததால் கோபம் கொண்ட இனவெறியரை ஆசுவாசப்படுத்த காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்க. இது நாரப் பொழைப்புத்தான். வெட்கம் கெட்ட இந்தியா இந்த அழகில் வல்லரசு கனவு வேறு.

    ReplyDelete
  3. (Arya)இனம் இனத்தோடு தான் சேரும்...

    ReplyDelete