போரின் வலி!கையின்றி
காலின்றி
அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள்
யாருமே உயிரின்றி!
உயிரெழுத்தில் தொடங்கினாலும்
உயிரற்றுப் போகிறது
அகதி!
நாய் விற்ற காசு!


இன்றைய உணவிற்காக
நேற்றைய நண்பனை விற்றுவிட்டு
உணவுண்டபின் ஒருவர் சொன்னார்,
உண்டது நாய்க்கறி
பல்லவனில் ஒருமுறை

என்னருகே
நின்று கொண்டிருப்பவளே!
உட்காருகிறாயா??
என் இதயத்தில்
இடம் காலியாகத்தான் இருக்கிறது!நீ இறங்கும்வரை
காணவில்லை
என் இதயத்தை..
நீ இறங்கிய பின்பு
காணவில்லை
என் பர்ஸை!சீதை சிறை வைக்கப்பட்டிருந்த கோவில் - அசோகவனம், நுவெரெலியா

   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு போய், சிறை வைத்திருந்ததாகச் சொல்லப்படும் இடம்., இலங்கை நுவெரெலியாவிலிருந்து ஒரு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெரும் வனாந்திரமாகக் காட்சியளிக்கும் இந்தப் பகுதி முற்றிலும் மலைகளால் சூளப்பட்டது. அந்த மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோவில் இந்திய வல்லுநர்களால் கட்டப்பட்டது. தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து சிங்களவர்களும் வழிபாட்டுக்காக இங்கு வருகிறார்கள்.


இலங்கையில் விண்ணைத்தொடும் விலைவேசி!

   இதை வாசி என்று எழுதினால் வெறுமனே வாசித்துவிட்டுப் போய்விடுவீர்கள் என்றுதான், விலைவேசி என்றால் இரண்டு, மூன்று முறை மேலும், கீழும் படிப்பீர்கள் என்று தெரியும்!

   கண்டி பேருந்து நிலையத்திலிருந்து பின்னிவெல யானைகள் காப்பகம் செல்லும்போது (கொழும்பு பேருந்து), இந்த பின்னிவெல என்ற பெயரை சிங்களத்தில் உச்சரித்தால் மட்டும்தான் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புரியும் (தமிழர் தவிர). இந்த பெயரை கண்டுபிடிக்க எனக்கு அரை மணி நேரமானது.


   இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால் இலங்கையில் 95 சதவிகிதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது. நீங்கள் ஏதாவது சொன்னாலும் புரியாது. ஊர் பெயரைக்கூட சிங்கள உச்சரிப்பில் சொன்னால்தான் புரியும். உங்களது இடம் வந்தால் கண்டக்டர்ரே வந்து உங்களை இறக்கி விட்டுவிடுவார். உங்கள் மேலுள்ள பாசத்தினால் அல்ல, இன்னும் இருந்தால் ஆங்கிலத்தில் பேசி கொலை செய்வான் என்றுதான். சரி கதைக்கு வருவம்!

   பேருந்து கிளம்பி வெளியேவரும் சமயம் ஒரு பெண் ஏறினார், என் அருகே வந்து அமர்ந்தார். (பொண்ணுனாதான் நீ ஈஈனு பல்ல காட்டிருப்பியே!). வேறு எங்கும் இருக்கை காலி இல்லை. ஏதோ என்னிடம் அராபிக்கில் கேட்டார், பின்புதான் அது சிங்களமென்று தெரியும்.

“ஐ டோன்ட் நோ சிங்களா!” என்றேன்.


“இந்த பஸ் கொழும்புதானே போகிறது?” என்றார். எப்புடிதேன் கண்டுபிடிக்கிராங்கனே தெரிய மாட்டேங்குது, நாம் தமிழர் என்று! டேய் கேமரா எதாச்சும் வச்சு பார்க்குறீங்களா? ஸ்ஸ்ஸ்ஸ்!

   (இன்னொரு முக்கியாமான விஷயம் தமிழன் எங்கு போனாலும் மத்த மொழிகளை கற்றுக்கொள்ள மாட்டான் அல்லது கற்றுக்கொள்ள விரும்பமாட்டான்! இந்தியா, துபாய், அரபிய நாடுகளில் இந்தி பேசாத ஒரு இந்தியன் என்றால் அது தமிழன்தான் (நானுந்தேன்). இலங்கையில் சிங்களம் பேசவில்லை என்றால் அது தமிழன். மலேசியா, சிங்கப்பூரில் மலாய் பேசவில்லை என்றால் அது தமிழன். த்தமிழேண்டா!)


கண்ணா உடனே கிளம்பு துபாய் குளோபல் வில்லேஜ்!

  நாம் ஊர்ல இல்லேன்னு தெரிஞ்சும் ஆரம்பிசிட்டாங்கப்பா இந்த துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்! என்னா ஒரு தைரியம்?? FASHION SHOW, SHOPPING என எல்லாம் உண்டு. குளோபல் வில்லேஜில் ஒரு மாசம் நடக்க இருக்குப்பா, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஸ்டால் உண்டு, அங்கே அந்த நாட்டின் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். போகாம இருந்தா உடனே போ! (படங்ககளைப் பெரிதாய் காண அதன்மீது கிளிக் செய்யவும்)

FASHION SHOW: 


ஒரு கடிதம் எழுதினேன்!


"நான் உன்னை
நேசிக்கவில்லை,
பாசமாய்த்தான் பழகினேன்"
எடுத்த உடனேயே
கடிதத்தின் தொடக்கம்!

சுவையான நடையினிலே
வசைமொழிகள் பொழிந்திருக்க
இறுதியில்,
"என்றென்றும் தோழி"
அடிக்கோடுடன்..

படித்து முடித்தபின்தான்
கிடைத்தது நிம்மதி,
அருகில் அழுதுகொண்டு
ஆருயிர் நண்பன்!


புத்தர் பல் கோயில் - கண்டி

   மதம் என்பனவற்றையெல்லாம் கடந்து, மனிதத்துவத்தை மேம்படுத்துவதற்காக உண்டான மதங்களுள் ஒன்று புத்தம். எல்லா புத்த கோயில்களை விடவும் கண்டியிலுள்ள இந்தக் கோவிலுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு அது - 2500 ஆண்டுகள் பழமையான புத்தருடைய பல்லை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விடயம் இந்தப் பல்லுக்காக நூற்றுக்கணக்கான முறை அரசர்களுக்கிடையே சண்டையிட்டிருக்கிறார்கள் (புத்தர் இதையவாடா சொன்னாரு?)


எங்கள் ஊர் எம்.எல்.ஏ-விற்கு ஓர் கடிதம்


நேற்று
பாலம் கட்டினீர்
இன்று பள்ளத்தில்
வந்த வெள்ளத்தில்
பாலம் சென்றுவிட்டது.

ரோடு போட்டீர்
அது மழையில் கரைந்துவிட்டது!

பத்திரிக்கையாளர்கள் முட்டாள்கள்
உங்களைத் தவறாகப் பிரசுரிக்கிறார்கள்!
மழை பெய்வதற்கெல்லாம் நீங்களா காரணம்?

உங்களைப் பார்த்து
மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது
காணவில்லையென்று
விளம்பரம் கொடுக்கலாமென்றாலும்
புகைப்படம் கைவசமில்லை
முகமும் ஞாபகமில்லை.

காணவில்லையென்று
புகார் செய்யாலாமென்றாலும்
காவல்துறையும் தேடிக்கொண்டிருக்கிறதாம்
பதின்மூன்று வழக்குகளுக்காக.

அது என்னவோ தெரியவில்லை
எங்களுக்கு மட்டும்
ஒரு மனிதரைத் தேர்ந்தெடுக்கும்
வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை!

காந்தி மட்டும்
மறுபிறவி எடுத்திருந்தால்
பிறந்த உடனே
மூச்சடக்கி செத்திருப்பார்,
தேவையில்லாமல்
கோடி உயிர்களைக்
கொடுத்தோமே என்பதற்காக!


நாராயணா இந்த இணையதள கொசுக்களை அடிச்சு கொல்லுப்பா!


    வர வர இந்த இணையதள கொசுக்களின் தொல்லை தாங்க முடியலை! (போக போக சரியாயிடும்!) இவனுக பண்ற இம்சை தாங்க முடியலடா சாமி! எப்புடியல்லாம் கிடா வெட்டுராங்கனு பாருங்க.
 
  1. FACEBOOK-இல் ஒரு 5000பேருக்கு FRIEND REQUESTஅனுப்புவது, ஒரு ஆயிரம் பேராவது நண்பர்களாக ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த பட்சம் இரண்டு முறையாவது உங்கள் ஐடியை FACEBOOK-பிளாக் செய்துவிட்டிருக்கும்.

  2. FACEBOOK ஒரு GROUP ஆரம்பிக்க வேண்டியது, இருக்கிற எல்லா நண்பர்களையும் அதில் சேர்த்துவிடுவது. பின் அனைவருக்கும் நண்பர்களை சேர்க்க சொல்லி மெசேஜ் அனுப்புவது! கதறக் கதற ஆட்களை பிடித்துக் கொண்டுவந்து அதில் சேர்த்து விடுவது.

  3. இது கூட பரவாயில்லை. இரண்டு மூன்று ஐடி பெண்கள் பெயரில் உருவாக்குவது, பின் அவன் போடும் போஸ்டுக்கு அவனே அந்த பெண்கள் ஐடியில் கமெண்ட் போட்டுக் கொள்வது. எதுக்குடா உங்களுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு?

  4. இன்னும் பல்லு விலக்கவில்லை என்று ஒரு பெண் போஸ்ட் பண்ணினால், 800லைக், 300கமெண்ட் இருக்கும். (இவனுக போய் அந்த பல்லை தேச்சு விடுற மாதிரி!). நான் சாகப்போகிறேன் என்று ஒரு ஆண் போஸ்ட் பண்ணினால் ஒரே ஒரு லைக் இருக்கும் (என்ன கோவமோ?)

  5. இரவு மூன்று மணிவரை கமெண்ட் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள், பிறகு குட் நைட் சொல்லிவிட்டு, நான்கு மணிக்கு குட் மார்னிங் என்று ஸ்டேடஸ்! நீங்கல்லாம் என்ன நைட் வாட்ச்மன் வேலை பண்ணுரீங்களாடா?


நானும் அய்யனார் சாமியும்!எனக்கும் அய்யனார் சாமிக்கும்
உண்டான இடைவெளி 
இரட்டிப்பாகிப் போனது, 
அய்யனார் சாமியைக்
கும்பிடப்போன
அய்யாவு 
லாரி மோதி செத்துப்போனதிலிருந்து!...கடவுளை மட்டும்
கண்முன் காண நேர்ந்தால் 
ஒன்றே ஒன்று கேட்க வேண்டும் -
"என் கண்முன்னாலிருந்து எப்போது மறைவாய்?"


டாஸ்மாக்கில் அதி நவீன பாராம்!

    நேற்று காலை ஒன்பதரை மணியிருக்கும், சாலையில் போய்க்கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு முப்பது பேருக்கும் மேலிருக்கும், எதற்கோ காத்துக் கொண்டிருந்தார்கள். நான் அதை நியாய விலைக்கடை என்றுதான் நினைத்தேன்! சாலையைக் கடக்கும்போது அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, மேலே டாஸ்மாக் என்றொரு பலகை - கடையை எப்ப சார் நீக்குவீங்க? (இந்த பலகைல மட்டும் பேரை "அரசு டாஸ்மாக்"னு ஏன் வைக்கிறதில்லை? அரசுப் பள்ளி, அரசுப் பேருந்து இவைகளில் மட்டும்தான் அரசு கூட்டணி சேருமோ?)

    அந்த டாஸ்மாக்கை ஒட்டியே "அதிநவீன பார்" என்றொரு பலகை. எனக்கு ஒரு சந்தேகம் ஒருவேளை ரோபோட் ஏதாவது சர்வீஸ் செய்கிறதா? அப்படிப்பட்ட அதிநவீனம் அதுவும் தமிழ்நாட்டு டாஸ்மாக்கிலையா? என்று நினைத்துக்கொண்டு சாலையைக் கடக்கும்போது அருகில்தான் சென்றிருப்பேன்! உள்ளிருந்து வரும் நாற்றம் குடலைப் பிடுங்கியது. (அப்புறம் விட்டுடுச்சானு நுச்சாத்தனமா கேக்கப்படாது)

    ஒருவேளை இதத்தான் அதிநவீனம் என்கிறார்களோ? கழிவு வாடை உட்பட அத்தனை வாடையும் சேர்ந்து வருவதை? இப்படி சுத்தமில்லாத, சுத்தப்படுத்தப்படாத பார்களால் தொற்று நோய் ஏற்படாதா? தமிழ் நாட்டிலுள்ள எத்தனை பார்களில் கழிவறை வசதி உள்ளது? எல்லாமே பார் ஓரத்தில்தான்!


எனது பிரபஞ்சம்!


சூரியனாய் ஒளிவீசும்
அவள் முகம்!


உடலாகிய குடும்பத்தில்
சிவப்புச் செவ்வாய்
அவள் உதடு!


ஒளியைப் பிரதிபலிக்கும்
இதமான திங்கள்
காதலைப் பிரதிபலிக்கும்
அவள் கண்கள்!


ஞாயிறு உடன்
ஒளிவீச முயன்று
தோற்கும் புதனாய்,
அவள் முகத்துடன்
தோற்கும் பொட்டு!


மையத்தைச் சுற்றும்
இரட்டை நட்சத்திரங்களாய்
அவளையே சுற்றும்
முகத்தின் மையத்தில்
எனது கண்கள்!


ஹீலியமாய் உருவெடுக்கும்
ஹைட்ரஜன் போல்
அன்பினால் உருவெடுக்கும்
எனது காதல்!


பூமியின் தேவதையுடன்
பேசாமல் பேசிக்கொள்ளும்
எனது மனது!


அவள் - நான்
நான் - அவள்!

            - நிலவன்பன்.