Blogger Widgets

சீதை சிறை வைக்கப்பட்டிருந்த கோவில் - அசோகவனம், நுவெரெலியா

   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு போய், சிறை வைத்திருந்ததாகச் சொல்லப்படும் இடம்., இலங்கை நுவெரெலியாவிலிருந்து ஒரு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெரும் வனாந்திரமாகக் காட்சியளிக்கும் இந்தப் பகுதி முற்றிலும் மலைகளால் சூளப்பட்டது. அந்த மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இக்கோவில் இந்திய வல்லுநர்களால் கட்டப்பட்டது. தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து சிங்களவர்களும் வழிபாட்டுக்காக இங்கு வருகிறார்கள்.







  அளவில் கோவில் மிகவும் சிறியது. ஆனால் மலைகளுக்கு நடுவே மிக அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதியைத்தான் அசோகவனம் என ராமாயணம் வர்ணிக்கிறது. தற்போதுள்ள ஹக்கல பொடானிக்கல் கார்டன் (தாவரத் தோட்டம்) முந்திய அசோகவனத்தின் ஒரு பகுதியே, இந்த பொடானிக்கல் கார்டனிலிருந்து சில புகைப்படஙகள்.






















செல்ல: கண்டியிலிருந்து நுவரேலியா செல்ல நிறைய பேருந்துகள் உண்டு. நுவேரேலியா பேருந்து நிலையத்திலிருந்து ஹக்கல பொட்டானிகல் கார்டன் செல்ல அரை மணிநேரத்திற்கு ஒருமுறை மட்டுமே பேருந்து வசதி உள்ளதால் ஆட்டோ எடுத்துக்கொள்ளவும்!


0 COMMENTS:

Post a Comment