யாரேனும் ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை!

குறுகுறு பார்வை
மறைக்க முயலும் தெற்றுப்பல்
தலைமுடி கோதும் விரல்கள் 
என உன் சாயலில் 
ஏதேனும் யாரேனும் 
ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை! டான்ஸ்பார்களில் செக்ஸ் தொல்லை! - அதிர்ச்சி ரிபோர்ட்

   "பார்கேர்ள் இதான் என் பேரு. என் தோழியின் வார்த்தையில் "செக்ஸி ஃபிகர்". பெரும்பாலானோரின் செல்போன்களில் இந்த பெயரில் என் போன் நம்பர் இருக்கும். நீங்க ஹோட்டல் டான்ஸ்பார்களுக்கு போகும்போதெல்லாம் என்ன நினைப்பீங்க?  3-4 டோக்கன் கொடுத்து, வேண்டிய பாடல்களைப் போட்டு, நிறையா குடிப்பீங்க. என்னைப்பார்த்து ஃபிகர் சூப்பரா இருக்குள்ள? பேசிப் பார்ப்போமான்னு நினைப்பீங்க. ஆனால் நிஜம் வேறு, என் உலகம் வேறு.

    எங்கள் ஹோட்டலில்கூட ஐரோப்பியன் பார் இருக்கு. ஆனா அவுங்களுக்கு சுதந்திரம் இருக்கு. வேண்டிய இடங்களுக்கு போகலாம். ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா பெண்கள் சுதந்திரம் இல்லாமல் வரமாட்டாங்க. அவுங்களே ட்ரூப் வச்சு இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், நேபாள், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் எங்களுக்கே இந்தக்கொடுமைகள் நிகழ்கிறது. வளரும் நாடு என்று எதை சொல்கிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

   ஒரு கன்சல்டன்ட் மூலம் பலரை புக் செய்து, விசா கொடுத்து அழைத்து வருவர். அவ்வாறு வந்த நானும் என் தோழிகளும் ஹோட்டலின் டான்ஸ் பாரில் நடனமாடிக் கொண்டிருக்கிறோம்.

   டான்ஸ் ஆடத்தெரியுமா? என்பதெல்லாம் தேவையே இல்லை. டிரெஸ்ஸை குறைச்சுக்கனும், குனிந்து, நிமிர்ந்து செக்ஸியான அசைவுகள் கொடுக்க வேண்டும். இந்த மொக்கையான நடனத்திற்கு யாராவது வளையல், கிரவுன் அல்லது மாலை போடுவாங்க. பின் அவர்களைப் பார்த்தே டான்ஸ் ஆடனும். அவர்களை மீண்டும் மீண்டும் டோக்கன் கொடுக்கத் தூண்டனும். மொத்தத்தில் அவுங்க பர்ஸை காலி பண்ணனும். ஆடும்போது நினைச்சுக்குவேன் "இந்த பக்கிகளெல்லாம் வளைகாப்பின்போது பொண்டாட்டிக்கு இவ்வளவு வளையல் போட்டிருக்குமா?"ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?

  நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாம இருக்கலாம், தெரிந்த சிலர் மட்டும்தான் இதையெல்லாம் உபயோக்கின்றனர். எனவே நாட்டிற்கும், வீட்டிற்கும் உபயோகப்படும்வகையில் அனைத்து ஆண்களையும் பிடித்து ஜெயிலில் போட இதோ வழிகள். பிடிங்க சார் அவனை பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.! 


 • "என்னை கனவில ராக்கிங் பண்ணினான்"னு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கேஸ் போடலாம்.

 • "என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணினான்"னு கேஸ் போடலாம். நான் ஒயிட்டா இருக்கும்போது இவன் எப்படி என் ட்விட்டர் ஐடியை பிளாக் பண்ணலாம்னு கேட்கலாம்

 • புது நம்பர்ல அவன் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு திருப்பி அவன் கூப்பிட்டா "எனக்கு அடிக்கடி கால் பண்ணுறான்"னு கேஸ் போடலாம். நீங்க பண்ற மிஸ்டு கால் ரெகார்ட் ஆகாது ஆனா அவன் கூப்பிட்டா ரெகார்ட் பண்ணிக்கலாமே?

 • "பேசாம இருக்கிறான்"னு கேஸ் போடலாம். நான் எவ்வளவு பேசியும், ட்விட்டர் FBல மென்சன் பண்ணியும் அவன் பேசவே இல்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் அடைந்தேன்னு கேஸ் போடலாம்.

 • 4 வருசத்திற்கு முன்னாடி என்கூட சண்டை போட்டான்னு கேஸ் போடலாம். சண்டையின்போது மிகவும் வக்கிரமமா, ஆபாசமா என்னைப் பார்த்து "ஹா ஹா"என்று சிரித்தான். எனவே இந்த மனிதத்தன்மையற்ற செயலைக்கண்டித்து ஆபாச தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.


கடவுள்ஒவ்வொருமுறை உன்னிடம் வரும்போதும்,
ஒவ்வொருமுறை உன்னை வேண்டும்போதும்
வரம் கொடுக்கிறாயோ இல்லையோ,
மறக்காமல் கொடுத்துவிடுகிறாய்
ஒரு கை பிரசாதம்!


துபாய் இசை இன்பம் - பார்த்திபன் சொன்ன ஜோக்ஸ்

 துபாயில் அனுகிரஹா ஸ்டார்ஸ் வழங்கிய இசை இன்பம் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பாடகர்கள் மனோ, பென்னி, முகேஷ் மற்றும் பலருடன் சேது நிகழ்ச்சியை கலகலப்பாய்த் தொகுத்து வழங்கினார். வழக்கம்போல 15 நிமிடம் தாமதமாக நிகழ்ச்சியைத் தொடங்கினர். இந்தியனாச்சே! 

நடிகர் பார்த்திபன் சொன்ன ஜோக்ஸ் மட்டும் இங்கே.!

LKG பையன் 1 : டேய் என்னை ஒரு சப்ப பிகர் அடிச்சிட்டாடா
LKG பையன் 2 : மிஸ்கிட்டே கம்பிளைன்ட் செய்ய வேண்டியதுதானே?
LKG பையன் 1 :அடிச்சதே அந்த மிஸ்தாண்டாஆடு, கோழியை உண்போம் - தாவரங்களைப் பாதுகாப்போம்! GO GREEN

 எது சைவம்? எது அசைவம்? இதிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கு. நாம் இதுவரைக்கும் நம்பிக்கொண்டிருப்பது வலியை உணரும் அனைத்து உயிரினங்களும் அசைவம் - அவற்றைக் கொல்லக்கூடாது, அது பாவம்! உதாரணம் கோழி, ஆடு, மாடு, மனிதன்.  வலியை உணராத, சத்தம் போடத்தெரியாத தாவரங்கள் அனைத்தும் சைவம். அவைகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். சரியா?

 இப்போ நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் கோழியைக் கொல்வது பாவம், நெல் நாற்றைக் கொல்வது பாவமில்லையா? எப்படி உயிரினங்களில் ஒன்றைக் கொல்வது பாவமாகவும், இன்னொன்றைக் கொல்வது பாவமில்லாமலும் போகும்?என்ன சொல்வேன்? வார்த்தையின்றி நிலவன்பன்!

அருகில் வந்தவள்
அணைத்துக் கொண்டாள்,
முன்னே வந்தவள்
முத்தமிட்டுச் சொன்னாள்
“பிரிந்துவிடுவோமா?”


கைகள் துடிக்க,
இதயம் துடிக்காமல்
இன்னும் ஞாபகங்களில்,
பிரியும் வேளையில்
உன் கண்ணாடிக்குக் கொடுத்த
கடைசி முத்தம்!


காய்ந்துபோன இதழுக்கு
இன்னும் ஈரம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன
கண்ணீர்த் துளிகள்!


இன்னும் ஏதேதோ ஞாபகங்கள்
எதற்குமே வார்த்தையில்லை
எதிலுமே கோர்வையில்லை
ஏனெனில் என்னுடன் நீயில்லை!


சேலையை கசக்குவது இன்னும் அழகு!

அவள் : உனக்கு என்ன கலர் சாரி பிடிக்கும்? நான் அதை நாளைக்கி கட்டிக்கிட்டு வர்றேன்.

அவன் : எனக்கு கலரே இல்லாம சாரி கட்டினாதான் பிடிக்கும்.

அவள் : ச்சீ நாயே! நீ ரொம்ப மோசம்.
அவள் : எனக்கு தம் அடிச்சா பிடிக்காது

அவன் : எனக்கும்தான் பிடிக்காது

அவள் : அப்புறம் ஏன் நீ தம் அடிக்கிற?

அவன் : நான் சொன்னது மத்தவங்க தம் அடிச்சா பிடிக்காது.

தூரத்துத் தெருநாய்கள்!

  இரவிலும் அகோரமாய் ஒலிக்கிறது எங்கோ தூரத்திலிருக்கும் வெறிப்பிடித்த தெருநாய்களின் சப்தம். அந்தச் சப்தம் காதினுள் படும்போதே குலையெல்லாம் நடுங்கும், கைகள் உதறும். சுவற்றோரமாய் ஒண்டிக்கொள்கிறேன் நான்.

  தனக்குப் பசி என்றால் யாரையும் கடிக்கும். தன் குடும்பத்திற்கு பசி என்றால் ஊரையே கொளுத்தும். தன் இச்சைக்குத் தன்னைத்தானே கற்பழித்துக்கொள்ளும். ஊரில் இருந்த எல்லோரையும் கடித்து வெறியேற்றிச் சாகடித்ததோடல்லாமல் அருகில் மிச்சமிருப்போரையும் தேடி அலைகின்றன.

  இந்த நாய்களிடமிருந்து தப்பித்து எப்படியோ ஊர் கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் இன்னும் என் காதுகளில் அதன் கொக்கரிப்புச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரத்தம் சொட்டும் அதன் கோரப்பற்களின் வெறித்தனம் இன்னும் என் கண்களைவிட்டு அகலவில்லை.
தத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு


 • ஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் "சோனியே" "சோனியே" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர்.

 • வரலாறுல இடம் பெறனும்னா பெருசா ஏதாவது செய்யனும். காந்தி, தெரசா, மண்டேலா மாதிரியோ இல்லேன்னா ராஜா, பின்லேடன் மாதிரியோ செய்யனும்

 • எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!

 • தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - "அம்மா"

 • சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின் கருவறைக்குள்!


காதல் கவிதை - காதலர் ஸ்பெஷல்

குறுகுறு பார்வை,
தலைமுடி கோதும் விரல்கள்
என உன் சாயலில்
ஏதேனும்
யாரேனும்
ஞாபகப்படுத்திவிடுகின்றனர்
உன்னை!
உனது வளையல்
உனது கொலுசு
உனது கம்மல்
உனது தாவணி
எனது இதயம்.


தமிழ் எங்கள் உயிர் - தமிழின் சிறப்புகள்


 • மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள். வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி...

 • தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு மொழிகளில் கிடையாது.


 • தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை. வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை – உதாரணம் : வயிற்றிலிருந்து கத்தும் ஹிந்தி எழுத்துக்கள் (ஜ், ஹா, gha, kha) போன்றவை கிடையாது. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும். (ஆனால் இந்த வயிற்றிலிருந்து கத்தும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என குறைகூறும் மூடர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.)