Blogger Widgets

டான்ஸ்பார்களில் செக்ஸ் தொல்லை! - அதிர்ச்சி ரிபோர்ட்

   "பார்கேர்ள் இதான் என் பேரு. என் தோழியின் வார்த்தையில் "செக்ஸி ஃபிகர்". பெரும்பாலானோரின் செல்போன்களில் இந்த பெயரில் என் போன் நம்பர் இருக்கும். நீங்க ஹோட்டல் டான்ஸ்பார்களுக்கு போகும்போதெல்லாம் என்ன நினைப்பீங்க?  3-4 டோக்கன் கொடுத்து, வேண்டிய பாடல்களைப் போட்டு, நிறையா குடிப்பீங்க. என்னைப்பார்த்து ஃபிகர் சூப்பரா இருக்குள்ள? பேசிப் பார்ப்போமான்னு நினைப்பீங்க. ஆனால் நிஜம் வேறு, என் உலகம் வேறு.

    எங்கள் ஹோட்டலில்கூட ஐரோப்பியன் பார் இருக்கு. ஆனா அவுங்களுக்கு சுதந்திரம் இருக்கு. வேண்டிய இடங்களுக்கு போகலாம். ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா பெண்கள் சுதந்திரம் இல்லாமல் வரமாட்டாங்க. அவுங்களே ட்ரூப் வச்சு இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், நேபாள், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் எங்களுக்கே இந்தக்கொடுமைகள் நிகழ்கிறது. வளரும் நாடு என்று எதை சொல்கிறார்கள் என்று இன்னும் புரியவில்லை.

   ஒரு கன்சல்டன்ட் மூலம் பலரை புக் செய்து, விசா கொடுத்து அழைத்து வருவர். அவ்வாறு வந்த நானும் என் தோழிகளும் ஹோட்டலின் டான்ஸ் பாரில் நடனமாடிக் கொண்டிருக்கிறோம்.

   டான்ஸ் ஆடத்தெரியுமா? என்பதெல்லாம் தேவையே இல்லை. டிரெஸ்ஸை குறைச்சுக்கனும், குனிந்து, நிமிர்ந்து செக்ஸியான அசைவுகள் கொடுக்க வேண்டும். இந்த மொக்கையான நடனத்திற்கு யாராவது வளையல், கிரவுன் அல்லது மாலை போடுவாங்க. பின் அவர்களைப் பார்த்தே டான்ஸ் ஆடனும். அவர்களை மீண்டும் மீண்டும் டோக்கன் கொடுக்கத் தூண்டனும். மொத்தத்தில் அவுங்க பர்ஸை காலி பண்ணனும். ஆடும்போது நினைச்சுக்குவேன் "இந்த பக்கிகளெல்லாம் வளைகாப்பின்போது பொண்டாட்டிக்கு இவ்வளவு வளையல் போட்டிருக்குமா?"


  உணவு, போன், இன்டர்நெட், ரூம் ஆகியவற்றை ஹோட்டலே இலவசமாகக் கொடுக்குது. ரூம் அந்த ஹோட்டலிலேயே இருக்கும். யாரும் அந்த ரூமைவிட்டு வெளியே போகக்கூடாது. சரியா சொல்லனும்னா பூட்டிருவாங்க. 2 வருடம் அந்த ஹோட்டலில் பணிபுரிந்தாலும் அந்த ஹோட்டலைவிட்டு வெளியே அனுமதியில்லை. இதை எண்ணும்போதெல்லாம் என் வீட்டு கிளிகள்தான் ஞாபகத்திற்கு வரும். சோறு போடுவோம், பாசமாய் பேசுவோம், கொஞ்சுவோம் ஆனால் றெக்கை ஒடித்து கூண்டிற்குள் வைத்திருப்போம். வேண்டும்போதெல்லாம் வெளியே எடுத்துவிட்டு விளையாடிவிட்டு பின் மீண்டும் கூண்டிற்குள் அடைத்துவிடுவோம்!

  அவ்வாறு வெளியே போக அனுமதித்தால் பார்களுக்கு வர்றவங்க வெளியவே எங்களை பார்த்துக்குவாங்க அப்புறம் டான்ஸ்பார்களுக்கு யாரு வருவா? இன்டர்நெட், போன் உபயோகிச்சுக்கலாம். மாலை வந்ததும் டான்ஸ் ஆடக் கிளம்பிவிட வேண்டும். வாரத்தில் 7 நாட்கள் மட்டும் டான்ஸ் ஆடினால் போதும்!

  டான்ஸ் ஆடும்போது யாராவது என் நம்பர் கேட்டால் உடனே நிர்வாகம் கொடுத்துவிடும். நீங்களும்கூட நம்பர் வாங்கிக்கொள்ளலாம், அவ்வாறு நம்பர் வாங்கி எப்போது கூப்பிட்டாலும் நான் போனில் பேச வேண்டும். அதாவது ஒரு அரைமணி நேரத்திற்கு உங்க காதலி மாதிரி பேச வேண்டும். அடுத்த போன் வந்தா, உடனே அடுத்தவருக்கு காதலிபோல் பேசனும். இப்படியே தூங்கும் நேரம் தவிர, மத்த நேரங்களில் காதலியாய் வேலை செய்ய வேண்டும்.


"டார்லிங் நீ ஆடும்போதேல்லாம்
_______ ஆடுவதை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்".

"இன்னிக்கி நைட் வர்றியா
?" இப்படித்தான் பேச்சுக்கள் பெரும்பாலும் ஆபாசமாக இருக்கும்.

  நீங்கள் என்னை விரும்பினால் ஓர் இரவு கூட்டிக்கொண்டு போக இந்திய மதிப்பில் 40,000INR ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தர வேண்டும். அதுவும் என் விருப்பமிருந்தால் மட்டுமேதான் நான் வருவேன். ஏற்கனவே வெளியுலகைப் பார்க்காமல் ஏங்கிக் கிடக்கும் எனக்கு ஓர் இரவுதானே என்று நானும் ஒத்துக்கொள்வேன்.

  ஆனால் கூட்டிக்கொண்டு போகும் ஒவ்வொருத்தனும் டாக்ஸியில் திரும்ப இன்னொரு ஹோட்டலில் அறையை புக் செய்து அங்கு கொண்டுபோய் ஒரு நாள் மனைவியாக்கிவிடுவான்.

  விபச்சாரம் செய்ய வேண்டும் என்று என்னைக்கூட்டி வந்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன், பார்கேர்ள் என்று கூட்டி வந்ததைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு வருடம் கழித்து இந்தியா போனதும் முதலில் அந்தக் கிளிகளை கூண்டிலிருந்து எடுத்து விடுவிக்கப்போகிறேன். நான்தான் ஏழ்மைக்காகக் கூண்டிலிருக்கிறேன் அவைகள் எதற்காக இருக்க வேண்டும்?"


டிஸ்கி : உண்மை நிலையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. உலகின் முதன்மையானதும், மிகப்பெரியதுமான தொழில் அன்று முதல் இன்றுவரை விபச்சாரம்தான். சில நாடுகளில் அரசு அனுமதியுடனும்பல நாடுகளில் அனுமதி இல்லாமலும் நடந்து வருகிறது.


2 COMMENTS:

  1. கூண்டிகிளி...

    ReplyDelete
  2. இந்த கரகாட்டக் காரிங்கள மாதிரியே இவங்களை நடத்துரானுங்க போலிருக்கு............

    ReplyDelete