உன் முதல் கவிதைஉன் கையால்
எழுதிய
முதல் கவிதை -
என் கன்னத்தில்!


ரா ஒன் – அந்தன சிந்தனயக்கிட்டாங்களே!

     170 கோடியைக் கொடுத்து வீடியோ கேம் விளாண்ட்டு வான்னா எப்படியிருக்கும்??? அப்படியிருக்கிறது படம். இனி விஜயை கிண்டல் செய்வதை விட்டுவிடலாம், அவரைவிட மோசமாக எடுப்பவர்கள் இருக்கிறார்கள், உதாரணம் – ரா ஒன். ஆழ்வார் படத்திற்கு பிறகு நான் பார்த்த மோசமான படம்.


மோசமான விமர்சனம் வந்தாலும் வாங்கிய டிக்கெட்டை என்னசெய்வதென்ற காரணத்திற்காக படம் பார்க்க சென்றேன். (Lamcy Plaza - Hindi versoin)

காட்சிகள்:

  • நீங்கள் எந்திரன், TRANSFORMERS, SPIDER MAN படங்களை பார்த்துவிட்டிருந்தால் இந்த படத்தை பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொன்றிலிருந்தும் 10 நிமிடங்களை சுட்டு ஒரு படமாக காட்டி இருக்கிறார்கள் – அவ்ளுதான்!
  • எந்திரனிலிருந்து ரயில் சண்டை, ரயில்மேல் ஓடுவது, இரும்புகளை இழுப்பது (இந்த கட்சியில்தான் நம்ம ரஜினி சிட்டியா வர்றார் – இந்த படத்தில் ஏன் வர்றார்னு அவருக்கே தெரியல), சுட்டிருக்கிறார்கள். (பாபாவில் ரஜினி செய்யும் வாலிபால் சண்டையையும் சுட்டிருக்கிறார்கள்.)
  • TRANSFORMERS படத்திலிருந்து வில்லன், ஹீரோ உடைகளின் நிறங்கள், சிறுசிறு பகுதிகள் ஒன்றாய் சேர்ந்து ரோபோவாக மாறுவது, கையில் பிஸ்டல் முளைப்பது ஆகியவற்றை சுட்டிருக்கிறார்கள்.
  • SPIDER MAN படத்திலிருந்து ஓடும் ரயிலை நிறுத்தும் காட்சியை சுட்டிருக்கிறார்கள்.


1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச – GOOGLE VOICE


இந்தியாவிற்கு பேச 1 ரூபாய், அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50 பைசா மட்டுமே.

எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.

ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம். 

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)

மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.
தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)ரணம்
கண்கள்

செய்துகொண்ட

கலகத்தில்

ரணப்பட்டுப் போனது


எனது இதயம்...


தமிழ்ச் செம்மொழி மாநாடு – சில உண்மைகள்

      திருப்பூரில் தங்கியிருந்த சமயம் அலுவலக நண்பி ஒருவர் டெல்லியிலிருந்து வந்திருந்தார். அவர் சுத்த ஹிந்தியர், தமிழ் தெரியாது. பணிகள் முடிந்து அவரை வழியனுப்ப கோவை ஏர்போர்ட்டுக்குச் செல்லும்போது வழி எங்கிலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான போஸ்டர்கள் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் அவர் கேட்டார், “என்ன இது? ஏதேனும் கோவில் திருவிழாவா?”

“இல்லை, தமிழ் மொழிக்கான ஒரு மாநாடு” என்றேன்

“இதனால் என்ன பயன்?”

“தமிழ் மொழி வளர இலக்கியம், கணினியில் அதன் பயனை மேம்படுத்த உதவிடும். தமிழ் மன்னர்களின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்” என்றேன்.

அவர் சிரித்துவிட்டுச் சொன்னார், “தோராயமாக இதற்கு எவ்வளவு செலவாகும்??

“ஒரு 1500 கோடி செலவாகும்!”

“என்னது 1500 கோடியா??? இது மாநாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட எல்லோருடைய சொந்த பணம்தானே???”

“இல்லையில்லை, இது தமிழ்நாடு அரசினுடைய பணம்”பிம்பிலிக்கா பிளாப்பி!


அனைத்துக் காதலர்களுக்கும் நன்றி!!!

பதிவை ஆரம்பித்த ஆகஸ்ட் 30-லிருந்து வெறும் 34 பதிவுகள், 55 நாட்களில் 10,000 வருகையைக் கடக்கப்போகிறது நம் நிலாப்பெண்ணுக்கு. இதைக் கொண்டாடும் வகையில் இதற்கான பரிசு பற்றிய விபரம் கீழே!

பதிவைப் பார்த்தவர்கள்: - 
ஆயிரம்
இரண்டாயிரம்
நாலாயிரம்
எட்டாயிரம்
பிம்பிலிக்கா பிளாப்பி.......

இந்த 10,000 வருகைகளிலிருந்து வாசகர்கள் பற்றி நாம் தெரிந்து கொண்டது:  

1.       சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு  பக்கியும்  வருவதில்லை , மற்ற  5 வார  நாட்களில்  மட்டுமே வருகிறார்கள்!ஒரு ஓட்டில் தோற்றோம் – காங்கிரஸ்


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் டெபாசிட் காலி!

தனிமை

துன்பமில்லை
துக்கமில்லை
தூக்கமும் இல்லை
ஏனெனில்
நானே இங்கில்லை!


பௌர்ணமியுமில்லை
அமாவசையுமில்லை
வளர்பிறையுமில்லை
தேய்பிறையுமில்லை
ஏனெனில்
என் நிலவே இங்கில்லை!காந்திஜியின் நெத்தியடி!!!


ஒருமுறை காந்திஜி அவர்கள் கப்பலில் பயணம் செய்தார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த வெள்ளையர் ஒருவர் பைப் வைத்து புகைத்துக்கொண்டிருந்தார். அந்தப் புகை காந்திஜியின் முகத்திலேயே வந்து மோதியது! அந்த வெள்ளையரும் அமர்திருப்பது காந்திஜி என்று தெரிந்தும் அவரை வம்புக்கு இழுக்கவேண்டுமென்றே புகையை அவரின் முகத்தில் ஊதினார்.

“நண்பரே புகை என்மீது படுகிறது, சற்று தள்ளிச்சென்று புகை பிடியுங்கள்” என்று அமைதியாகக் கூறினார் காந்திஜி.

“இது என் வாய், பிடிப்பது என்னுடைய சிகரெட், நான் காசு கொடுத்து வாங்கியது இதனால் உனக்கென்ன???” என்று அதட்டினார் வெள்ளையர்,

“அப்போ புகையும் உங்களுடையதுதானே?” என்றார் காந்திஜி.

“ஆமாம்!”

“அப்போ அதையும் நீங்களே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே! என்மீது ஏன் ஊதுகிறீர்கள்??” என்றார் காந்திஜி.

எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிய வெள்ளையர் பயணம் முடியும் வரையில் காந்திஜியின் கண்களில் படவே இல்லை!!!


உன் அசைவுகள்!உன் ஒவ்வொரு அசைவும்

கவிதைகளாய் எழுதப்படுகிறது - என்னுள்.                              - நிலவன்பன்.ஹிந்தியர்கள்! - தலையங்கம்


          சமீபத்தில் என்னுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு. தமிழனுக்கு ஹிந்தி என்பது திணித்தாலும் வராது என்பது ஊர் அறிந்த விஷயம். இதற்கான காரணங்கள் சில தெய்வங்களையே சாரும். ஆனால் அந்த தெய்வங்களின் வாரிசு, பேரன், பேத்தி எல்லோரும் எங்கே என்ன படிக்கிறார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும். இவைகள் முடிந்து போன விஷயங்கள். எனவே நடந்த நிகழ்வுக்கு வருவோம்.

    துபையில் இந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் இந்தியர்கள் (வேற பிரச்சினையே வேண்டாமே!). காலையில் வழக்கம்போல் பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றேன். உள்ளே நுழைந்ததும் எதிரே வந்த நண்பர் (மராத்தியர்), “கேஷா (எப்படி இருக்கிறீர்கள்) என ஹிந்தியில் கேட்டார்.
குட் என ஆங்கிலத்தில் பதிலளித்தேன். (நமக்கு பேசும்போது அது ஹிந்தி என்று தெரியும், அவ்வளவுதான்)

நான் ஹிந்தியில்தானே கேட்டேன், நீயும் ஹிந்தியில்தானே பதில் சொல்லவேண்டும் என்றார்.

பதிலேதும் சொல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?? என தமிழில் கேட்டேன்.
புரியவில்லை என்றார்.

நான் தமிழில்தானே கேட்டேன், நீயும் தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்??? மொழி என்பது மற்றவர் புரிந்துகொள்ள மட்டுமே தவிர நீயோ நானோ பேசுவதற்கல்ல! நாம் எந்த மொழியில் பேசினாலும் மற்றவர் புரிந்துகொள்ளவில்லையனால் அதனால் பிரயோஜனமில்லை என்றேன்.


தேசிய மொழியான ஹிந்தி தெரியாத நீயெல்லாம் ஒரு இந்தியானா? என்றார்.காதலியின் அதிர்ஷ்டம் – நகைச்சுவை


காலையில் அவரது நடைபயிற்சியின்போது திடீரென எதிரே வந்த ஒரு பைக் அவர்மீது மோதியது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் இரண்டு நாட்கள் கோமாவில் இருக்கும் நிலை ஏற்பட்டது.  கண்களை திறந்து பார்த்தபோது, அவரது காதலி தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். 
அவர் “பல்கலைக்கழகத்தில் என் ஆய்வுகள் என போராடிக்கொண்டு இருந்த போது,  நான் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தேன்  (கண்களில் கண்ணீர்) அப்போது நீ என்னுடன் இருந்து என் முயற்சியை ஊக்குவித்தாய்"

தொடர்ந்து அவர் "நான் என்னுடைய வேலைக்கான நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தபோது,  நீ என்னுடன் இருந்து மற்ற வேலைகளுக்கான விளம்பரங்கள் வெட்டி,  அவைகளுக்கு விண்ணப்பிக்க உதவி செய்தாய்"
தன் காதலியின் கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். பின் "நான் ஒரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கி இறுதியாக ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. அப்போது நடந்த ஒரு சிறிய தவறால் அது கிடைக்காமல் போனது அப்போதும்கூட நீ எனக்குத் துணையாக இருந்தாய்."

காதலியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. மேலும் அவர் “இறுதியாக எனது நிறுவனம் மூடப்பட்ட பின் எனக்கு ஒரு வேலை கிடைத்தது ஆனால் அங்கு எனது கடின உழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நான் இன்னும் அங்கு சேர்ந்த அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன், அதேபோல் நீயும் என்னுடன் இருக்கிறாய்" 

அவள் அவனை கவனிக்கக்கூட சக்தியில்லாமல் கீழே பார்த்துக் கொண்டே கூறினாள், "நீங்கள் கூறுவதும் சரிதான், உண்மையில் நீங்கள் சொல்வது போல நமக்குள் ஏதோ இருக்கிறது" என்று புலம்பினாள்.

இறுதியாக அவர் சொன்னார்,

"
உன்னுடைய துரதிர்ஷ்டம்தான் என்னைத் துரத்துகிறது என நான் நினைக்கிறேன்.!


வாகை சூடவா : வாழ்நாளில் இழக்கக்கூடாத ஒரு படம் – திரை விமர்சனம்
      இனியா: முதலில் வீட்டில் சொல்லி சுத்திப்போடுங்கள்! என்ன நடிப்பு? வெட்கம், சிரிப்பு, அழுகை! “தைலத் தைலக் கிளி என அவர் ஆடுவதை ஆயிரம் முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்! படம் முழுவதும் அவர்மீதிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.

விமல்: இப்படியும் விமல் நடிப்பாரா?? ஒரு வெள்ளந்தி ஆசிரியராக வாழ்ந்திருக்கிறார்.

இயக்குனர்: 1966-க்கான கதையை எடுப்பது என்பதே சிரமம். ஆரம்பம் முதல் ஒவ்வொரு காட்சியியும் அழகாய் மிளிர்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தைக் கொடுத்ததற்காக நன்றிகள்.

நடிப்பு : விமல், இனியா, பாக்யராஜ் மற்றும் பல சிறுவர்கள்.
இயக்கம் : சற்குணம்
இசை : ஜிப்ரான்

1966-இல் நடக்கும் கதை. முதல் காட்சியிலேயே தியேட்டரில் எம்ஜிஆரை அடிக்கும் நம்பியார் மீது கோவப்பட்டு ஒருவர் துப்பாக்கியால் திரையச்சுட்டுவிடும் காட்சியில் தொடங்குகிறது படம்.
அரசாங்க ஆசிரியர் வேலை மகனுக்காவது கிடைக்க வேண்டும் என விருப்பப்படும் அப்பா பாக்யராஜின் ஆசைக்காக 6 மாதங்கள் தனியார் தொண்டு நிறுவனம் தரும் சான்றிதழுக்காக ஒரு கிராமத்திற்குச் செல்கிறார் விமல்.


மழை


இடிகேமரா மின்னியபின்
கூறும்,
ஸ்மைல் ப்ளீஸ்!


வெண்மேகங்கள்

வானத்தின் மடியில்
தவழும்
காதலர்கள்...
மழை

ஒட்டப்பந்தயத்தில் தோற்ற
மேகங்களின்
கண்ணீர்...மனைவியின் சந்தேக புத்தி!


     ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள். இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

   திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லைஎன்று சொல்லி குளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச் சென்றுவிட்டார்..

   மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
.
   உடனே மனைவி கோபத்துடன்நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள்  எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.

   “இல்லை மேடம் என்றான் தோட்டக்காரன்!


காதலின் மொழி! - சுட்டவை 40என்னிடம் இரண்டு உயிர்கள் இருந்தால் -ஒன்றை 
உனக்குத் தருவேன்
இன்னொன்றை உனக்காகத் தருவேன்.

                                         -யாரோ!
(படித்ததில் பிடித்தது)


நீ

கனவிலும் நீ
நனவிலும் நீ
நினைவிலும் நீ -இதைக்
கூறமாட்டாயா நீ!