தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை


  • தன் பாவத்தை தானே கழுவவேண்டும் என்பதற்கு உதாரணம் கழிவறைகளில் போடப்படும் சிகரெட் துண்டுகள்!

  • கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!

  • ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")

  • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் - ஒவ்வொரு முறையும்!!

  • இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.


திருட்டுப் பூனை - குழந்தைகள் கவிதை, சிரிப்பு மழலைப் பாடல்

வீட்டில் நுழைந்த பூனைக்கு
 வாசம் ஒன்று வீசியது
ஓட்டத்தில் ஓடிச் சென்றுதான்
 சொம்பினுள் விட்டது தலையை!

களைப்பே எதுவும் இல்லாமல்
 குடித்துக் கொண்டது பசும்பாலை
நுழைத்துவிட்ட சொம்பினுள் இருந்து
 எடுக்க முடியவில்லை தன்தலையை!

அறிவே இன்றி செய்த செயலால்
 அபாயம் வந்தது என்றெண்ணி
யோசனை செய்யும் நேரத்தில்
 காலடி ஓசை கேட்டதுவே!


தமிழ் – மொபைலில் தமிழில் படிக்க, டைப் செய்ய! VIEW & TYPE IN TAMIL ON ANY MOBILE

  உங்கள் மொபைலில் தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியவில்லையா? OPERA Browser டவுன்லோட் செய்யவும்! எல்லா மொபைல்களுக்கும் தனித்தனி வெர்சன்களில் கிடைக்கிறது.


OPERA MOBILE BROWSER - ஒபேரா மொபைல் உலாவியில் தமிழ்!

  ADDRES BAR-ல் config: என டைப் செய்து வரும் பக்கத்தின் இறுதியில் "Use bitmap fonts for complex scripts" என்பதன் அடையாளத்தை ஐ "YES" என்பதை டிக் செய்து சேமித்துக்கொள்ளவும்!

இனி தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியும்!

குறிப்பு: இம்முறையில் தமிழ் எழுத்துக்கள் படங்களாக காட்டப்படும் அவ்வளவுதான்! 

ஏ ஜோக்ஸ் - தத்துவம் 2  • குனியும்போதெல்லாம் கைகளை வைத்து மறைத்துக்கொள்கிறாய்! அப்போதுதான் தோன்றுகிறது அங்கெல்லாம் பார்க்க வேண்டுமென்று!

  • மழலை இருந்தால் பாரம் குறையுமாம்! - உடனே நான் எங்கு போவேன்? யாராச்சும் உதவி செய்ய முடியுமா??

  • பிகரை சைட் அடிச்சு ஹீரோ ஆகலாம்னா பக்கத்தில இருக்கிற ஆன்ட்டி ஒரு மாதிரியா லுக் விடுது. ஆன்ட்டி ஹீரோ ஆக நான் ரெடியில்லை. உங்களில் யாராவது?

  • காயை ஒரே நாளில்கூட கனியாக்கலாம்! கனியை என்ன செய்தாலும் காயாக்க முடியாது! - சொன்னால் அடிக்க வருகிறாள் தோழி!

  • பப்ளிக் பிகர் Public Figure என்பதற்காக எல்லோரும் உரிமை கொண்டாட முடியாது!


ட்ராஃபிக் போலீஸ்ல மாட்டு – மவனே சங்குதேன்!

  எனக்கும் ட்ராஃபிக் போலீஸுக்கும் உண்டான பந்தம் பூர்வ ஜென்ம பந்தம் போல! ரோட்ல அவனவன் டிரைவிங் லைசென்ஸ் இல்லாம திருட்டுவண்டிலயே போய்கிட்டுருப்பான், ஆனா அவனையெல்லாம் விட்டுட்டு போலீஸ் நம்மை பிடித்து வண்டிக்கி இன்சூரன்ஸ் இருக்கானு கடுப்பேத்திக்கிட்டுப்பார்!

  அரசாங்கம் என்னென்ன சட்டம் கொண்டுவருதோ அதற்கெல்லாம் முதலில் ஃபைன் கட்டுவது நானாகத்தானிருப்பேன்! அப்படி அரசாங்கத்தையே வாழ வைத்துக்கொண்டிருந்தேன்! தமிழ்நாடு அரசு மாதச் சம்பளம் கொடுக்குதோ இல்லையோ நான் கரெக்டா ஒரு மாதத்தில் ஐநூராவது லஞ்சம் கொடுத்துவிடுவேன்!

  ஏன்னா காவல்துறை நம்ம நண்பன்! நண்பனுக்கு நாம கொடுக்காம வேற யார் கொடுப்பா? அப்படீன்னு சொல்லி மனசை தேற்றிக்கொள்வேன்! (வேறென்ன பண்ண முடியும்?)

  இது பெங்களூரிலும் தொடர்ந்தது! ஆனா பெங்களூர் போலீஸ் ரொம்ப நல்லவங்க! ஒரு தடவை மாட்டினா ரூ.50 கொடுத்தா போதும்! நம்ம ஊர் போலீஸ் மட்டும்தான் லஞ்சம் என்றால் ரொம்ப போலீஸ் ஆகிறார்கள் குறைந்தபட்சம் ஆயிரமாவது அழ வேண்டும்!

  2009ல் ஒருநாள் அதிஅதிகாலை ஆறுமணி. திருப்பூர் சாலைல இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். வழக்கம்போல மாமா வழிமறித்தார்!


சிரிப்பு கவிதைகள்! – செல்லம் அவன் அவள்


செல்லம்

 என்வீட்டு மியாவும்தான்,
 குறைக்கும் நாயும்தான்,
 ஏன்? நீயும்தான்.
அவன் – அவள்

அவன்
  என்வீட்டுச் சேவல்
  கூவுகிறது
  “நந்திதா வா”

அவள்
  என்வீட்டு நாய்கூடத்தான்
  குறைக்கிறது
  “லவ்” “லவ்”

காதல்

ஒரு நாயைக்
காதலிக்கிறேன்
வாலாட்டுகிறது!


ஹாட் பெல்லி டான்ஸ் உடன் ஒரு DESERT SAFARI

  துபாய்க்கு நீங்கள் வந்தால் ஒருமுறையேனும் சென்றுவர வேண்டியது – துபாய் பாலைவனப் பயணம்! என்ன புரியலையா? அதான் DESERT SAFARI.
  ஏதேனும் ஒரு டிராவல் ஏஜன்ட்டிடம் புக் செய்துவிட்டால் மதியம் 2 மணிக்கு வீட்டிலேயே வந்து பிக்-அப் செய்து கொள்வார்கள் அதேபோல் பயணம் முடிந்தவுடன் 10 மணிக்கு வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுவர்.

டெசர்ட் சஃபாரி:

  பாலைவனத்திற்குள் LAND CRUISER வாகனம் நுழைந்த உடனே வித்தியாசம் தெரியும்,. ஒவ்வொரு இடத்திலும் சரிந்து சரிந்து போகும்போது “காசு கொடுத்து கைலாசம் போகனுமா?” அப்படின்னு தோணும். செத்தாண்டா சேகருன்னு பார்த்தா அவ்வளவு லாகவமாக வண்டியை ஓட்டுவார் டிரைவர். 


ஜோக்ஸ் - என் மாமன் என் உரிமை! நகைச்சுவை வசனம் 2

வாசகர்கள் காதல் காமெடி வசனங்கள் 1-ற்கு கொடுத்த பேராதரவைத் தொடர்ந்து அடுத்த பதிவை வெளியிடுகிறோம். (எத்தனை பேர் அப்டின்னு மொக்கை போடக்கூடாது)

காதல் வசனங்கள் 4:

அவன் : குட்டி... உன் அப்பன் எங்கடி? பார்த்து ரொம்ப நாளாச்சு?

அவள் : ஏய்! என்ன பத்தி என்ன வேண்ணாலும் சொல்லு! எங்கப்பாவ பத்தி எதுக்குடா அவன் இவன்னு சொல்லுற?

அவன் : ம்ம்ம்ம் சரி! என் மாமன் ஒரு சரியான லூசு! குடிகாரன்!

அவள் : ஏய் ஏண்டா திரும்பவும் எங்கப்பாவ வம்புக்கு இழுக்கிற?

அவன் : இங்க பார் உங்கப்பாவ பத்தி பேசுனா என்னை என்னன்னு கேளு! நான் பேசுறது என் மாமனை பத்தி! என் மாமன் நான் பேசுவேன்! அதைக் கேட்க நீ யார்?

அவள் : ஆனா அது எங்கப்பாதானே?

அவன் : அதெல்லாம் எனக்கு தெரியாது. என் மாமன் என் உரிமை! என் மாமன் குடிச்சிட்டு குடிச்சிட்டு போதைன்னு ஒரு பேதையை பெத்துவிட்டிருக்கான் பார்த்தவுடனே எனக்கு கிக்கு ஏறிடுது!

அவள் : இப்ப நீ என்னை புகழ்றியா இல்லை எங்கப்பாவ குடிகாரன்னு திட்டுறியா?

அவன் : மனசுக்குள் (ஆஹா! புரிஞ்சிடிச்சு போலிருக்கு டாபிக்க மாத்திடுடா கோபாலு!)உன்னில் உறைந்துபோனேன் நான்! - காதல் மொழி 2


தட்டுப்பட்டது நானெனில் அச்சம் தவீர்; பத்திரமாய் இருக்கு உன் மனது என் உயிர்கூட்டிற்குள்!

அச்சம் என்றெல்லாம் ஒன்றுமில்லை; மிச்சமாய் என்னுள் ஏதும் இல்லை; உன்னைத்தவிர!நிலாப்பெண்ணின் மொத்தமும் நானானேன்! எந்தன் சித்தம் முழுதும் நீயானாய்!


எப்படி என்னுள் நுழைந்தாயோ அப்படியே என்னுள் நிறைந்தாய்! வார்த்தைக்குள் என் அன்பு அடங்கிவிடும் எனில் வானம் மூன்றெழுத்தில் முடிந்து விடும்.


உன் அன்பு கண்டு உறைந்துபோய் நிற்கிறேன் - வார்த்தைகளின்றி!வார்த்தையில் என்ன இருக்குஉன் பார்வையில் மொத்தம் அன்பும் வழிந்திடும் போது!


உன்னில் உறைந்துபோனேன் நான்! பிறகு வார்த்தையெங்கே? பார்வையெங்கே?இனி வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?

  போன ஜென்மத்தில அதாவது கடந்த 2009ம் ஆண்டிலே நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் (சிதம்பரம் கோஷ்டி தலைவர்) சிவகங்கை தொகுதிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார்.

  முதலில் ராஜகண்ணப்பன் வெற்றிபெற்றதா அறிவிச்சிட்டாங்க! சந்தோசத்துல பட்டாசெல்லாம் வெடிச்சு முடிஞ்ச உடனே பார்த்தா, “3354 வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் வெற்றி பெற்றார்” அப்படின்னு திரும்ப ஒரு அறிவிப்பு. (அதாகப்பட்டது இந்த அறிவிப்பு, காங்கிரஸ் மத்தியில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது என்ற செய்தி கிடைத்தவுடனே வெளியிட்டுட்டாங்க)


சூப்பர் ஸ்டார் விஜய் – ரஜினிக்கு வந்த சோதனை

 தலைவர், இளைய தளபதி, டாக்டர் ஆகியவற்றிற்கு சொந்தக்கார விஜய் அவர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்து மன்னிக்கவும் ஆடி வெளிவந்த ஹிந்திப்படம் ரவுடி ரத்தோர். இது தமிழ் சிறுத்தை படத்தின் ரீமேக். இந்த ரவுடி ரத்தோர் படத்தின் இயக்குனர் பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்கிணங்க பாடலுக்கு அக்சய் குமார் மற்றும் பிரபுதேவாவுடன் அவர் ஆட வரும்போது அக்சய் குமார் பிரபுதேவாவிடம் சொல்கிறார் “பிரபு, சூப்பர் ஸ்டார் விஜய்”

 ஒரு குரூப்பே தான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இப்போதைய சூப்பர் ஸ்டாரே விஜய்தான் என்பது நமக்கெல்லாம் தெரியாமல் போய்விட்டது. போங்கப்பா போய் பேனர் ஓட்டுற வேலைய பாருங்கப்பா “சூப்பர் ஸ்டார் விஜய்”


ஷிஷா புகைபிடித்தல் – ஹோக்கா வரமா? சாபமா? HOOKAH SMOKING

 அக்பர் காலத்தில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முறைதான் ஷிஷா அல்லது ஹோக்கா புகைபிடித்தல். இது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகம் காணப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பரவி, அரேபியா முழுவதும் அவர்களின் கலாச்சாரத்துடன் முழுமையாய் கலந்துவிட்டது. 


 அரேபியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் ஷிஷா ஸ்மோக்கிங் என்பது சாதாரணமாய்க் காணக்கூடிய ஒன்று. மேலும் சிரியா, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் ஷிஷா புகைபிடித்தல் பரவியுள்ளது. இன்று ஷிஷா புகைபிடித்தலுக்கான கடைகள் ஐரோப்பா, அமேரிக்கா, அரேபியா என உலகம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.


காதலை உதறுவதா? உருகுவதா? - காதல் மொழி!எதையோ தேடுகையில் தட்டுப்பட்டது தொலைந்து போனதாய் நான் நினைத்த உனது புகைப்படம்!

அப்போ திருப்பி கொடுத்திடுஉன்னைத் திருப்பி எடுத்துச் சென்று விட்டாய். புகைப்படமாவது இருந்து விட்டுப் போகட்டுமே இவளோடு :-)

விட்டுப்போனதை எதற்கு விடாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறாய்? விட்டுவிடு!உன்னோடு உன் நினைவுகளையும் நீ எடுத்துச் சென்றிருக்கலாம். என்னைப் பிடித்துக் கொண்டு 
தொடர்கின்றது நான் உதறியபோதும் :-)

நீ பிடித்துக்கொண்டே உதறினால் எதுவும் விழாது! எப்போதும் உன்னுடனேதாம்!நான் உதறுகையில் என்னை உறுதியாய் பிடித்துக் கொள்கின்றது உனது நினைவுகள்.

உதறுகையில் குழப்பம் போலும் - உதறுவதா? உருகுவதா?


முதல் இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை!

சில சம்பவங்களை எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு, தானா வரும்! - அதில் ஒன்றுதான் இது! 

முதலிரவு, படுக்கையறை அப்படின்னா என்னான்னு கூட தெரியாத வயசு. சரியா 9th std என நினைக்கிறேன், அப்போல்லாம் அம்புட்டு நல்லவனா இருந்தேன்! கிளாஸ்ல பர்ஸ்ட் வந்ததால கிளாஸ்ல அட்டன்டன்ஸ் எடுப்பதிலிருந்து எக்ஸாம் பேப்பர் திருத்துவதுவரை எல்லாம் செய்துகொண்டிருந்தேன்! இதெல்லாம் செஞ்சாத்தான் ரொம்ப நல்லவன்!

பெண்கள் என்றால் அப்பவே ஆகாது. பொண்ணுங்க யாருக்கும் மார்க் போட மாட்டோம்! அந்தப்பிழை,  இந்தப்பிழை,  எழுத்துப்பிழை அப்படின்னு போடுற மார்க்ல ஒரு பத்து மார்க்னாச்சும் குறைச்சாதான் தூக்கம் வரும். (அப்புறம் எப்படி நாம பர்ஸ்ட் வர்றது?)

அப்போல்லாம் கட்டுரை என்றால் போர்ட்டில்தான்(Board) எழுதி போடுவம்! (இப்பவும் அப்பிடிதான் நடக்குதுன்னு நினைக்கிறேன்)

நான் எழுதிப்போட்டுக்கொண்டிருந்த தமிழ் பாடத்திற்கு உண்டான கட்டுரையின் தலைப்பு - அறிவியலின் வளர்ச்சி! எல்லாமே எழுதியாச்சு, முடிவுரை வந்தாச்சு. முடிவுரை இதுதான் - இவ்வாறு காலையில் எழுவது முதல், இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து வேலைகளையும் இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!