சில சம்பவங்களை எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு, தானா வரும்! - அதில்
ஒன்றுதான் இது!
முதலிரவு, படுக்கையறை அப்படின்னா என்னான்னு கூட தெரியாத வயசு. சரியா 9th std என நினைக்கிறேன், அப்போல்லாம் அம்புட்டு நல்லவனா இருந்தேன்!
கிளாஸ்ல பர்ஸ்ட் வந்ததால கிளாஸ்ல அட்டன்டன்ஸ் எடுப்பதிலிருந்து எக்ஸாம் பேப்பர் திருத்துவதுவரை
எல்லாம் செய்துகொண்டிருந்தேன்! இதெல்லாம் செஞ்சாத்தான் ரொம்ப நல்லவன்!
பெண்கள் என்றால் அப்பவே ஆகாது. பொண்ணுங்க யாருக்கும் மார்க்
போட மாட்டோம்! அந்தப்பிழை, இந்தப்பிழை, எழுத்துப்பிழை அப்படின்னு போடுற மார்க்ல ஒரு பத்து
மார்க்னாச்சும் குறைச்சாதான் தூக்கம் வரும். (அப்புறம் எப்படி நாம பர்ஸ்ட் வர்றது?)
அப்போல்லாம் கட்டுரை என்றால் போர்ட்டில்தான்(Board) எழுதி போடுவம்! (இப்பவும்
அப்பிடிதான் நடக்குதுன்னு நினைக்கிறேன்)
நான் எழுதிப்போட்டுக்கொண்டிருந்த தமிழ் பாடத்திற்கு உண்டான கட்டுரையின்
தலைப்பு - அறிவியலின் வளர்ச்சி! எல்லாமே எழுதியாச்சு, முடிவுரை வந்தாச்சு.
முடிவுரை இதுதான் - இவ்வாறு காலையில் எழுவது முதல், இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து
வேலைகளையும் இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!
ஆனால் போர்டில் இடம் இல்லாததால
நான் எழுதியது இப்படியாகிவிட்டது! (கமாவை வேறு விட்டுவிட்டேன்!)
முடிவுரை : அறிவியலின் வளர்ச்சியானது இவ்வாறு காலையில் எழுவது
முதல் இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து வேலைகளையும் இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!
முடிவுரை : அறிவியலின் வளர்ச்சியானது இவ்வாறு காலையில் எழுவது
முதல் இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து வேலைகளையும் இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!
நண்பனொருவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவனிடம்போய் என்ன? எனக்கேட்டேன்!
“டேய் என்னடா எழுதி போட்டுருக்க?” சிரிப்பை நிறுத்தாமல்!
நானும் படித்துவிட்டு "நல்லாத்தானே இருக்கு? ஏதாச்சும் ஸ்பெல்லிங்
மிஸ்டேக் இருக்கா?"
“இல்லை. கடைசி வரியை மட்டும்
படி”
முதல் இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து வேலைகளையும்
இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!
அவ்வ்வ்! உடனே ஓடிப்போய் மொத்த போர்டையும் அழித்துவிட்டேன்!
"நாங்கெல்லாம் இன்னும் எழுதவே இல்லை"
எல்லோரும் உரத்த குரலில்.
"எழுதாதவர்கள் பக்கத்தில் பார்த்து எழுதிக்கொள்ளவும்!"
பெருமூச்சுடன் பதிலளித்தேன்!
(சமாளிக்கறதுல நாங்கெல்லாம் அப்பவே கோல்ட் மெடல்)
டிஸ்கி 1 : இதுநாள்வரை இந்த நிகழ்வு எழுதிக்கொண்டிருந்த 80 பேரில் யாருக்கும்
தெரியாது (நண்பனைத் தவிர) - அம்புட்டு பல்ப்பா இருக்காங்க!
டிஸ்கி 2 : தமிழில் ஒரு கமா போடாதது எவ்வளவு பெரிய காம அர்த்தமாய் மாறிவிடுகிறது!
Tweet |
//இவ்வாறு காலையில் எழுவது முதல், இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை அனைத்து வேலைகளையும் இப்போது அறிவியல் கருவிகளே செய்துவிடுகின்றன!//
ReplyDeleteகமா போட்டாலும், ரொம்ப குழப்பமான வாக்கியமாக இருக்கிறதே! :)
தமிழ் கட்டுரைனா அப்பிடித்தான் ஒரே குயப்பம்!
Deleteஇப்பல்லாம் சரியான அர்த்தத்தில் எழுதினாலும் இரண்டாம் அர்த்தம் எடுத்து விடுகிறார்கள்.சுவராஸ்யமான இடுகை.
ReplyDeleteகுமுதம் மாதிரி தலைப்பு குடுத்து, உள்ளே அம்புலிமாமா கதை சொல்லியிருகீங்க? கமா போட்டு படிச்சாலும் வில்லங்கமாதான் இருக்கு..
ReplyDelete//பெண்கள் என்றால் அப்பவே ஆகாது.// அப்டியா?? அவரா நீங்க?
இதற்கு கமெண்ட் கிடையாது
Deleteஅப்போ கோல்ட் மெடல திருப்பி குடுத்துடுங்க..
Deleteயாரச்சுக்கும் வேணும்னா அப்படியே கொடுத்திடுறேன்! எதற்காக திருப்பி கொடுக்கணும்?
Deleteஇவரு பெரிய உத்தமரு ,
ReplyDeleteகட்டுரை எழுதத் தெரியாம எழுதிட்டு சமாளிப்பு .
அப்ப எல்லாம் அந்தளவுக்கு யாருக்குமே அறிவில்ல பாரு
என்னை ராமன் என்றெல்லாம் புகழ வேண்டாம், அது உண்மையாய் இருந்தாலும்கூட நீ வெளிப்படையா புகழக்கூடாது :)
Deleteசெம இன்ட்ரஸ்டிங் மேட்டர்...
ReplyDeleteஒரு கமா மேட்டரு, காம மேட்டராகிடுச்சே.
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவை இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் பார்த்து கருத்திடவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/
:)
Deleteஎன்ன இருந்தாலும் ஒரு நிமிசம் சிரிக்க வைச்சுட்டீங்க!!
ReplyDelete//அந்தப்பிழை, இந்தப்பிழை, எழுத்துப்பிழை அப்படின்னு போடுற மார்க்ல ஒரு பத்து மார்க்னாச்சும் குறைச்சாதான் தூக்கம் வரும். (அப்புறம் எப்படி நாம பர்ஸ்ட் வர்றது?)//
உங்க பேப்பரையும் நீங்களே திருத்திக்கிட்டீங்களா? அவ்வ்...
//முதலிரவு, படுக்கையறை அப்படின்னா என்னான்னு கூட தெரியாத வயசு.//
அப்புறம் எப்படிங்கண்ணா கடைசியில மட்டும் அர்த்தம் தெரிந்தது?
கடைசி வரைக்கும் தெரியாம போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?
Deleteunga paperha thiruthina teacher ellam onnum solla illa
ReplyDeleteகமா இல்லாமல் இருந்ததால் தமிழ் கால் மாற்றி போடும்படியாகி விட்டது "கமா" என்பது "காம" அர்த்தத்தை கொடுத்துவிட்டது
ReplyDelete